Thread on EPF
👇
மன்னா
ஏன்னா மங்குனி அமைச்சரே?
இந்த EPF என்று சொல்கிறார்களே, அப்படி என்றல் என்ன மன்னா?
மங்குனி அமைச்சரே, தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் போல கஷ்டமான விடுகதை இல்லை.
EPF பற்றி இந்த வாரம் பார்த்துருவோம் வாங்க.,
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employee Provident Fund Organization) என்பது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசு அமைப்பாகும், இது வேலை செய்யும் நபர்களுக்கான EPF சேவையை நிர்வகித்து நடத்துகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பணியாளர் தனது
EPF சேமிப்பிற்கு ஒரு பங்களிப்பை வழங்க வேண்டும், மேலும் இதேபோன்ற பங்களிப்பை முதலாளியும் வழங்குகிறார். இது எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு வழங்கப்பட்ட நிதி. இந்த திட்டத்தில் ஊழியர் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தின் ஒரு
பகுதியை சேமிக்க முடியும், இதனால் அவர்கள் ஓய்வுபெறும் நேரத்தில் அதைப் பயன்படுத்தலாம். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் சம்பளம் பெறும் நபர்கள் தங்களது அடிப்படை + அன்பளிப்பு (Basic + Dearness Allowance) இல் 12% அல்லது
EPF-க்கு ரூ .780 பங்களிப்பு செய்வது கட்டாயமாகும். 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகளுக்கும், அடிப்படை சம்பளம் ரூ .6291 க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கும் EPF இல் பங்கேற்பது கட்டாயமாகும். மேலும், சேமிக்கப்பட்ட தொகை வட்டி சம்பாதிக்கிறது மற்றும் வரி விலக்குக்கு
தகுதியுடையது. EPF பற்றிய மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் என்னவென்றால், இது ஓய்வுக்குப் பிறகு பயன்படுத்தக்கூடிய முதலீட்டு திட்டமாக தேர்வு செய்யலாம். EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி வழியாக அதிக வருமானம் கிடைக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டுக்கும் எவ்வளவு வட்டி வழங்கப்படும்
என்பதை EPFO அறிவிப்பாக வெளியிடும். உதாரணமாக, இந்த நிதியாண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. EPFO சேமிப்புத் திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80c கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இது மட்டுமல்லாது EPF கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும்,
பல நன்மைகள் உள்ளன. இங்கு சில நன்மைகளை பார்ப்போம்.
1.ஓய்வூதிய திட்டம் (Employee Pension Plan):
இது ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு சிறிய தொகையை பென்சன் திட்டத்திற்கு பிடித்தம் செய்கிறது. இந்த தொகை ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
12 % இல் 3.67% ஊழியர்களின் கணக்கிற்கும், மீதமுள்ள 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது.
2.சிறந்த சேமிப்பு திட்டம் :
EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி வழியாக அதிக வருமானம் கிடைக்கிறது. 8.5% வட்டி வழங்கப்படும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கூட
இவ்வளவு வட்டி கிடைப்பதில்லை. இது நீண்ட கால முதலீட்டுக்கு நல்ல முதலீட்டு திட்டம்.
3.இலவச காப்பீட்டு வசதி:
உங்கள் EPF கணக்கு தொடங்கியவுடன், இயல்பாகவே இலவச காப்பீட்டைப் பெறலாம். ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) கீழ் ரூ .6 லட்சம் காப்பீடு கிடைக்கும்.
ஊழியர் பணிக்காலத்தில் இறந்தால், EPFO இன் செயலில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு, ₹ 6 லட்சம் வரை மொத்த தொகை கிடைக்கும். இந்த நன்மையை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கு வழங்குகின்றன.
4.வரி சலுகைகள்
வருமான வரியில் பணத்தை
மிச்சப்படுத்த EPF மிகவும் எளிய மற்றும் சிறந்த வழி. EPF கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 C இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும். ஆனால் புதிய வரிவிதிப்பு (New Tax Regime) முறையில் இந்த நன்மை நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உங்கள் வரியைக்
கணக்கிடுவதற்கு பழைய வரி முறையைத் (Old Tax Regime) தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த நன்மையை நீங்கள் பெறலாம்.
