🌺ஒரு தெலுங்கு பிராமண முன்னாள் கிறிஸ்துவரின் ஒப்புதல் வாக்குமூலம்.🌺

ஒடிசாவில் ஒரு ஆச்சாரமான தெலுங்கு பிராமண குடும்பத்தில் நான்கு சகோதரர்களுடன் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்கிறார் எஸ்தர் தன்ராஜ். அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்த நிலையில் அதை பயன்படுத்திக் கொண்டு
பக்கத்து வீட்டில் இருந்த கிறிஸ்தவர் அற்புதம் செய்கிறேன் என இவர்களின் வீட்டுக்கு வந்து ஜெபம் செய்கிறார்.

அதே வேளையில் அவரின் தந்தைக்கு நெஞ்சுவலி குணமாக, யேசுதான் குணமாக்கினார் என கிறஸ்தவர்கள் நம்ப வைக்கிறார்கள். கிறிஸ்தவராக மதம் மாற்றப் படுகிறார்கள்.
சைவ உணவாளர்களாக இருந்துக் கொண்டே ஒரு தெலுங்கு பிராமண கிறிஸ்தவ குடும்பமாக மாறுகிறது அந்த குடும்பம்.

இதன் பிறகு எஸ்தர் தன்ராஜ், ஒரு மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவரை திருமணம் செய்துக் கொண்டு, அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் ஒரு கல்வியாளராக இருந்துக் கொண்டு
மேலும் கிறிஸ்தவத்தை குறித்து உயர் படிப்பை மேற்கொள்கிறார். கிறிஸ்தவத்தை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அவருக்கு,

ஒரு பக்கம் தன்னுடைய மூதாதையரின் தர்மமான இந்து தர்மத்தின் தொன்மையான சிந்தனைகளுக்கும், கிறிஸ்தவத்தின் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் தோன்றியதாக கூறப்படும்
சிந்தனைகளுக்கும் இடையே இருக்கும் முரன்பாடை உணர முடிகிறது. மேலும் பைபிளில் இந்தியாவை குறித்தோ, இந்தியர்களை குறித்தோ ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா என தேடுகிறார், ஆனால் கிடைக்கவில்லை.

அதன் பின் கிறிஸ்தவத்தை குறித்து மேலும் அறிந்து கொள்ள, அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் உள்ள
ஒரு பல்கலைகழகத்தில் 'மாஸ்டர் ஆஃப் டிவினிட்டி' எனும் முதுகலை பட்டப்படிப்பை ஆராய்சிகள் செய்து முடிக்கிறார். இந்த பட்டப்படிப்பில் அவர் கிறிஸ்தவம்தான் சிறந்தது என வெளிப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளும் பிரிவில் இந்த முதுகலையை முதல் மாணவராக தேர்ச்சி பெறுகிறார்.
மேலும் கிறிஸ்தவத்தில் உள்ள முரன்பாடுகளை குறித்து மற்றவர்கள் சுட்டிக் காட்டுகையில் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து 'அபாலஜிஸ்டிக்' எனும் பிரிவில், முதுகலை ஆராய்சிகள் மேற்கொள்கிறார். இந்த ஆராய்ச்சியை முடித்து விட்டால், இந்தியா சென்று 'யேசுவை ஏற்றுக் கொண்ட ஒரு பிராமண பெண்'
எனும் பல கோடி டாலர் பிரச்சாரத்தோடு, இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்ய அவர் தயாராகி விடுவார்.

இந்த பின்னனியில் 'மாஸ்டர்ஸ் இன் டிவினிட்டி' எனும் உயர்வகுப்பிற்காக, தெற்கு கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்று கிறிஸ்தவத்தை குறித்த ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள தொடர்கிறார்.
அதில் பழைய ஏற்பாட்டை குறித்த ஆய்வில் கடவுளின் ஆனைப்படி இனப் படுகொலையில் ஈடுபடும் கொடுமைகளை பார்க்கிறார். பல முன்னாள் கிறிஸ்தவ மேதைகள், கிறிஸ்தவத்தில் இருந்து வெளியேறி, பைபிளில் உள்ள முரன்பாடுகளை குறித்து விளக்குவதை பார்க்கிறார். நான்கு வருட ஆய்வில் இன்னும் ஒரே ஒரு செமஸ்டர்தான்
மிச்சமுள்ளது எனும் நிலையில், பல விஷயங்களில் அவரால் பைபிளையோ, பழைய ஏற்பாட்டையோ ஒரு பகுத்தறிவு வாதியாக, சிந்தனையாளராக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கிறிஸ்தவ புனித புத்தகங்களில் கலாச்சார அழிப்பும், ரத்த ஆறும், முறையற்ற உறவுகளும், நிந்தனைகளும், கொடூரங்களும் நிகழ்ந்துள்ளதை பார்க்கிறார்.
கிறிஸ்தவம் என்பதே உலகமெங்கும் ரத்த ஆறை ஓட வைத்து, சமூக அடையாளத்தை மாற்றி அமைத்து, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு மிகப்பெரும் சூழ்ச்சி என்பதை புரிந்துக் கொள்கிறார்.

அதை மெய்பிக்கும் வகையில் தன் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுகிறார். அதிர்ந்து போன பல்கலைகழகம்
அவரின் ஆராய்ச்சி கட்டுரைகளை நிராகரித்து அவரை அந்த முதுகலை படிப்பில் இருந்து விலக்குகிறது.

யேசு என்பவர் அமைதியின் இளவரசர் என்றால் ஏன் வாளால் கிறிஸ்தவ‌ மதத்தை வளர்த்தார்கள் ? ஏன் கிறிஸ்தவர்கள் மத்தியிலேயே அமைதி இல்லை ? என யோசிக்கிறார். இந்தியாவில் கிட்டத்தட்ட பாதி பேரை
கிறிஸ்தவராக மதம் மாற்றியவரும், ஆப்ரிக்காவில் முக்கால்வாசி பேரை மதம் மாற்றியவருமான இவாண்ஜிலிஸ்ட் பில்லி கிரஹாமின் முக்கிய செயலாளர் 'சார்ல்ஸ் டெம்பிள்டன்' கிறிஸ்தவத்தின் முரன்பாடுகளை வெளிப்படுத்தி, கிறிஸ்தவத்தில் இருந்து வெளியேறுவதை புரிந்து கொள்கிறார்.
இந்த மிக அருமையான நேர்காணலை நடத்திய டாக்டர் ராஜிவ் மல்ஹோத்திரா, இந்திய கிறிஸ்தவர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கிறார்.

கிறிஸ்தவத்தை விட்டு கிறிஸ்தவர்கள் வெளியேறாவிட்டாலும் கூட பரவாயில்லை. குறைந்தபட்சம் மூளைசலவைகளுக்கு உட்படாமல் கிறிஸ்தவம் என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்ளுங்கள்
என கேட்டுக் கொள்கிறார்.

தற்போது எஸ்தர் தன்ராஜ், கிறிஸ்தவத்திற்கு எதிரான மிகப்பெரும் கருத்துப் போரை நடத்திக் கொண்டு, கிறிஸ்தவத்தில் சிக்கியுள்ள நோயாளிகளை விடுவிக்கும் அரும்பணியை செய்து வருகிறார்.

அவருக்கு நம் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிப்போம்.

வாய்மையே வெல்லும்.
வீடியோ சுட்டி

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

🙏வாட்ஸப்.

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app Compile
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: