ராகுல் காந்தி இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தி:-
கடந்த மார்ச் 15ஆம்தேதி The Hindu நாளிதழில் ராகுல் காந்தி குறித்த ஒரு கட்டுரையை Rajesh Mahapatraவும் Rohan D'Souzaவும் எழுதியிருந்தனர்.இந்திய அரசியலில் பிரதமர் மோதியின் ஆபத்தான அரசியலுக்கு மாற்று ராகுல் காந்தி மட்டுமே என்பதை
அந்தக் கட்டுரையில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்தக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது:
1. இந்தியாவில் இருவிதமான குடிசைத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒன்று, ராகுல் காந்திக்கு தொடர்ந்து அறிவுரைகள் கூறுவது. மற்றொன்று, அவரெல்லாம் ஒரு ஆளா என்று ஒதுக்கித் தள்ளுவது.
ஆனால், இந்த இருதரப்பாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று, ராகுல் எப்படி பா.ஜ.கவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்பதைத்தான்.
2. மோதியைப் பொறுத்தவரை சீன பாணியிலான அரசியல் சூழலையே விரும்புகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போல பா.ஜ.க. இந்தியாவை ஆதிக்கம் செலுத்த வேண்டுமென நினைக்கிறார்.
தற்போது கட்டப்பட்டுவரும் Central Vista திட்டம் முடிவடையும்போது, இது முழுமை பெற்றுவிடும். நாடாளுமன்றத் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, பெரும் எண்ணிக்கையில் நாடாளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்படும்.
3. சீன நாடாளுமன்றமான National People's Congressல் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 2,980.
இதனால், அந்த நாடாளுமன்றம் அதிபரின் ரப்பர் ஸ்டாம்பாகவே இருக்கும். ஏகப்பட்ட உறுப்பினர்கள் இருப்பதால் எந்த விவாதமும் நடக்காது. ஆகவே, எல்லா அதிகாரமும் ஏழே ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மத்திய கமிட்டியிடம்தான் இருக்கும். அதிபர் சொல்வதை இந்த ஏழுபேரும் கேட்பார்கள். அதே பாணியில், மிகப் பெரிய
நாடாளுமன்றத்தை உருவாக்கி, அதிகாரத்தை மோதி-அமித் ஷா ஆகிய இருவரும் பகிர்ந்துகொள்வார்கள்.
4.பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, தென்கொரிய பாணியிலான குடும்பங்களுக்குச் சொந்தமான மிகப் பெரிய காங்ளமரேட்கள் உருவாக்கப்படும். இப்போதே அந்த நிறுவனங்கள்எவை என்பதை நம்மால் எளிதில்அடையாளம் காண முடியும்.
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தின் இரு முனைகளுக்கு இந்த இரு நிறுவனங்களின் பெயர்கள்தான் சூட்டப்பட்டிருக்கின்றன.
5. ஆனால், தென்கொரிய நிறுவனங்கள் உலகத் தரத்தில் செயல்படுபவை. உலகின் பிற பெரிய நிறுவனங்களுடன் தரத்தில் போட்டியிடுபவை. ஆனால், மேலே சொன்ன இந்திய நிறுவனங்கள் அப்படி
அல்ல.பதிலாக, இந்தியாவின் பல்வேறு தரப்பினரிடமும் உள்ள செல்வத்தை சிலரிடம் குவிப்பதற்கான செயல்கள் நடக்கும். இந்த பெருந்தொற்றுக் காலத்தில் சாதாரண மக்களின் வருவாய் பல மடங்கு குறைந்திருக்கும்போது, இந்தியப் பெரும் பணக்காரர்களின் வருவாய் 35 சதவீதம் உயர்ந்தது இதற்குச் சான்று.
6. அடுத்தது
தான் முக்கியமான பகுதி. இந்திய வாழ்வின் சக அம்சங்களிலும் இந்துத்துவ விஷத்தை புகுத்துவது. ஒருவர் இந்துவாகவோ முஸ்லிமாகவோதான் இருக்க வேண்டும். அல்லது சங்கியாகவோ தேசத்துரோகியாகவோ இருக்க வேண்டும்.
7. முடிவில் இந்தியாவானது சீனா,தென் கொரியா,இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் உள்ள அபாயகரமான
அம்சங்கள் அனைத்தும் கொண்ட ஒரு நாடாகிவிடும்.இந்தச் சூழலுக்கு மத்தியில்தான் ராகுல் காந்தியின் ஆளுமையையும் வியூகத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.
8.பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்சும் எதையும் காதில் வாங்காமல், செய்வதைச் செய்துகொண்டே போகும் பாணியைக் கொண்டவர்கள்.மாறாக,காங்கிரஸ் படிப்படியாக
விஷயங்களைச் செய்வதற்கும் பேச்சுவார்த்தைக்கும் இறங்கிவருவதற்கும் ஒப்புக்கொள்ளக்கூடியது.
9.மோதியும் அமித் ஷாவும் தொடர்ந்து மக்களை பதற்ற நிலையில் வைத்து,ஒரு அணிதிரட்டலை செய்துகொண்டே இருக்கிறார்கள்.ஆனால், ராகுலும் காங்கிரசும் தீவிர வலதுசாரி அல்லது இடதுசாரி நிலையை எடுக்காமல் தொடர்ந்து
இந்தியாவை முன்னகர்த்திச் செல்வதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார். உரையாடுகிறார்.
10.இதனால்,ராகுல்காந்தியைவிட அவர் சொல்லும் வார்த்தைகளுக்கு கூடுதல் மதிப்பு உருவாகிறது.அவர் வெறும் ஒரு அரசியல் வாரிசு அல்ல.ஒரு பாரம்பரியத்தின் வாரிசு.
11. மோதியும் அமித்ஷாவும் சீனா - தென்கொரிய-இந்துத்துவம்
இணைந்த இந்தியாவை உருவாக்க முயலும்போது மக்களிடம் ராகுல் காந்தி முன்வைப்பது மாதிரியான ஒரு அரசியலுக்கான ஆதரவு அதிகரிக்கும். இந்தியாவின் மகத்தான அமைப்புகள் வீழ்ச்சியிலிருந்து மீளும். அப்படி ஒரு எதிர்காலத்திற்கான நம்பிக்கை இருந்தால், ராகுல் காந்தி அதன் மையமாக இருப்பார்.
@RahulGandhi
You can follow @SundarrajanG.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: