இன்றைய கேள்வி

# பல கேள்விகள் ஆனால் ஒரே விடை #

1. 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த முதல் 10 விஞ்ஞானிகளில் ஒருவர்.

2. அடுத்த 100 வருட கணினி ஆராய்ச்சிக்கு வித்திட்டவர்.

3. ஒரு தவறுக்காக தண்டிக்கப்பட்டவர் ஆனால் இன்று அந்நாட்டின் ரூபாய் நோட்டில் ஒரு முகமாக இருப்பவர்.

யார் அவர்?
விடை = அலன் டூரிங் (Alan Turing)

# இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்க "முக்கிய காரணம்" என்று சொல்வதைவிட "ஒரே காரணம்" அலன் டூரிங் தான்.

# இரண்டாம் உலகப்போரில் புதிரான இயந்திரம் (Enigma Machine) மூலம் ஜெர்மனி தனது போர் திட்டங்களை வகுத்து வந்தது.
# ஜெர்மனியின் இயந்திரத்தை மறைவிலக்கியது (Decrypt) லண்டனை சேர்ந்த கணிதவியலாளர் அலன் டூரிங்.

# அலன் டூரிங் ஆராய்ச்சி மூலம் இரண்டாம் உலகப்போர் 2-3 வருடங்கள் முன்னரே முடிந்தது / ஜெர்மனியும் தோற்கடிக்கப்பட்டது / 2 கோடி மக்கள் உயிர்கள் காப்பற்றப்பட்டது.
# அலன் டூரிங் செய்த கணினி ஆராய்ச்சிகள் இன்று சொல்லப்படுகிற செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆராய்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்தது.

# அலன் டூரிங் கோட்பாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் ஜோன் மெக்கார்த்தி (John McGrathy).
# அலன் டூரிங்கின் சேவைகளை கருத்தில் கொள்ளாமல் 1952 ஓரினச்சேர்க்கை (Gay) வழக்கில் லண்டன் நீதிமன்றம் அவரை குற்றவாளி என கூறி தண்டித்து சிறை (Prison) அல்லது மருத்துவ தகுதிகாண் (Medical Probation) இடையே வாய்ப்பு வழங்கிய போது மருத்துவ தகுதிகாண் வாய்ப்பை அலன் டூரிங் தேர்ந்தெடுத்தார்.
# தனது ஆராய்ச்சிகளை தொடர ஏதுவாக இருக்கும் என்ற நோக்கத்தில் மருத்துவ தகுதிகாண் வாய்ப்பை தேர்ந்தெடுத்தார் ஆலன் டூரிங்.

# மருத்துவ ரீதியாக மேற்கொண்ட சிகிச்சை ஆலன் டூரிங் உடலின் ஹார்மோன்களை (Hormone) சிதைத்து விட்டது.
# 1954 இல் தற்செயலான சயனைடு விஷத்துடன் (Accidental Cyanide Poison) மூலம் இறந்தார் அல்லது லண்டன் ரகசிய உளவு அமைப்பு கொலை செய்தது என்று மேலும் பல்வேறு சதி (Conspiracy) இவர் மரணம் குறித்து நிலவுகிறது.

# அலன் டூரிங் உடன் இறுதி வரை நட்புடன் பழகியவர் தோழி ஜோன் கிளார்க் (Joan Clarke).
# அலன் டூரிங் கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக அமைந்தவர் அவருடைய பள்ளிக்கால தோழர் கிறிஸ்டோபர் மோர்காம் (Christopher Morcom) ஆவார்.

# 1930 இல் காசநோயால் கிறிஸ்டோபர் மோர்காம் இறந்தார்.

# The Imitation Game (2014) அலன் டூரிங் வாழ்க்கை வரலாறை தழுவிய வெற்றி திரைப்படமாகும்.
# கணினி துறையின் நோபல் பரிசு என்று மெச்சப்படும் டூரிங் பரிசு (Turing Award) அலன் டூரிங் நினைவாக வைக்கப்பட்டது.

# லண்டன் ராயல் அமைப்பு 2013 இல் அலன் டூரிங் ஓரினச்சேர்க்கை செயலுக்கு மன்னிப்பு வழங்கியது.

# அலன் டூரிங் முகம் பொறித்த ₤ 50 நோட்டு ஜூன் 2021 இல் புழக்கத்தில் வரும்.
# LGBT முன்னோடி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியின் முன்னோடி அலன் டூரிங் என்றென்றும் போற்றத்தக்கவர்.

# அலன் டூரிங் வாழ்க்கை வரலாறு உங்கள் கண்களில் நீரை வரவழைக்கும்.

பிறப்பு = 23 - ஜூன் - 1912

இறப்பு = 07 - ஜூன் - 1954

#AlanTuring
# சாதனைகள் புரிவதற்கே மறுக்கப்பட்ட வரலாறை விட சாதனைகள் பல புரிந்தும் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட வரலாறு கொடுமையான செய்தியாகும்.

# "வாழ்ந்து சாதித்தவன் கெடக்கூடாது" ஆனால் அலன் டூரிங் தான் வாழ்ந்த இறுதி காலத்தில் கேவலமாக பார்க்கப்பட்டு கெட்டுப்போனார்.
# இன்று அலன் டூரிங் ஹீரோவாக பார்க்கப்படுகிறார் ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் கீழே வைக்கப்பட்டார்.

# ஜெர்மனியின் புதிரான இயந்திரத்தை (Enigma Machine) தனது பாம்பே இயந்திரம் (Bombe Mahine) மூலம் முறியடித்தார்.

# இன்றைய இயந்திர வழி கற்றலுக்கு (Machine Learning) முன்னோடி இந்த Bombe.
# தயவு செய்து அறிவியல், அரசியல், கலை சாதனையாளர்களை அவர்கள் வாழும் காலத்தில் இருந்தே தினந்தோறும் கொண்டாடுங்கள். எடுத்துக்காட்டாக

# எஸ்பிபி பாடியது அவருக்காக மட்டுமா?

# இசைஞானி இசைப்பது அவருக்காக மட்டுமா?

# கலைஞர் அரசியல் செய்தது அவருக்காக மட்டுமா?
# விவேக் நகைச்சுவை செய்தது அவருக்காக மட்டுமா?

# அலன் டூரிங் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி செய்தது அவருக்காக மட்டுமா?

இல்லை இல்லவே இல்லை.

வெவ்வேறு துறை நிபுணர்களான இவர்கள் நம்மை போல மனிதர்கள் தான் ஆனால் "நமக்காக வாழ்ந்தவர்கள்".

இவர்களை

கொண்டாடினாலும் தீராது!

அழுதாலும் தீராது!
Please read this thread also to know about Bombe @HilaalAlam https://twitter.com/HilaalAlam/status/1320277407954206721
You can follow @chockshandle.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: