உலகெங்கும் உள்ள நாடுகளில் இந்தியாவிற்கு நூற்றுக்கணக்கான தூதரகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். உங்களுக்கு தெரிந்தவர்களோ இல்லை உறவினர்களோ யாராவது தூதரகங்களில் வேலை பார்க்கிறார்களா?
இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதி மன்றங்களிலும் ஆயிரக்கணக்கான நீதிபதிகள் பணியாற்றுகிறார்கள், உங்களுக்கு தெரிந்தவர்களோ இல்லை உறவினர்களோ யாராவது அங்கு நீதிபதிகளாக இருக்கிறார்களா?
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜெனரல் மேனஜர்களாக இருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது உங்களுக்கு தெரியுமா? அவர்கள் தான் நமது சேமிப்பான பல்லாயிரம் கோடிகளை வட நாட்டு முதலாளிகளுக்கு திரும்பி வராத கடனாக தானமளிக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.
சென்னை IITயில் நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் வேலை பார்க்கிறார்கள், உங்கள் உறவினர் யாராவது அங்கு வேலை பார்க்கிறார்களா?

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு கேபினட் செக்ட்டரியாக இருந்த ஆயிரக்கணக்கானோரில் உங்கள் உறவினர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா?
மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் உங்கள் உறவினர்களோ தெரிந்தவர்களோ வேலை பார்த்திருக்கிறார்களா?

மத்திய உளவு அமைப்புகளான் IB, RAW போன்றவற்னறில் ஒரு பியூன் வேலையிலாவது உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்திருக்கிறார்களா?
பல்லாயிரம் கோடி புரளும் ராணுவ தளவாடங்களுக்கான உதிரி பாகங்களை வாங்கி விற்கும் கமிசன் ஏஜன்ட்களாக உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?
பல்லாயிரம் கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் CEO, CFO, CIO போன்ற பொறுப்புகளில் உங்கள் உறவினர்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ இருக்கிறார்களா?
நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் அதிகபட்சம் ஏதாவது சாஃப்ட்வேர் நிறுவனத்தில் புரோக்கிராம் எழுதிகிற முதல் தலைமுறை பட்டதாரிகள், அல்லது முதல் தலைமுறையில் படித்து் மருத்துவரானவர்கள்.
நான் மேலே சொன்ன கேள்விகளை SV சேகர், சுமந்த் C ராமன், பத்ரி சேஷாத்ரி, அனந்தகிருஷ்ணன் பக்‌ஷிராஜன் போன்றவர்களிடம் கேட்டால் என்ன பதில் இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.
படித்து முடித்த பின்பு உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றால் எந்த அளவிற்கு உழைக்க வேண்டுமென்பதையும் அவர்களுக்கு வேலை என்கிற பயமே இல்லாத சமூக பாதுகாப்பு இருப்பதையும் நினைத்துப் பாருங்கள்.
ஒரு வேளை வேலை கிடைத்தாலும் நாளை நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும்போது யார் தலை முதலில் வெட்டப்படும், அதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்பதையும் சிந்தித்து பாருங்கள்.
இத்தனை காலம் திமுக எங்கள் வாழ்ககையை வளப்படுத்தியதற்கான நன்றிக்கடன் என்று மட்டும்தான் சொன்னோம். ஆனால் திமுக செய்யவேண்டிய பணி இன்னும் நூறாண்டுகளுக்கு இருக்கிறது.
எந்த வன்முறையுமில்லாமல் யார் குடும்பத்தையும் அழிக்காமல், யாருடைய கல்வி வாய்புகளையும் பறிக்காமல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியுயும் அமைதியையும் நிலைநாட்டவிருக்கும் திமுகவின் ஆதரவாளன் என்பதில் என்றுமே பெருமிதம் கொள்கிறேன்.
You can follow @karthickmr.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: