Exclusive #Valimai Full Article In Vikatan

மிடுக்கான போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் அஜித் நடிப்பது பலரும் அறிந்தது. ஆனாலும், படத்தில் அண்ணன், தங்கை, அம்மா, மகன் என சென்டிமென்ட் விஷயங்கள் செம தூக்கலாம். ‘விஸ்வாசம்’ படத்தை மிஞ்சுகிற அளவுக்கு ஃபேமிலி சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாம்.
படம் முழுக்க சண்டைக் காட்சிகள் எக்கச்சக்கமாம். முதல் பாதியில் ஐந்து சண்டைகள், இரண்டாம் பாதியில் மூன்று சண்டைகள் எனப் படத்தில் எட்டு சண்டைக் காட்சிகள். ஹாலிவுட் ஸ்டைலில் இரு சண்டைக் காட்சிகளில் அஜித் ரத்த காயத்துக்கு உள்ளானதை மொத்த யூனிட்டும் சொல்லிச் சொல்லிச் சிலிர்க்கிறது.
#NKP #Valimai இரண்டு படங்களுக்கும் சேர்த்துத்தான் அஜித்துக்குச் சம்பளம் பேசப்பட்டது. தயாரிப்பாளர் போனி கபூர், `வலிமை’ தொடங்கும்போதே அஜித்துக்கு முழுச் சம்பளத்தையும் செட்டில் செய்துவிட்டாராம். ‘மூன்றாவது படத்திலும் இணையலாமா?’ என போனி கபூர் கேட்க, ‘சாரி’ சொல்லிவிட்டாராம் அஜித்.
படத்தில் பணியாற்றும் டெக்னீஷியன்கள், பிற நடிகர்கள் பலரும் விதவிதமான லேட்டஸ்ட் கார்களில் வந்திறங்க, அஜித் மட்டும் இன்னோவாவில் வருவாராம். ‘எளிமையானவர்னு தெரியும். அதுக்காக இவ்வளவு எளிமையா?’ என வியக்கிறது யூனிட். #Valimai
அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவதும் ஹெச்.வினோத் என்பது உறுதியாகிவிட்டது. ‘வலிமை’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே அடுத்த படத்துக்கான ஒன்லைன் கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம் அஜித். #Valimai
வலிமைக்கு அடுத்து அஜித் வினோத்துடன் இணையும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர்’ யார் என்பதுதான் இப்போதைய கேள்வி. சத்யஜோதி தியாகராஜன் பெயர் டிக் ஆக வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். #Valimai
@thisisysr இசையில் நான்கு பாடல்கள் அருமையாக வந்திருக்கின்றனவாம். ‘விஸ்வாசம்’ படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடலின் சூப்பர் டூப்பர் ஹிட்டுக்குப் பிறகு தடாலடிப் பாடல்களைத் தவிர்த்து, மெலடிகளை ரசிக்கத் தொடங்கிவிட்டாராம் அஜித். அந்த வகையில் #Valimai யில் மூன்று பாடல்கள் மெலடி ரகம்தானாம்.
படத்தின் ஒரு வார ஷூட்டிங் இன்னும் பாக்கி இருக்க, “அது ஒரு பக்கம் இருக்கட்டும்... முடிச்சவரைக்கும் டப்பிங் முடிச்சுடலாம்’ என்று படக்குழுவினரை உற்சாகமாக்கி... எடுத்தவரை டப்பிங் வேலைகளைப் பக்காவாக முடித்துக் கொடுத்திருக்கிறார் அஜித். #Valimai
அதிகாலை மூன்று மணிக்கு டப்பிங் பேச வருகிறவர், மதியம் வரை டப்பிங் பேசிவிட்டு தான் சாப்பிடவே செல்கிறார் என்று வியந்து பாராட்டுகிறார்கள் ஸ்டூடியோவில் பணிபுரியபவர்கள்.
#Valimai
படப்பிடிப்பின்போது யோகி பாபுவுடன் ரொம்பவே பாசமாகிவிட்டாராம். யோகி பாபு தன் ஆரம்பகாலச் சிரமங்களைச் சொல்ல மனமுருகிக் கேட்ட அஜித், தன்னுடைய போராட்டங்களையும் அவரிடம் சொல்லி நம்பிக்கையூட்டியிருக்கிறார்.
அடுத்தடுத்த படங்களிலும் அஜித் - யோகி பாபு கூட்டணி தொடரும் என்கிறார்கள். #Valimai
மிரளவைக்கும் பைக் சேஸிங் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட்டாம். அதனால் அதைவைத்து ட்ரெய்லர் உருவாக்கப்பட, ‘இந்த சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம்’ எனச் சொல்லி அதை ட்ரெய்லரிலிருந்து தூக்கச் சொல்லிவிட்டாராம் அஜித். அதனால் மறுபடியும் வேறு மாதிரி ட்ரெய்லர், டீஸரை ரெடி செய்துவருகிறார்கள்.
#Valimai
You can follow @ThalaBalaJith.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: