Thread of PPF 👇
ஹலோ!! போன வாரம் EPF பத்தி சொல்லிட்டீங்க, இந்த வாரம் என்ன Topic னு கேட்க வந்திங்க, கரெக்டா?
Topic is PPF. Genius sir நீங்க, கரெக்டா சொல்லிட்டீங்க..
சரி, இந்த வாரம் PPF பற்றி பார்த்துருவோம் வாங்க,
பொது வருங்கால வைப்பு நிதி என்பது Public Provident Fund (PPF) இந்தியாவின் சேமிப்பு மற்றும் வரி சேமிப்பு திட்டமாகும். சிறிய சேமிப்புக்களை திரட்ட 1968 இல் மத்திய நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும்.
PPF என்பது மிகச் சிறந்த நீண்ட கால
முதலீட்டுத் திட்டமாகும். PPF என்பது சுயதொழில் செய்வோருக்கும், EPF ஊழியர்களுக்கும் முதலீட்டு திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு நன்மையையும் வழங்குகிறது. PPF முதலீடு மத்திய அரசால் முழுமையாகப்
பாதுகாக்கப்படுவதால் இது முற்றிலும் ஆபத்து இல்லாதது. (ஹி ஹி ஹி, வட்டி மாறுதலுக்கு உட்பட்டது, ஒரு 4 வாரத்துக்கு முன்னாடி இந்த Small Savings interest rate எல்லாம் மாத்திட்டு அப்பறம் இல்லனு சொன்னங்க).
நீண்ட கால முதலீட்டிற்கு இந்த PPF முதலீட்டைத் தேர்வு செய்யலாம். மேலும் வருமானம், பாதுகாப்பு மற்றும் வரி சேமிப்பு ஆகியவற்றின் கலவையாக இருப்பதால் இந்த திட்டம் மிகவும் பிரபலமானது.
• நடுத்தர வர்க்கத்தில் உள்ள பலர் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) முதலீடு செய்கின்றனர்.
• தற்போது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆகும்.
• ஒரு நிதியாண்டில் குறைந்தது ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
• PPF முதலீட்டுக்கு வரி விலக்கு பெறலாம். PPF வரும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.
• PPF கணக்கில் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகை மற்றும் வட்டி இவை இரண்டிற்கும் வரிவிலக்கு உண்டு.
• PPF கணக்கில் வட்டியை ஆண்டுதோறும் கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்கில் செலுத்தப்படும்.
• PPF கணக்கு திறந்து 7-வது நிதியாண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் Withdrawal
அனுமதிக்கப்படுகிறது.
• PPF கணக்கு திறந்து 3-ம் நிதியாண்டில் இருந்து 6-ம் நிதியாண்டு Loan வசதி கிடைக்கிறது.
• கணக்கு துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், நமது கணக்கில் உள்ள பணத்தின் 50 சதவீத அளவிலான பணத்தை நாம் திரும்ப பெறலாம். அதற்கு மேல் பெற இயலாது.
• PPF கணக்கை ஒரு Post Office-ல் இருந்து மற்றொரு Post Office-க்கு Transfer செய்துக்கொள்ளலாம்.
• Nominee நியமிக்கும் வசதியும் இதில் உள்ளது.
PPF கணக்கை துவங்குவது எப்படி?
கணக்கை துவங்க தேவையான ஆவணங்கள்:
• Permanant Account Number (Pan Card)
• முகவரி ஆவணம் - Aadhaar card, Driving Licence, Passport, Voter Card இவற்றில் ஏதாவது ஒன்று
• பாஸ்போர்ட் போட்டோ - 2
• நீங்கள் PPF Account-யை Open செய்யும்போது, ஆரம்ப தொகையாக Rs.100 செலுத்த வேண்டும்.
• ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் Rs.500 ரூபாயாவது Deposit செய்ய வேண்டும்
• அதிகபட்சமாக Rs.1,50,000 வரை ஒரு நிதியாண்டிற்கு செலுத்தலாம்.
• தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தபட்சம் தொகை செலுத்தப்பட வேண்டும். நடுவில் கட்ட தவறினால், PPF கணக்கு இடையிலேயே நிறுத்தப்பட்டுவிடும்.
• PPF திட்டத்தின் காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பின்னர், ஐந்து ஆண்டுகளுக்கு
நீட்டிக்கப்படலாம்.
• பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் மூலமாக PPF கணக்கை துவங்க முடியும்.
• தங்கள் பெயரில் எந்த கிளை அலுவலகத்திலும் கணக்கு துவங்க முடியும்.
• 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மேஜர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் கணக்கு துவங்கலாம். கணக்க
துவங்குபவர், அந்த மைனருக்கு பாதுகாவலர் ( Guardian) ஆக செயல்படுவார்.
• Joint account இல்லை.
• ஒரு Post Office PPF கணக்கில், ஒரு ஆண்டில் ஒரே தவணையாக மொத்தமாக அல்லது அதிகபட்சம் 12 தவணைகளில் செலுத்தலாம்.
• ஆண்டின் இறுதியில் வட்டி, நமது கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போதைய
நிலவரப்படி 7.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. (அடுத்த quarterல இந்த வட்டி விகிதம் 6.4% என மாற்றப்படலாம்.)
கூட்டு வட்டி (Cumulative Interest) என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுவதால், இதன்மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் என்பது குறைந்த பட்சம் 9 % முதல் 12 %
ஆகும்,
• PPF கணக்கை 15 ஆண்டுகளுக்கு முன்பே Close செய்ய முடியாது.
• ஒவ்வொரு காலாண்டிற்கும் மத்திய நீதி அரசு வட்டி விகிதத்தை தீர்மானிக்கிறது.
கடந்த 3 வருடம் PPF யின் வட்டி விகிதம்:
இந்த Templateல STR வெயிட் கம்மி பண்ண மாதிரி வட்டி விகிதம் கம்மி ஆகுதுன்னு நீங்க நெனச்ச கம்பெனி பொறுப்பில்லை.
நீங்க Tax Savingக்கு மட்டும் இந்த PPF முதலீடு செய்வதற்கு ELSS Mutual Fund ல முதலீடு செய்யலாம். இதை பற்றி வரும் வாரங்களில் விரிவாக எழுதுகிறேன்.
Information is Wealth!
மேலே உள்ள தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளத்தாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்னும் நல்ல தலைப்புடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.

@Karthicktamil86
@_VforViking
#DoYouKnow
#learningguy
#todaylearnt
#LGWeeklyposts
#LGpost9
You can follow @learning_guy_.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: