அதிகமான முஸ்லிம் மக்கள் அதிக மதப்பற்றும் மதத்தின் பெயரால் சொல்லப்பட்ட அத்தனை மூட நம்பிக்கைகளையும் நம்பும் அதனை தொடர்பவர்களாக இருக்கக்கூடியவர்கள். இந்து மக்கள் எப்போதும் தான் ஒரு இந்து என்ற உணர்வுடனே வாழ்ந்து கொண்டிருக்கமாட்டார்கள். முக்கியமாமா தமிழ்நாட்டில், அந்த இந்து என்ற
உணர்வைப் புகுத்தத்தான் வட இந்திய ராமர் பெயரில் நடக்கும் அரசு போராடிக்கொண்டிருக்கிறது. இருந்தும் நாங்கள் இந்து இல்லை, இந்து மதத்தில் இன்ன இன்ன சிக்கல் இருக்கிறது என்று வாதாடிக்கொண்டு தொடர்ந்து அவர்கள் முன்வைக்கும் காரணங்களை உடைத்துக்கொண்டே இருக்கிறோம். உண்மையில் இது மதப்பற்றற்று
செய்யும் செயல்கள் இல்லை, அப்படி ஒரு மதபற்று பழக்கத்தில் நாம் வளரவில்லை என்பதுதான் உண்மை. அதிகபட்சமாக வீட்டில் சாமி கும்பிடும்போதோ கோவில் வெளியில் நிற்கும்போதோ, ரிலீஜியனை நிரப்பும்போதோ உணர்வார். ஒருவேளை இப்பெரும்பாண்மை மக்கள் தாங்கள் இந்து என்று எப்போதும் உணரும் தருணம்
ஏற்பட்டுவிட்டால், மத அரசியலில் வீழ்ந்துவிட்டால் வீழப்போவது அவர்கள் இல்லை, சிறுபான்மையினாரான நீங்கள்தான். கிறிஸ்த்துமஸ்க்கும் ரம்ஜானுக்கும் தீபாவளிக்கும் வீட்டுக்கு வீடு மாறிக்கொண்டிருக்கும்
இனிப்புவகைகளின் எண்ணிக்கைக் குறையும், எதிரில் பார்க்கும்போது பக்கத்துவீட்டு ஜெசிமாவாக
இல்லாமல் முஸ்லிம் ஜெசிமாவாகத் தெரியத்தொடங்குவீர்கள். ஒன்றாகத் தொழில் செய்யும்போது ஏதோ ஒன்று மனதுக்குள் இடறத்தொடங்கும். உங்கள் மதத்தின் உள்ள மூட நம்பிக்கைகளும் அதை அதிதீவிரமாக நீங்கள் பின்பற்றிவிட்டு எங்கள் மதம் எப்போதும் சரியென நீங்கள் பேசிக்கொண்டிருந்தால் RSS ஊடுருவ நினைக்கும்
இந்த நேரத்தில் இது இன்னமும் தீவிரப்படுத்தும். இது தமிழ்நாடு, மதங்களுக்கும் மதப்பற்றுகளுக்கும் அப்பாற்பட்ட மண் என்பதை அறிவீர்கள். இருந்தும் பொதுவில் உங்கள் மதத்தின் மூடநம்பிக்கைகள் உடையும்போது உங்கள் மதப்பற்றைக் காட்டாமல் அதனுடன் சேர்ந்து உடைக்கத்தொடங்கும்போதுதான் இன்னமும்
நம்மிடையே இணக்கம் ஏற்படும். பல பெரியாரிய முஸ்லிம்கள் இருக்கிறார்கள். பகுத்தறுவுவாதிகள் இருக்கிறார்கள். அவர்களைப் பிடித்துவைத்துக்கொண்டு மதப்போர்வையில் நடப்பதைப் பேசித் தெளியப்பாருங்கள். அந்த சங்கிகள் இந்து பொந்துனு வராம பாத்துக்குறது எங்க பொறுப்பு. அவர்கள் உங்களை முன்வைத்து
பேசி மத உணர்வைத் தூண்டுவதற்கு ஏற்ற காரணங்களையும் இடத்தையும் தராமல் இருப்பது உங்கள் பொறுப்பு.

குறிப்பு : இப்படி மதத்தைப் பேச வைப்பதே சங்பரிவாரின் நோக்கம், அதன்மூலம் விவாதங்களையும் பிரிவினையும் தூண்டிவிட முடியும் என்ற நம்பிக்கை. இருமதத்தையும் வெவ்வாறு கூருபிரித்து ஆராய்ச்சி
செய்வதுபோல பேசாமல் இருப்பது நம் கடமை. அவர்கள் சொல்லும் காரணங்களை அடிப்பது மத்திற்கும் இருக்கும் மூடத்தனைத்தை உடைப்பதுமே செய்யவேண்டியது. நமக்குள் பேசி சண்டைபோட்டு மதத்திற்கு முட்டுகொடுத்து நிற்பதில்லை.

So no more arguments in this thread with religion supporters.
You can follow @DILIPDRAVID.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: