#Thread #Vaccination
கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனுபவம் ஒரு நூல்கண்டாக..

45 வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாரும் போய் தடுப்பூசி போடுங்கனு அரசாங்கம் சொல்லிட்டு இருக்கு.

இப்போ மே 1ல இருந்து 18 வயசுக்கு மேல உள்ளவங்களும் https://selfregistration.cowin.gov.in/  இதுல பதிவு பண்ணிட்டு போய்

(1/n)
Covaxin அல்லது Covishield (இருப்பை பொறுத்து) இதில் ஏதாவது ஒரு தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போட்டுக்கலாம். ஆனா இப்போ Covishield மட்டும் தான் நிறைய இடத்துல போடுறாங்க, Covaxin இருப்பு இல்லை.

முதல்முறை Covishield போட்டா, இரண்டாம் தவனையும் அதே Covishield தான் போடனும்.

(2/n)
சரி நான் ஊசி போட்டுக்கிட்ட கதைக்கு வரேன்...18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மே 1 ஆம் தேதிதான ஊசி போட ஆரம்பிக்குறாங்க..நீ மட்டும் எப்படி இப்போவே போய் புளுத்துன சிலர் கேட்க்குறது எனக்கு கேட்குது. நானும் மே 1க்கு அப்புறம் போய் போட்டுக்கலாம்னுதான் இருந்தேன்.

(3/n)
ஆனா நான் ஒரு வங்கி அதிகாரி😆 என்பதால் முன்னதாகவே போட்டுக்கொண்டேன்.

நேற்று என் மேனஜர் என்னை அழைத்து வங்கி ஊழியர்கள் எல்லாரும் கண்டிப்பா கோவிட் தடுப்பூசி போடனும், நாங்க எல்லாரும் ஊசி போட்டு வந்துட்டோம்..நீயும் போய் இந்த வங்கி லெட்டரை காண்பிச்சு ஆரம்ப சுகாதார நிலையத்துல

(4/n)
போய் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டு வாடா அம்பின்னு என்னை அனுப்பிவச்சாங்க.

நானும் கிளம்பி எங்க ஏரியா பக்கம் இருக்க சுகாதார நிலையம் போனேன். நல்லா கூட்டமா இருந்துச்சு.. வெளியில இருந்த ஒரு நர்ஸ்கிட்ட இந்த மாதிரி நான் ஒரு வங்கி அதிகாரி, தடுப்பூசி போட்டுகிடனும்னு சொன்னேன்

(5/n)
வங்கி அதிகாரினும் பாக்காம, நான் கஷ்டமர்கிட்ட கேக்குற மாதிரி என்கிட்டயே ஆதார்கார்ட் ஜெராக்ஸ் கேட்டாங்க. ஜெராக்ஸ் இல்லை ஒரிஜினல்தான் இருக்குனு சொன்னேன். அவங்க மேலயும் கீழயும் பாத்துட்டு முதல்ல நீங்க போய் உள்ள "Data Entry" ரூம் இருக்கும் அங்க ஒரு சார் இருப்பார்..அவரை பாருங்கனு
(6/n)
அனுப்பிவச்சாங்க. நான் அவரை போய் பார்த்தேன்..அவர் என்னோட டீடெயில்ஸ் செக் பண்ணிட்டு ஆதார் ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்து OP டோக்கன் போட்டுக்கோங்க, அப்புறம் உங்களுக்கு BP செக் பண்ணிட்டு டாக்டர் அட்வைஸ்க்கு அப்புறம் ஊசி போடுவாங்கனு சொன்னாரு.

நான் திரும்ப போய் ஆதார் ஜெராக்ஸ்
(7/n)
எடுத்துட்டு வந்து OutPatient டோக்கன் போட்டுட்டு..நம்ம பேரு, வயசு, மொபைல் நம்பர் எழுதி ஸ்லிப் ஒன்னு கொடுத்து வெய்ட் பண்ண சொன்னாங்க..

அரைமணிநேரம் காத்திருப்புக்கு பிறகு BP செக் பண்ண போனேன்.
BP நார்மலா இருந்தா மட்டும்தான் ஊசி போடுவாங்களாம். Low BP னு டாக்டரை பாக்க சொன்னாங்க
(8/n)
பக்கத்துல டாக்டர் ரூம்க்கு போனேன்.
கவர்ன்மெண்ட் டாக்டர்னா கொஞ்சம் வயசானவங்களா இருப்பாங்கன்னு நினைச்சு உள்ள போனா அழகான Young ஆன லேடி டாக்டர். 😍

டாக்டரக்கா எல்லாத்தையும் செக் பண்ணிட்டு.காலையில சாப்பிட்டிங்களா இல்லையான்னு கேட்க..சரியா சாப்பிடலனு சொல்ல..அதான் BP லோவா இருக்கு
(9/n)
போய் பிஸ்கேட், டீன்னு ஏதாச்சும் சாப்பிட்டு வாங்கனு சொல்ல.. அப்புறம் வாட்ச்ச பார்த்துட்டு லன்ச் டைம் ஆயிடுச்சு..சாப்பாடே சாப்பிட்டு 2..2.30 மணிக்குள்ள வந்துருங்கனு பாசமா சொல்லி அனுப்பிவச்சாங்க❤️

நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப போனேன்
(10/n)
மறுபடியும் BP செக் பண்ணாங்க.. 110 நார்மலாக இருந்துச்சு. இதுக்கு முன்னால பார்த்தப்போ 100/70 தான் காட்டுச்சு.

திரும்பவும் ஸ்லிப் எடுத்துட்டு டாக்டர் ரூம்க்கு போனேன். இப்போ எல்லாம் நார்மலா இருக்கு, இங்க இப்போ Covishield தான் இருக்கு. 1st டோஸ் Covishield போட்டா, 2nd டோஸும்
(11/n)
Covishield தான் போடனும்.

"Covaxin Availability எங்கேயும் இல்லை, 1st டோஸ் Covaxin போட்டவங்க இப்போ 2nd Dose போட முடியாம இருக்காங்க"

ஊசி போடுவதற்கு முன்பாக .. பொதுவாக ஊசி ஏதேனும் போட்டால் அலர்ஜி வருமா, சமீபத்தில் காய்ச்சல் ஏதும் வந்துச்சா, கோவிட் டெஸ்ட் எடுத்தீங்களா,
(12/n)
இப்போவே ஊசி போட வந்துருக்கிங்க, ஆபிஸ் லெட்டர் இருக்கானு எல்லாம் டீடெயிலா கேக்குறாங்க.

தடுப்பூசி போட்டது அப்புறம் என்னலாம் பண்ணனும் பண்ண கூடாதுன்னு அறிவுரை வழங்கினாங்க👌

மூன்று நாட்களுக்கு

*அசைவ உணவுகள் சாப்பிட கூடாது.

*மது பழக்கம்,புகை பழக்கம் 🚬🍾🍷✊ கூடவே கூடாது
(13/n)
*தண்ணீர் அதிகம் குடித்து கொண்டே இருக்கவும்

*ஜூஸ்க்கு பதில் பழங்களை சாப்பிடலாம்

*முக்கியமாக தடுப்பூசி போட்ட பின்பு 2 நாள் (குறைந்தது 1 நாள்) கண்டிப்பாக வீட்டில் ஓய்வெடுக்கவும்.

ஓய்வெடுக்காமல் உடனே வேலைக்கு செல்லும் பட்சத்தில் சிலருக்கு உடல் வலி, காய்ச்சல் வரலாம்..
(14/n)
இரண்டு பாராசிட்டமால் காய்ச்சல் மாத்திரை கொடுப்பார்கள்.. இரவு உணவுக்கு பின்பும் மறுநாள் காலையும் கண்டிப்பா உட்கொள்ளவேண்டும்.

கண்டிப்பாக ஓய்வெடுக்கவும் இல்லையேல் அவரவர் உடல் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப மேற்கண்ட விளைவுகள் ஏற்படலாம்.

இதெல்லாம் டாக்டர் சொல்லிட்டு என்னையும் வீட்ல
(15/n)
போய் நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க.எல்லா சந்தேகமும் டாக்டரக்காட்ட தெளிவு படுத்திட்டு அவங்களுக்கு சிரிச்சபடி😁 ஒரு நன்றி சொல்லிட்டு கிளம்புனேன்.

பக்கத்துல இருந்த ஊசி போடுற ரூம்க்கு போனேன். சட்டைய கலட்டிக்கிட்டு ஸ்டாலின் மாதிரி போஸ் குடுக்க இடதுகையில ஊசி போட்டுவிட்டாங்க💉
(16/n)
திரும்பவும் Data Entry Sir பார்த்து, அவரும் ஒருமுறை டீடெய்ல்ஸ் வாங்கிட்டு ஊசி போட்டது அப்புறம் என்ன பண்ணனும் பண்ண கூடாதுனு சொன்னாரு ( ஊசி போட்ட நர்ஸ் அக்காவும் சொன்னாங்க).

தடுப்பூசி போட்டது அப்புறம் அங்கேயே அரைமணிநேரம் காத்திருக்க வச்சு உடம்புக்கு ஏதும் ஆகுதான்னு செக்
(17/n)
பண்ணி அனுப்புறாங்க👌
நானும் அரைமணிநேரம் காத்திருந்து,நிர்பந்தத்தின் காரணமா "ஸ்டீல் பாடி..ஒன்னும் ஆகாது"னு வீட்ல ரெஸ்ட் எடுக்காம உடனே வேலைக்கு போய்ட்டேன்.

அதன் விளைவு நைட் தெரிஞ்சது, ஊசி போட்ட வலியும், குருக்குவலியும் ஒன்னா வந்திருச்சு. கூடவே காய்ச்சல் உணர்வும் வந்திருச்சு
(18/n)
நைட் சாப்பாடு சாப்பிட்டு மாத்திரை போட்டு படுத்துட்டேன். குளிர்காய்ச்சல் மாதிரி வர..தூக்கம் வரல..முணங்கிட்டே படுத்து இருந்தேன். அப்புறம் எப்போ தூங்குனேன்னு தெரியல, காலையில எந்திரிக்க முடியல.
காய்ச்சல் தொடர்ந்துச்சு..லீவ் போட முடியாத சூழல்.. வேறவழியில்லாம வேலைக்கு போய்ட்டேன்
(19/n)
காலையில சாப்பிட முடியல.. கொஞ்சமா சாப்பிட்டு மாத்திரை போட்டுகிட்டேன்.. வேலைக்கு போயும் அங்க இருக்க முடியல. என்னோட முக்கியமான வேலைகள் எல்லாத்தையும் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

இன்னும் உடல் வலியும், காய்ச்சலும் இருக்கு. இதை பயமுறுத்துறதுக்கு சொல்லல..

(20/n)
எல்லாரும் மறக்காம கொரோனா தடுப்பூசி போட்டுக்கோங்க. தடுப்பூசி போட்டா ஒழுங்கா ரெண்டு நாள் லீவ் போட்டு வீட்டுல நல்லா ரெஸ்ட் எடுங்க, தண்ணி அதிகமா குடிங்க, வெயில்ல சுத்தாதீங்க. மற்ற பழக்க வழக்கங்களை மூனு நாளைக்கு விட்டுருங்க.

நன்றி வணக்கம் 😎

#vaccinated
#VaccineFor18Plus
பின்குறிப்பு :

சில ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடவரும் பொதுமக்களுக்கு மேற்கண்டவாறு எனக்கு கூறியதுபோல் ஊசி போட்டதுக்கு பின்னர் பின்பற்ற கூடிய வழிமுறைகள் குறித்து தெளிவான அறிவுரைகள் வழங்கப்படுவதில்லை.
நான் சென்ற ஆலந்தூர் மண்டல ஆதம்பாக்கம் சுகாதார நிலையம்
சிறப்பாக செயல்படுகிறது. அங்குள்ள அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் என் வாழ்த்துக்கள் 🎉🎉
You can follow @kadalaimuttaai.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: