இன்னிக்கு ராமநவமி இல்லை தான். அதுக்காக ராமனை நினைக்காமல் இருக்கலாமா? ஸ்ரீ ராமச்சந்திரனை தஸரத சக்ரவர்த்தி மட்டும் ராமா என்று அழைத்து வந்தாராம். தந்தை என்ற முறையில் இந்த அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. தாயான கௌஸல்யா மகனை வாத்சல்யத்துடன் ராமபத்ரா என்று அழைத்து வந்தாள். சிற்றன்னை
கைகேயி, ஶ்ரீராமன் குழந்தையாக இருந்தபோது ஆகாயத்தில் இருக்கும் சந்திரன் வேண்டும் என்று அழுதபோது ஒரு கண்ணாடியில் சந்திரனின் பிம்பத்தை காண்பித்து ஸமாதானப் படுத்துகிறாள், அவள் ராமச்சந்திரா என்று அழைத்து வந்தாள். ப்ரம்ம ரிஷியான வசிஷ்டர் ஸ்ரீ ராமனை பரதத்துவம் என்று அறிந்து வேதஸே என்று
அழைத்தார். அயோத்யா நகரத்து மக்கள் எங்களுடைய ரகுவம்ஸத்து அரசன் என்ற பொருளில் ரகுநாத என்று அழைத்தனர். ஸீதாதேவி நாத என்றே அழைத்து வந்தாள். அப்படி அழைப்பதற்கு சீதைக்கு மட்டுமே உரிமை உண்டு. மிதிலை நகரத்து மக்கள் அனைவரும் எங்களது ஸீதாதேவியின் பதி என்ற அபிமானத்தினால் ஸீதாயபதயே என்று
கூறி வந்தார்கள். இவை அனைத்தும் ஒரு ஸ்லோகத்தில்!
ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம :
இது மிகவும் பிரபலமான ஸ்லோகம். இதன் பத ப்ரயோகங்களில் இருக்கும் உள் அர்த்தம் தெரிந்தபின் இன்னும் ரசிக்க முடியும். இப்படிப்பட்ட ராமனுக்கு நமஸ்காரங்கள்.
ஸ்ரீராமா ஜெயராமா
You can follow @anbezhil12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: