Nudity normalising என்றால் அவுத்து போட்டுட்டு ரோட்ல போறதுன்னு நினைச்சிட்டு இருக்கானுங்க. அது
ஆபாசம், அசிங்கம், அருவருப்பு, கற்பு, புனிதம், மானம், கௌரவம் என்று பெண் உடல் மீது வைத்திருக்கும் கற்பிதங்களை உடைத்தெறிந்து நிர்வாணமும் இயல்பானதுதான், பெண் உடல் உடைமை இல்லை என்பதை பேசுவது.
ஆபாசம், அசிங்கம், அருவருப்பு, கற்பு, புனிதம், மானம், கௌரவம் என்று பெண் உடல் மீது வைத்திருக்கும் கற்பிதங்களை உடைத்தெறிந்து நிர்வாணமும் இயல்பானதுதான், பெண் உடல் உடைமை இல்லை என்பதை பேசுவது.
நிர்வாணம் இயல்பானது என்று இருந்திருந்தால் Drishyam படத்தில் ஜோர்ஜ் குட்டியின் மகள் அஞ்சு, வருண் வீடியோ காட்டி மிரட்டிய போதே 'உன்னால் புடுங்க முடிந்ததை புடிங்கிக்கோ' என்று அதை கடந்து வந்திருப்பாள்.
Drisiyam மற்றும் அதன் இன்ன பிற ரீமேக்குகளும் வந்திருக்காது.
Drisiyam மற்றும் அதன் இன்ன பிற ரீமேக்குகளும் வந்திருக்காது.
தமிழ் சினிமா இயக்குனர்கள் பலருக்கு கதையே கிடைத்திருக்காது. பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட முதலாவது பெண்ணே கயவர்களை செருப்பைக்கொண்டு அடித்திருப்பாள்.
"ஆபாசமாக வீடியோ எடுத்து 200 பெண்களை பிளாக்மெயில் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது" போன்ற செய்திகளின் தலைப்புகள் வேறு மாதிரி மாறியிருக்கும். நிர்வாணம் அவமானம், புனிதம் என்னும் தளைகளை களைவதுதான் 'நிர்வாணத்தை இயல்பாக்குதல்'
பெண் எதை அணிய வேண்டும், அணியக்கூடாது, எதை காட்டவேண்டும், காட்டக்கூடாது என்பதை அவளே முடிவு செய்வதுதான் அவள் உரிமை.
உனக்கு நான் இந்த உரிமையை தந்தேன் என்று சொல்வதே அடக்குமுறையின் நீட்சிதான்.
"உரிமைகள் எடுத்துக்கொள்ளப்படுபவை, வழங்கப்படுபவை அல்ல."
உனக்கு நான் இந்த உரிமையை தந்தேன் என்று சொல்வதே அடக்குமுறையின் நீட்சிதான்.
"உரிமைகள் எடுத்துக்கொள்ளப்படுபவை, வழங்கப்படுபவை அல்ல."