UAN (UNIVERSAL ACCOUNT NUMBER):
UAN என்பது 12 இலக்க தனித்துவமான நம்பர் ஆகும். UAN எண் மூலம், நீங்கள் எத்தனை முறை உங்கள் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றினாலும் UAN எண் மூலம்
அனைத்து EPF கணக்குகளையும் இணைத்துக்கொள்ளலாம். (ஒவ்வொரு நிறுவனத்திலும் உங்களுக்கு தனிப்பட்ட EPF கணக்கு துவங்கப்படும்.) நீங்கள் EPF கணக்கு வைத்துள்ள வரை அல்லது நீங்கள் பணி செய்யும் காலம் வரை அனைத்து கணக்குகளும் உபயோகப்படுத்தில் இருக்கும். எனவே UAN எண்ணை கொண்டு அனைத்து கணக்குகளின்
விபரங்களையும் சேர்ப்பதே இந்த UAN எண்ணின் பணி.
அதாவது வரலாறு முக்கியம் அமைச்சரே? போல இந்த UAN நம்மளுக்கு உதவுகிறது.
மேலும் UAN மூலம், EPF பாஸ் புத்தகத்தைப், நற்சான்றிதழ்களைப் புதுப்பித்தல், பழைய கணக்கை மாற்றுவது, முந்தைய உறுப்பினர் ஐடிகளை தற்போதையவற்றுடன் இணைத்தல், மாதாந்திர EPF பங்களிப்பு, SMS சேவை போன்ற தகவல் சேவைகளை செயல்படுத்துதல் போன்ற செயல்பாடுகளைச் செய்வதில் நிறைய எளிமை ஏற்பட்டுள்ளது.
இந்த அனைத்து வசதிகளையும் பெற, ஊழியர்கள் UAN portal லில் ஒரு கணக்கை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். KYC விவரங்களையும் பதிவேற்றவும் புதுப்பிக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
சரி இந்த EPF கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி என்று பார்ப்போம்:
வேலையிழந்தால் பிஎஃப் பணம் எடுக்க அனுமதி ஒரு மாத வேலையின்மைக்கு பிறகு EPF நிலுவை தொகையில் 75% வரையில் திரும்ப பெறலாம். இதே வேலையின்மை தொடர்ந்தால், மீதமுள்ள 25% தொகையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. சம்பளதாரரின் திருமணம் அல்லது மகன்/ மகள் திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க,
வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக, பணம் எடுக்கும் வசதி உண்டு. இதற்காக நீங்கள் Form 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இதே ஆன்லைன் மூலம் என்றால் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்
EPF கணக்கிலிருந்து பணம் எடுப்பது எப்படி? இதற்காக நீங்கள் https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/  என்ற இணையத்தில் சென்று UAN கொடுத்து Login செய்யவும். அதன் பிறகு Claim என்பதை கிளிக் செய்யவும். அதில் online services என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும். அதில் உங்களது தனிப்பட்ட விவரங்களை பதிவிடவும்.
அதன் பிறகு process for online claim என்பதை கிளிக் செய்யவும். அங்கு உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் தொலைப்பேசி எண் போன்றவை இருக்கும். அவற்றை சரி பார்த்தபின் Online Claim Proceed என்பதை தேர்ந்தெடுத்து கீழ் தோன்றும்
மெனுவில் PF ADVANCE (FORM 31) ஐ தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு பணம் எதற்காக எடுக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை உள்ளிடவும். பின்பு உங்களுக்கு தேவையான தொகை மற்றும் உங்கள் தற்போதைய முகவரியை நிரப்பவும். அதன் பிறகு Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்யவும். OTP ஐ உள்ளிட்டு
Validate OTP and Submit Claim Form என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்பு உங்களுக்கு உங்களது EPF தொகை வழங்கும் செயல்முறை தொடங்கும்.

UMANG App பயன்படுத்தியும் EPF கணக்கில் இருந்து எளிதாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதில் EPFO ஆப்ஷனை கண்டறிய வேண்டும்.
அதில் Employee Centric services என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Raise Claim என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது EPF UAN Number- ஐ பதிவிட வேண்டும். அதன் பிறகு உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Password-ஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து Submit என்பதை
கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து உங்களுக்கு Claim reference number அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம்.
எனினும் அரசின் இந்த வசதியை தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாருடன்
UAN Number, UMANG App, மொபைல் எண் ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
Information is Wealth!

மேலே உள்ள தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளத்தாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்னும் நல்ல தலைப்புடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.
@Karthicktamil86
@_VforViking
#DoYouKnow
#learningguy
#todaylearnt
#LGWeeklyposts
#LGpost8
You can follow @learning_guy_.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: