பாஜகவின் 48வயதான ஹிமாந்தா பிஸ்வாஷர்மா இன்று அஸ்ஸாம் முதல்வராக பதவி ஏற்கிறார்.யார் இவர்.2006,2011ல் தருண் கோகோயின் காங்கிரஸ் அமைச்சவையில் காபினட் அமைச்சராக இருந்தார்.அவருக்கும் முதல்வர் தருண் கோகோய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்க்க ராகுல்காந்தி முதல்வர் கோகோய், ஹிமாந்தா,
அன்றைய அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் அஞசன்தத்தா, மத்திய பொறுப்பாளர் ஜோஷி முதலியோரை தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். அங்கு நடந்ததை ஹிமாந்தா சேகர் குப்தாவின் "Walk the talk" நிகழ்ச்சியில் விவரிக்கிறார். "ராகுல்காந்தி கூட்டம் நடத்தவில்லை. He was busy with the dog,a small dog.
நாயின்மீது
உங்களுக்கு பிரியமிருக்கலாம். அதை முதல்வரோடு நடக்கும் முக்கிய கூட்டத்திற்கு அழைத்து வரக்கூடாது. ஒருகட்டத்தில் நாய் மேஜையிலிருந்த பிஸ்கட்களை தின்ன ஆரம்பித்தது. தடுக்கவில்லை.கூட்டம் முடிந்து வெளியே வந்தவுடன் ஹிமாந்தா முதல்வரிடம் " It is goodbye for me" என கூறிவிட்டு காங்கிரஸை விட்டு
வெளியேறி 2015ல் பாஜகவில் சேர்ந்தார்.2016ல் அஸ்ஸாமில் ஆட்சியை பிடிக்க கடுமையாக உழைத்தார்.வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்தி இன்று ஹிமாந்தா அஸ்ஸாமின் முதல்வர்.காங்கிரஸ் மாநில இளம்தலைவர்களை ஊக்கப்படுத்தினால் தலைமைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் அவர்களுடைய உழைப்பிற்கு
அங்கீகாரம் தராமல் உதாசீனப்படுத்தி வெளியே அனுப்பியதின் விளைவு இன்று நாடுமுழுவதும் காங்கிரஸ் முழுமையாக தோற்கடிக்க பட்டுள்ளது. பாஜகவில் இளம்தலைவர்கள் ஊக்குவிக்கப்பட்டு முக்கிய பொறுப்பில் அமர்ந்து செயலாற்றுகிறுர்கள். காங்கிரஸுக்கு மோடி வெறுப்பை தவிர வேறெந்த கொள்கையுமில்லை.
You can follow @raja7954.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: