சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர்களால் முடிசூட்டப்பட்ட ஒரே பாண்டிய மன்னன் என்ற பெருமைக்குரியவன் இவன்.இன்றளவும் ஶ்ரீரங்கநாதர் முன் உச்சரிக்கப்படும் ஒரே அரசனின் பெயரும் இவனுடையதுதான்.பாண்டியப் பேரரசை நெல்லூர் வரை விரிவடையச் செய்து எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் என்ற பெயர் பெற்றவன்
ஶ்ரீரங்கத்தில் இவனும் இவன் அரசியும் யானை மேல் அமர்ந்து கொள்ள அதை ஒரு தெப்பத்தின் மீது ஏற்றி, அந்தத் தெப்பம் நீரில் எவ்வளவு அமிழ்கிறதோ அந்த அளவைக் கொண்டு அதற்குச் சமமான பொன்னும் பொருளும் ரங்கநாதருக்குச் சமர்ப்பித்து ‘ஆர்க்கிமீடீசுக்கு’ எல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவன்
தமிழகத்தின் இரு பெரும் கோவில்களான சிதம்பரத்திற்கும் ஶ்ரீரங்கத்திற்கும் இவன் பொன் வேய்ந்ததை திருப்புட்குழிக் கோவில் கல்வெட்டு இவ்வாறு புகழ்கிறது

வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே
அப்படி பெரு வீரனாகவும் பெரும் பக்தனாகவும் திகழ்ந்து பாண்டிய நாட்டின் செல்வச் செழிப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்ற ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பிறந்த நாள் இன்று (சித்திரை - மூலம்)
You can follow @tskrishnan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: