படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். படித்தவர்கள் அரசியல் பேச வேண்டும். இப்படி சொல்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம். இதற்கு பின்னால் உள்ள உளவியலை ஆராய்ந்தால், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் படிக்காதவர்கள், பள்ளியை கூட முடிக்காதவர்கள், இவர்கள் எல்லாம் அரசியலுக்கு லாயக்கில்லை,
அரசியலுக்கு வருவதற்கே “நீட் தகுதி தேர்வு” வைக்க வேண்டும் என பேசிக்கொண்டிருப்பார்கள். இவர்களின் பேச்சு எங்கு தொடங்கியிருக்கும் என்று நீங்கள் “நூல் பிடித்து” தேடிப்பார்த்தால், “ராஜாஜி காலத்துக்கு அப்புறமா..” என அக்காரவடிசல் வடியும் ரங்கராஜன் என்கிற சுஜாதா போன்றோர் இருப்பார்கள்.
அதைத்தான் சங்கர் முதல் ஷங்கர் வரை உள்வாங்கி திரும்ப துப்பிக்கொண்டு இருப்பார்கள்.

உண்மையில், இவர்களுக்கு காண்டு என்னவென்றால், படிக்காத தலைவர்கள் என இவர்கள் சொல்லும் தலைவர்கள் தான் மக்களை அதிகம் படிக்க வைத்தார்கள், படிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
நீங்கள் படிக்காமல் போனது, “உங்கள் விதியினால் அல்ல. ஆயிரமாண்டு கால சதியினால்” என புரிய வைத்தார்கள். பெரியார் அச்சாணியாக இருந்தார், அவரை சுற்றி பல தலைவர்கள் சுழன்றார்கள். விளைவு, உயர் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இன்று விளங்குகிறது.
பள்ளிக்கு செல்லாத காமராசர் மூடிய பல பள்ளிக்கூடங்களை திறந்தார். கல்லூரிக்கு செல்லாத கலைஞர் கருணாநிதி பல பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்.

இன்று,தமிழர்கள் நடுவில் பீடித்துப் போன ஆரியமாயையான சாதி மத சகதியில் வீழாமல் கல்வியை கெட்டியாய் பிடித்துக்கொண்டார்கள்.
இன்று, கீழடி காலத்தில் நாங்கள் படித்தோம் என மார்த்தட்டி கொள்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் நடக்க போகிற அகழ்வாராய்ச்சி இப்படி சொல்லலாம். தமிழர்கள் ஆதியில் படித்தவர்கள். பின்பு ஆரியசதியில் படிப்பு மறுக்கப்பட்டவர்கள்.
கடைசியில் திராவிட புத்தொளியில் கல்வியை கெட்டியாக பிடித்துக்கொண்டவர்கள் என்று..

திராவிட தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவருமே படிக்காதவர்கள் இல்லை. திராவிட மூலவர்கள் எனச் சொல்லப்படும் “வெள்ளுடை வேந்தர்” தியாகராயர், டாக்டர் நடேசனார்,
டாக்டர் தாராவட் மாதவன் ஆகியோர் நன்கு படித்தவர்களே. ஆனால், அவர்கள் ஏன் கொண்டாடப் படுகிறார்கள் என்றால், அவர்களின் படிப்பு “தன்னலமாக” மற்றும் நின்றுவிட வில்லை. அது “எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்” என்கிற பொதுநலத்துக்காக இருந்தது. விளைவு, திராவிட இயக்கத்திற்கான விதையாக
“நீதிக்கட்சி” உருவானது.

படித்தவர்கள் அரசியல் பேசினால் எத்தனை வீரியமாக இருக்கும் என்பதற்கு டாக்டர் தாராவட் மாதவன் என்கிற TM Nair ஒரு எடுத்துக்காட்டு. அவரின் உரைகளை, எழுத்துக்களை வாசித்தால், அவர் வெள்ளைகாரர்களுக்கு சிகிச்சை தந்த மருத்துவர் மட்டுமல்ல,
நம் ஊரில் புறையோடிப்போய் இருக்கும் சனாதன சகதியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவராகவும் அவர் இருந்தார் என்பது புரியும்.

இவர்களை போன்றவர்கள் போட்ட விதையினால் படித்ததாலோ என்னவோ, தமிழ்நாட்டு கல்வியில் பயின்றவர்கள், தன்னலமாக மட்டும் இல்லாமல்,
பொதுநலன் சார்ந்தும் இயங்குபவர்களாக இருக்கிறார்கள்.

அதற்கு தற்கால எடுத்துக்காட்டில் குறிப்பிடத்தகுந்தவர் டாக்டர் Sen Balan. படித்தவர்கள் அரசியல் பேசவேண்டும் என காலம் காலமாக பேசுபவர்கள், சென்பாலன் போன்றோர் அரசியல் பேசும் போது, பதறுகிறார்கள்.
காரணம், சென்பாலன் போன்றவர்கள், “சிஸ்டம் சரியில்லை என்று மய்யத்தனமாக” மேலோட்ட அரசியல் பேசுவதில்லை. எந்த ஒரு பிரச்சனையையும் ஆராய்ந்து அடிவேரை கண்டுபிடித்து “அறுவை சிகிச்சை” செய்யும் சமூக மருத்துவர்களாக இருக்கிறார்கள்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கிற திராவிட சமூகநீதி அரசியலை அடிநாதமாக கொண்டிருக்கிறார்கள். பாதையை தேடாமல் பாதையை உருவாக்குகிறவர்களாக இருக்கிறார்கள்.

இனியும் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என ஜல்லியடிக்க முடியாது. அவர்கள் அரசியலுக்குள் வந்து பலகாலம் ஆகிறது.
அவர்கள் அரசியல் பேச ஆரம்பித்ததன் விளைவு, அவர்களை போலவே எண்ணற்றவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

இங்கு பல சென்பாலன்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களை திராவிடம் உருவாக்கிக்கொண்டேயிருக்கும்.

மருத்துவர் @senbalan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
You can follow @RajarajanRj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: