1/n கர்ணண் படமும்: அதன் பயணமும்

கர்ணன் படம் வெளிவந்ததிலிருந்து நமது திமுக உடன்பிறப்புக்களிடம் இந்தப் படம் குறித்தான கேள்வி ஒன்று எழுகிறது? இந்தப் படத்தில் குறிப்பிடப்படும் கொடியன்குள பிரச்சனையை எதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் பொடியன்குளம் என மாற்றினார்?.
2/n 1995 ஜெயலலிதா ஆட்சியில் நடந்ததை கலைஞர் ஆட்சியில் நடந்தது போல் 1997 எனக் காட்டுகிறாரே!! வருடத்தையும், ஊரின் பெயரையும் சரியாகச் சொல்லாத மாரி செல்வராஜ்க்கு ஆளுகிற வர்க்கத்தை பார்த்து பயமா? என்றெல்லாம் நம் உடன் பிறப்புகளே கேட்கின்றனர்.
3/nஅதற்கான பதில்:
கலைஞரின் பராசக்தி படம் மிகப்பெரிய முற்போக்கு படமாகவும், தமிழ் சினிமாவின் பாதைக்குப் புதிய அத்தியாயமிட்ட ஒரு படமாகவும் அது அமைந்தது. அந்தப் படத்திலும் இன்று நீங்கள் கேட்கிற “பொடியன்குளம்” பெயர் பிரச்சனை போல் ஒரு பிரச்சனை இருந்தது.
4/n அது என்ன பிரச்சனையென்றால், அந்தப் படத்தில் “கோயில் பூசாரியைத் தாக்கினேன்… எதற்காக? கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிக் கூடாது என்பதற்காக..” என்று ஒரு வசனம் வரும்…
5/n ஆரம்பத்தில் அந்தப் படத்திற்கான வசனமே வேறு… “பூசாரியைத் தாக்கினேன்..” என்பதற்கு முதலில் “ கோயில் குருக்களைத் தாக்கினேன்..” என்பதைத்தான் வசனமாக எழுதவிருந்தார் கலைஞர்…
6/n ஆனால் “குருக்கள்” என வசனம் வைத்தால் சென்சார் குழுவில் அவாள்தான் இருப்பா என்பதால் சென்சாரை மனதில் வைத்தே “குருக்கள்” என்பதற்கு பதில் “பூசாரி” என மாற்றினார் கலைஞர்.

அப்படித்தான் மாரி செல்வராஜூம்
7/n கொடியன்குளத்திற்குப் பதில் பொடியன்குளம் என சென்சார் பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டே மாற்றியிருக்கிறார்… கொடியன்குளம் என நேரடியாகப் பெயர் வைத்திருந்தால் படம் ரிலீஸாவதில் பிரச்சனை வந்திருக்கும்.
8/n இரண்டாவது அந்த 1997 என்பதற்கு என்ன காரணம் எனக் கேட்கும் என் போன்ற உடன்பிறப்புக்களுக்கு நான் அறிந்த விளக்கத்தைத் தருகிறேன்…

படத்தின் தொடக்கத்தில் '1997 முன் பகுதியில்” என கதை பயணமாகிறது.
9/n இதற்கான அர்த்தம் என்னவென்றால் 1997 வது வருடத்திற்கு முந்தைய வருடங்களில் நடக்கிற கதையென்றே இயக்குநர் அதில் குறிப்பிடுகிறார்.

மாறாக, 1997ன் முன் பகுதியில் என அவர் குறிப்பிட்டிருந்தால் infront of 1997 என அர்த்தம்.
10/n அதாவது 1997 ம் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நடந்த கதை என்பது போல அமைந்திருக்கும்.. ஆனால் இயக்குநர் அப்படி குறிப்பிடவில்லை. 1997 முன் பகுதியில் எனவே குறிப்பிட்டிருந்தார். அதாவது in before 1997 என்பதாகவே அர்த்தம்.
11/n அதற்கான விளக்கத்தையும் தருகிறேன்… 1995-96 கால கட்டத்திலேயே இந்தக் கொடியன்குளம் சம்பவமும், ஆளும் அரசின் காவல்துறையின் அராஜகமும் அமைந்திருக்கும். இப்படியாக கதை சென்று கொண்டிருக்கையில் எதற்காக 1997 என்ற வருடத்தையும் குறிப்பிட வேண்டும் என நீங்கள் கேட்கலாம்…
12/n படத்தின் கடைசி பகுதியில் கர்ணனை காவல்துறை கைது செய்து கொண்டு போவதோடு பத்து வருடங்களுக்குப் பிறகு… எனப் பபடத்தில் குறிப்பிடப்பட்டு, கர்ணனின் அக்கா தன் தம்பியிடம் கர்ணனின் கைதுக்குப் பிறகு
13/n நடந்த விசயத்தை தன் தம்பியிடம் தெரியப் படுத்துவது போல் பின்னூட்டக் குரல் வரும்… அதில் கர்ணனின் அக்கா பேசுவது:

“நம்ம ஊருல அந்த சம்பவம் நடந்த பிறகு யார் யாரோ நம்ம ஊருக்கு வந்தாங்க… நிறைய கவர்ன்மெண்ட் ஆஃபிசர்ஸ் வந்தாங்க…
14/n அதுக்கப்பறம் அவுங்கள்லாம் பேசி பிரச்சனையை சரி பண்ணுனாங்க.. அதுக்கப்பறம் நம்ம ஊருக்கு மினி பஸ் வந்துச்சு.. “ என்பது போல் அந்தப் பெண் பேசுவார்..

இந்தப் பெண் பேசிய அந்த மினி பஸ் சம்பவங்களும்
15/n இயக்குநர் படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்ட '1997 முன் பகுதியில்” என்ற பகுதிக்குள்ளேயே அடங்கும்… 1995-96 ல் நடந்த கொடியன்குள பிரச்சனையைக் குறிப்பிட்ட இயக்குநர் 1997 ல் அந்தப் பிரச்சனையை சரி செய்து
16/n எங்கள் ஊருக்கு 'மினி பஸ்' மூலம் நல்லது நடந்திருக்கிறது என திமுக ஆட்சியை உயர்த்தி பிடித்தே காட்டியிருக்கிறார். இதன்படி கொடியன்குள பிரச்சனை நடந்து அந்த பிரச்சனைக்கான தீர்வு கொடுத்த
17/nதிமுக ஆட்சி வரையிலான பயணத்தைக் குறிப்பிடவே இயக்குநர் மாரி செல்வராஜ் 1995-97 என்பதை 1997 முன் பகுதியில்(In before 1997) எனக் குறிப்பிட்டுள்ளார்..

இதுதான் இந்தப் படத்திலிருக்கும் தெளிவும் கூட.. இதை எனது பெரும் மரியாதைக்குரிய திமுக உடன்பிறப்புக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
18/n கடைசியாக ஒன்று:

இந்தப் படத்தில் மிக நுட்பமாக ஒரு விசயத்தை இயக்குநர் காட்டியிருப்பார். அது என்னவென்றால், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் தலை நிமிர்ந்த குற்றத்திற்காக காவல்துறையினர் காவல் நிலையத்தில் அவர்களை மனசாட்சியில்லாமல் தாக்கும் போது
19/nஅந்த காவல் நிலையத்தின் பெயரை க்ளோஸ் அப்பில் தெளிவாகக் காட்டியிருப்பார். அப்படி அந்தக் காவல் நிலையத்தில் அவர் காட்டிய பெயர் "மணியாச்சி" .. இங்கு மணியாச்சி என்ற பெயர் வைத்திருப்பது தன் சாதி வெறிக்காக தாழ்த்தப்பட்ட மக்களை அக்ரஹாரத்திற்குள்
20/n அழைத்து வந்த ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற பார்ப்பன வாஞ்சிநாதனின் நினைவால் பெயர் வைத்திருக்கும் இந்தக் காவல் நிலையத்தில் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என்பது போல் காட்டியிருப்பார்.
21/n இந்த இடத்தில் இந்த சாதி பிரச்சனைக்கு வேரே பார்ப்பனர்கள்தான் என்பதை காட்டியதில் அவர் தெளிவாக இருக்கிறார். மற்றொன்று மணியாச்சி என்பது பெண்ணென்பதால் இந்தப் பெயர் இந்த சாதிப் பிரச்சனைக்குக் காரணமான மன்னார்குடி மாஃபியாக்களை எனக்கு சுட்டிக் காட்டுவது போல் இருக்கிறது.
22/n 18/nகலைஞர் இன்று உயிருடன் இருந்திருந்தால் “ நான் எழுதியிருக்க வேண்டிய படத்தை தம்பி மாரி செல்வராஜ் மிக நேர்த்தியாக எடுத்திருக்கிறார் என பாராட்டியிருப்பார்.. அவரது உடன்பிறப்புக்களாகிய நாமும் கலைஞர் வழி நின்று கர்ணனின்
23/n க்ளைமாக்ஸில் கொடியன்குளமே ஆடிப் பாடி கொண்டாடியது போல் பாண்டவர்களின் சாதிய ஆணவத்தை வென்ற கௌரவர்களின் தளபதி கர்ணனை நாமும் கொண்டாடுவோம்…

இப்படிக்கு,
திமுக உடன் பிறப்பு
நா.செல்வநாதன்.
You can follow @Nathan98847006.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: