நண்பர்களே

வட மாநிலங்களில் நிலவும் கொடுமையான நிலை இப்போது தமிழகத்தில் இல்லை. காரணம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்பான மருத்துவ கட்டமைப்பு என்பது நமக்கு தெரியும்

ஆனால்

ஒரு நாளில் 14000 பேர் பாதிக்கையில் இந்த கட்டமைப்பு நிறைய அதிக நாள் ஆகாது (1/5)
சென்னையில் இப்போது படுக்கைக்கு தட்டுப்பாடு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

பிற மாவட்டங்களில் படுக்கைகள் உள்ளன.

ஆனால் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது

இருக்கும் கட்டமைப்பில் சமாளிக்க வேண்டும் எனில் தினசரி எண்ணிக்கை குறைய வேண்டும் (2/5)
தினசரி எண்ணிக்கை கூடாமல் இருப்பது நமது கைகளில் தான் இருக்கிறது.

அவசியமற்ற பயணங்கள் தவிர்ப்பது, பொருட்கள் வாங்க ஆன்லைன் முறை / ஒருவர் மட்டும் சென்று வாங்குவது, வேலைக்கு போய் வருவதை தவிர பிற சமயங்களில் வீட்டில் இருப்பது ஆகியவை நம்மையும் மாநிலத்தையும் மற்றவர்களையும் காக்கும் (3/5)
மருத்துவ துறை, காவல் துறை, அரசு துறைகள் என பலரும் முழு நேரமும் போராடி கொண்டு இருக்கும் இந்நேரத்தில் அவர்களது சுமையை மேலும் கூட்டாமல் இருக்க நம்மால் முடிந்ததை செய்வோம்

பரவலை குறைத்து, நோயை கட்டுப்படுத்தி, அரசுக்கு உதவ நாம் அடங்கி ஒடுங்கி வீட்டிலேயே இருப்பது நல்லது. (4/5)
குழந்தைகள் முதியோரை எந்த காரணம் கொண்டும் வெளியே அழைத்து செல்ல வேண்டாம்.. நோய் வந்த பின் சமாளிப்பது என்பதை விட நோய் வராமல் தற்காத்து கொள்வது தான் புத்திசாலித்தனம்.

இன்று மட்டும் அல்லாமல் எல்லா நாளும் தொழில் தவிர பிறவற்றுக்கு வெளியில் செல்வதை குறைத்து கொள்ளுங்கள்

நன்றி

(5/5)
You can follow @saysatheesh.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: