Thread கொஞ்சம் நீளம்தான்🤨(1/23).
என்ன செய்ய?
வரலாறு முக்கியமல்லவா!🤩

கல்வி வரலாறு இதோ🤗

ஏன் நமக்கு கல்வி மறுக்கப்பட்டது...?
கல்வி மறுக்கப்பட்ட நமக்கு அந்த கல்வி கிடைத்தது எப்படி ?

1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவின் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக,
2/23-வருடம் தோறும் வழங்கிய 20 லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்! அவ்வளவு பணத்தில் ஒரு ரூபாகூட இந்திய பொதுமக்களுக்கு போய்
3/23-சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, அறிவியலோ வளரவே இல்லை.
அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலைகள் நடத்தி சமஸ்கிருதம் வளர்க்க தான் செலவாயிற்று என்ற தெரியவந்தபோது அது பிரிட்டிஷாருக்கு அதிருப்தியை தந்தது.
காரணம் பிரிட்டனில் கல்வி என்பது மதச்சார்பற்று எல்லா மனிதருக்கும் பொதுவானது.
4/23-பிரிட்டனில் பெண்களும் படிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் இந்தியாவில் பிராமணரைத் தவிர வேறு எந்த சாதியினரும் கல்வி
கற்கவே கூடாது என்கிற விதி இருந்தது. இந்தியாவின் இந்த விசித்திரமான வழக்கத்தை ஆய்வு செய்யும் பணி தாமஸ் பாபிங்டன் மெக்காலே எனும் ஆங்கேலேய அதிகாரிக்கு வழங்கப்பட்டது.
5/23-தாமஸ் மெக்காலே ஒரு எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், பல மொழி வித்தகர், அடிமை முறைக்கு எதிரானவர், முற்போக்கு கருத்தாளர், பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்கிற கொள்கை உடைய பிரிட்டிஷ் அதிகாரி. இந்த லார்ட் மெக்காலே இந்தியாவிற்கு வந்தார். சமஸ்கிருதமும் பர்ஷியனும் கற்றுக்கொண்டார்.
6/23-அவருக்கு ஏற்கனவே கிரேக்கமும், லத்தீனும் தெரியும் என்பதால், அதே வேர் சொற்களை கொண்ட சமஸ்கிருதம் அவருக்கு எளிதில் புரிந்துபோனது.

ஆழமான ஆய்விற்கு பிறகு, “இந்தியாவில் கல்வி” என்ற அறிக்கையை 1835-ல் வெளியிட்டார். இந்த அறிக்கை Minute on Indian Education என்றும் பிறகு
7/23-Macauley’s Minutes என்று புகழ் பெற்றது.
அந்த அறிக்கையில் மெக்காலே சொன்னது என்ன ?
1. சம்ஸ்கிருத நூல்களில் இருக்கும் குறிப்புகளை அனைத்தையும் ஒன்று திரட்டிப் பார்த்தாலும், அவை பிரிட்டிஷ் ஆரம்ப கல்வி புத்தகங்களின் உள்ளடக்கத்தைவிட குறைவான தகவல்களாகவே உள்ளன.
2. இந்தியாவில் இது வரை
8/23-சமஸ்கிருதத்திலும் அரபியிலும் கற்பிக்கப்பட்டு வந்த பாடங்கள் அறிவியலுக்கு உகந்தவை இல்லை

3. இந்தியர்கள் இதனாலேயே பிற்போக்கான, காட்டு மிராண்டித் தனமான மூடநம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள்

4. அதனால் இந்திய மொழிகளில் பாடம் நடத்துவது வீண் செலவு. அது அனைவருக்கும் போய் சேரவில்லை.
9/23-மெக்காலே, எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்; அந்த கல்விக்கான செலவை பிரிட்டிஷ் அரசே மேற்கொள்ள வேண்டும் என்றார்.
வேறு சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இது ஆபத்தான போக்காக தோன்றிற்று. இந்தியர்களை தமக்கு சமமான நாகரீக நிலைக்கு கொண்டு வர முயல்வது வேண்டாத வீண் செலவு
10/23- என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஆனால் தாம்ஸ் மெக்காலே பிரிட்டிஷ் வரலாற்று நூல் எழுதியவர் என்பதால் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர். மிக சிறந்த அறிஞர், நாணயமிக்கவர், மனிதாபிமானி, அப்பழுக்கற்ற அறச்சிந்தனையாளர் என்பதால் யாராலும் அவரை நேரடியாக எதிர்க்க முடியவில்லை.

1833-ஆம்
11/23-ஆண்டு இந்தியாவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

அது வரை கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் இருந்த இந்தியா, 1833 முதல் நேரடி பிரிட்டிஷ் காலனியாக அறிவிக்கப்பட்டது.

லார்ட் பில்லியன் பெண்டிங் பிரபு என்பவர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார்.
12/23-அவர் பொறுப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்: "பெங்கால் சதி தடைச் சட்டம்"

இந்தியாவில் ஆங்கிலேயருக்கு பிடிக்காத வழக்கம் ஒன்று உண்டு என்றால் அது “சதி ஏறுதல்” எனும் கொடூரமேயாகும்.

இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால், மனைவி மறுமணம். செய்து கொள்ளலாம். ஆனால் இந்தியாவிலோ கணவன்
13/23-இறந்தால், கணவனின் சிதையில் அவளும் குதித்து சாகவேண்டும் என்பதே சதி அல்லது உடன் கட்டை ஏறுதல் என்னும் சடங்கு.

