இளையராஜா எதாவது ஒரு இடத்தில் ஒருமுறை நான் சாதிய ரீதியாக வேறுபடுத்தி பார்க்கப்பட்டேன்னு சொன்னா கூட போதும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுக்க அவருக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கும். அதை அவர் தனக்கு சாதகமாக எப்படி
வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஆனால் இன்றளவும் அதுபோன்ற ஒரு வார்த்தை கூட தன் வாய்வழி வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். அவர் தன்மீது எப்போதும் அடுத்தவரின் இரக்கமோ, ஆதரவோ சாதிய ரீதியாக வந்துவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருப்பார்.
இன்று அவர் அடையாத புகழ் இல்லை. அவர் நினைத்தால் இன்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவருக்கு ஆதரவாக பெரும் கூட்டம் வரும். ஆனால் இந்த மண்ணையும், கலாச்சாரத்தையும் இன்றளவும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
சனாதன பூமி இந்த மண் செய்ய புண்ணியம் வேறு எந்த மண் செய்திருக்கிறது என்று தன் மண்ணையும், கலாச்சாரத்தையும் பெருமையாக பேசி சிலாகிப்பார்.

இதே சமூகத்தில் தான் அவர் உயரம் தொட்டார். அவரைப் பார்த்தால் வணங்காதவரே இந்தியாவில் இல்லை.
சாதிக்க சாதி என்றுமே தடையில்லை. சாதிக்க வேண்டும் என்கிற மனவலிமை தான் வேண்டும். ஆடத்தெரியதாவன்தான் தெரு கோணலாக இருக்கிறது என்று சொல்லி அமர்ந்துவிடுவான்.....

Thanks to Aouthor Pakya
You can follow @itz_katti.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: