எங்க வீட்ல எல்லோரும் எங்க அண்ணியோட சொந்த காரங்க வீட்டு கல்யாணத்துக்கு போனாங்க, அன்னக்கி ஞாயித்து கிழம அதனால நானும் போனேன்... நாங்க எல்லாரும் கார்ல போனோம்.நாங்கன்னா நான், அண்ணன், அண்ணி. ஒரு வழியா கல்யாண மண்டபம் போயிட்டு கல்யாண வேலைய எல்லாம் பாத்துட்டு இருந்தோம். மாலை வாங்கணும்னு.
என்ன அனுப்பி வச்சாங்க, அங்க ஏதும் டூ வீலர் இல்ல, நடந்தே போய்கிட்டு மாலை எங்க கிடைக்கும்னு போய்கிட்டு இருந்தேன்.காலைல சாப்பிட கூட இல்ல. ஒரு ஒரு கிலோ மீட்டர் நடந்து போய்கிட்டே இருந்தேன். வழில விசாரிச்சப்ப, ஒரு பாலம் தாண்டி எறங்குனா, பூக்கடை இருக்குனு சொன்னாங்க, சரினு நன்றி சொல்லி..
நடக்க ஆரமிச்சேன். அந்த பாலத்து அடியில ரெண்டு பேரு கஞ்சா எல்லாம் அடிச்சிட்டு என்ன ஒரு மாதிரி பாத்தாய்ங்க, சரி நம்ம கண்டுக்காத மாதிரி போவோம்ன்னு, நடந்து போயிகிட்டே இருந்தேன்.டேய் தம்பி இங்க வானு அதுல ஒருத்த என்ன கூப்டான். நா நடைய வேகமெடுத்து ஓட ஆரமிச்சேன். பாலத்து எண்டுக்கு
போய் கிட்டு இருந்தப்ப, அங்க பாலத்து தூண்ல ஒரு மொரட்டு ஆளு என்ன புடிச்சிட்டான், அவிங்க மூனு பேரும் ஒன்னு சேந்து என்ன அடிச்சி கூட்டிட்டு போனாய்ங்க, நா எண்ணுட்ட இருந்த பணத்த எடுத்து கொடுத்தும் என்ன விடல, பாலத்து கீழ ஒரு எடுத்துக்கு என்ன வலுக்கட்டாயமா அழைச்சிட்டு போனாய்ங்க..
அங்க போயிட்டு ஒரு கட்டட வேல செய்றவய்ங்க தங்குற எடத்துல என்ன, கட்டி போடாய்ங்க. அப்புறம் அவிங்க உக்காந்து கஞ்சா அடிக்க ஆரமிச்சிடாய்ங்க. நா என்னடா பன்றதுனு யோசிச்சிட்டு இருந்தேன். கைல போனும் இல்ல. மண்டபத்திலேயே சார்ஜ் போட்டு வச்சிட்டு வந்துட்டேன்.
கொஞ்சம் நேரம் கழிச்சி, இந்த நீயா நானால அப்பா -மகள் எபிசோட் ல வர பொண்ணு மாதிரியே ஒரு பொண்ணு, என் மொபைல எடுத்துட்டு அங்க வந்துது,எனக்குனா ஒரே பயம், இங்க வாராத பாப்பா போயிடு, அப்புடின்னு சொல்றேன், அத மீறியும் என்னுட்ட செல் போனை குடுக்க கிட்டக்க வந்துட்டு, அவிங்க மூனு பேரும்
அங்க இருந்த தூண்ல ஒளிஞ்சி கிட்டே இதையெல்லாம் பாத்துட்டு இருத்தாய்ங்க, அந்த பொண்ணு போன கிட்ட வந்து காட்டுது, அதுல எங்க அண்ண வீடியோ காலுல, இன்னுமா மாலை வாங்குற, நாங்க இங்க வாங்கிட்டோம், அந்த பாப்பாவ அழைச்சிட்டு சீக்கிரம் மண்டபத்துக்கு வானு சொல்றான், டேய் இங்க நா மாட்டிக்கிட்டே டா
அப்படி னு சொல்லும் போதே செல் போன புடுங்கி கட் பண்ணிட்டாய்ங்க, என்னாஅடிச்சி புட்டு அந்த பொண்ண தூக்கிட்டு போய்டாய்ங்க, நானும் ரொம்ப ட்ரை பண்ணேன் முடியல, அந்த பொண்ணு சத்தம் போட்டுதுனு வாயில துணி வச்சி கைய கட்டி தூக்கிட்டு போய்ட்டாய்ங்க, எனக்கும் வாயில துணி வச்சி கத்தாத மாதிரி
வச்சிட்டு எங்கயோ போய்டாய்ங்க, நா கொஞ்சம் கொஞ்சமா அந்த கட்டுன கையிற கடிச்சி எடுத்து, ஒரு வழியா தப்பிச்சி, அக்கம் பக்கமெல்லாம் தேடி பாத்தேன், எங்கேயுமே அவுங்கள காணும், அந்த பொன்னையும் காணும், எனக்கு என்ன கவலை னா என்னால அந்த பொண்ணு மாட்டி கிச்சே னு தா, என்னால நடக்க கூட முடியல,
சரி நம்ம மண்டபத்துக்கு போய் நடந்த த சொல்லுவோம், அவிங்க கண்டு புடிச்சுறவாய்ங்கனு மெல்ல நடந்து போறேன்.. ரோட்டுல லிஃப்டு கேக்குறே ஒரு நாதாரியும் லிஃப்டு தரல, ஒரு வழியா மண்டபத்துக்கு போய்ட்டேன்... மொதல்ல போய் தண்ணிய புல்லா குடிச்சேன்.. அப்புறம் அண்ண, அண்ணி எங்கன்னு தேடுனேன்..
கால சாப்புட்டுக்கு போனேன், அங்க மதிய சாப்பாடு நடந்துட்டு இருந்தது, எங்க அண்ணனும், அண்ணியும் உப சரிச்சிட்டு இருந்தாங்க, நா வேகமாக போய் எங்க அண்ணன கூப்புட்டு தனியா போய், பொலம்புறேன், என்ன கடத்தி வச்சிருந்தாய்ங்க, நீ அனுப்புனீயே அந்த பொண்ண தூக்கிட்டு போய்ட்டாய்ங்க அப்புடின்னு,
சரி அது இருக்கட்டும் நீ மொதல்ல சாப்புடு, நா போய் complaint குடுக்கறேன், அப்புடின்னு சொல்லிட்டு என்ன உக்கார வச்சி, சாப்பாடு போட்டு, சாப்புட சொல்றான் என் அண்ணன், எனக்கும் பசிக்குல, நானும் ரெண்டு வாய் சாப்பிட்டு தேடுலாம்னு, ஒரு வாய் வாயில சோறு எடுத்து வச்சேன், அந்த பொண்ணு ஞாபகம்
வந்துட்டு, நீயெல்லாம் ஒரு மனுசனா னு என்ன நானே கேட்டு கிட்டேன், உடனே கைய கழுவிட்டு, போலீஸ் ஸ்டேஷன் எங்க இருக்குனு விசாரிச்சிட்டு, இருந்தேன், அது ரொம்ப தூரம்னு சொல்லிட்டாங்க, என்னுட்ட செல் போனும் இல்ல, திரும்பி தேடிகிட்டே அந்த (இடத்துக்குஎன்ன கட்டி வச்ச ) போனேன், ஆனா யாருமே இல்ல
எனக்குலாம் ஒரே குற்ற உணர்ச்சி, என்னால தானே அந்த பொண்ணு காண போய்ச்சினு.சரி எல்லார்ட்டயும் சொல்லி தேடலாம்னு மண்டபத்துக்கு திரும்பி நடித்தேன்.. அங்க மண்டபத்துல பாத்தா, அந்த மூனு பேரும், அந்த பொண்ணும் பரிசு வாங்கிட்டு நிக்குறாய்ங்க. என்னடா இதுன்னு கிட்ட போய் பார்த்தா. எல்லாரும் கை
தட்டி, சிறந்த கல்யாண நாடகம்னு சொல்லி அவிங்க நாலு பேரு பேரையும் சொல்லி, என் பேரையும் சொல்லி ரூ.5000 பரிசு குடுத்தாய்ங்க, அப்புறம் தான் தெரியும் இவிங்க இப்பிடி தான் எல்லாம் கல்யாணத்திலயும் ரியாலிட்டி நாடகம் போட்டு சிறந்த நாடகத்துக்கு பரிசு குடிப்பாய்ங்களாம்,
அட போங்கடா போக்கத்த பயலவோலா னு, என் செல் போன மட்டும் வாங்கி கிட்டு, நேரா சாப்பாட்டு பந்தியில போய் உக்காந்து சாப்பிட ஆரமிச்சேன்... இந்த கதை எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணுங்க (இது உண்மைலயே என் கனவுல நடந்த சம்பவம் ).. நன்றி வணக்கம்...
நான் எழுதிய கதை எப்படி இருக்குனு கொஞ்சம் நேரம் இருந்தா படிச்சிட்டு சொல்லுங்க @major_shammu, @saattooran, @Karthicktamil86, @ssuba_18, @saikibrahim