பிள்ளைகளைப் பெற்றிருக்கும் ஒரு பெண், தன் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு சதியில் குதித்து சாவது ஒரு கொடுமை…

ஆரோக்கியமான ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்வது பெரும்
14/23-குற்றம் என்பதை இந்துக்கள் எவரும் ஏற்கவில்லை
மனைவி உடங்கட்டை ஏறி மாண்டால், கணவன் அவனுடைய ஈரேழு ஜென்மங்களில் செய்த அத்தனை பாவங்களும் தொலைந்துபோய், அடுத்த பிறவியில் காசியில், புனித நதியாக கங்கைக் கரையில் ஒரு பிராமணனாக பிறக்கும் நல்வாய்ப்பை பெறுவான். அதனால் தன் கணவனுக்கு இந்த
15/23-பாக்கியம் கிடைக்க வேண்டி கற்பில் சிறந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அவசியம் என்று நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் அந்தநாள் இந்துக்கள். ஆனால் அந்த பெண் தீயில் குதித்தால் அவள் தீயில் கருகி வலியில் துடிப்பாளே?
இல்லை! உண்மையான கற்புக்கரசிக்கு வலிக்காது! எல்லாருக்கும் கிடைக்குமா இந்த
16/23-பாக்கியம்..??!! அதுக்கெல்லாம் கொடுப்பனை வேண்டும்!!!... என்று சொல்லி, கதைகட்டி விட்டார்கள் கருட புராணம் எழுதிய பிராமணர்கள்.

இந்த கதைகளை நம்பி, சத்திரிய பெண்களையும், வைசிய பெண்களையும் மானாவாரியாக உடன்கட்டை ஏற்றி கொன்றுகொண்டிருந்தார்கள்!

ஆனால் சூத்திர பெண்கள் உடன்கட்டை
17/23-ஏறுவதில்லை. காரணம் சூத்திர பெண்கள் வேலைக்கு போனார்கள். அவர்கள் ஊதியம் ஈட்டினார்கள். உழவு, நெசவு, கொசவு, பூ தொடுத்தல், அரண்மனையில் வேலை செய்வது என்று சூத்திர பெண்கள் குடும்பத்திற்கு தங்கள் வருவாயை கொண்டு வந்ததால், அவர்களை யாரும் உடன்கட்டை ஏற்றத் தயாராக இல்லை.
18/23-பிராமண, ஷத்திரிய, வைஷிய பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டாமல், பொருளாதாரத்தில் பங்கெடுக்காமல் இருந்ததால், அவர்களுக்கு சமூக மதிப்பு இல்லை. அதனால் அந்த பெண் சதி ஏறி செத்தால், அவளுடைய பிள்ளைகளை தவிர வேறு யாருக்கும் எந்த இழப்பும் இல்லை…

இந்தியர்கள் இந்த கருட புராண பொய்களை
19/23-நம்பி இப்படி இளம் பெண்களை கொல்வதை பார்த்த ஆங்கிலேயருக்கு கோபம் எழுந்தது.

பிராமணர் எழுதிய சமஸ்கிருத நூல்கள் பலவற்றை அவர்கள் படித்தார்கள். அந்த நூல்களில் இருந்த சுயநலமும், தந்திரமும், ஏமாற்றுத்தனமும் அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது. இந்த சமஸ்கிருதத்தினை வளர்க்க நாம் இருபது
20/23-ஆண்டுகளாக மானியம் வழங்கி ஏமாந்திருக்கிறோமே என்கிற கோபமும் இருந்தது !!

சதியை தடை சட்டத்தை இயற்றிய கையோடு, லார்ட் மெக்காலேவின் அறிவுரையின் படி, அடுத்த அதிரடி சட்டத்தை இயற்றினார் லார்ட் பெண்டிங்:

இனி பிரிட்டிஷ் இந்தியா முழுக்க, ஆங்கிலமே கல்விக்கான மொழி!
21/23-ஆங்கிலவழி கல்வி சட்டம் 1835 முதல் அமலானது.
குருகுலம், வேத பாட சாலை, மதார்சா எனும் மத கல்விக்கு பண உதவிகள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், அறம், உடல் பயிற்சி என்று சர்வதேச தரம்
22/23-வாய்ந்த கல்வி இந்தியர்களுக்கு கிடைக்க ஆரம்பித்தது.

1835ல் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரி, அடுத்த ஆண்டே கல்கத்தாவில் பொது நூலகம்

1847ல் ருர்கியில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி.

1848ல் கல்கத்தாவில் பெண்களுக்கான பிரத்தியேகப்பள்ளி

1858ல் கல்கத்தா, சென்னை, மும்பாய்
23/23- ஆகிய நகரங்களில் பல்கலைகழகங்கள் துவங்கப் பட்டன.....

இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு இந்தியர்களுக்கு கல்வி எனும் ஆயுதம் கிடைத்தது.

தாம்ஸ் பாபிங்டன் மெக்காலேதான் நமக்கு கல்வி அளித்த வள்ளல் ..!!

கல்வி - அது வெரும் சொல் அல்ல!
2000வருட இடைவெளியை மீட்டெடுத்த வரலாறு!
You can follow @satheshdurairaj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: