பூதனை வதத்திற்கு பின்...
“அடியே விசாலாட்சி, இந்த ஆச்சர்யத்தைக் கேள்விப்பட்டியோ?”
“எதைச் சொல்றே நீ சத்யா, நம்ப யசோதை வீட்டில் நேற்று நடந்ததைப்பத்தித் தானே?”
“வேறே என்ன விஷயம் இருக்கு பேச?”
“ஆமாம். கேள்விப்பட்டதும் நானும் ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே கூட்டம். முண்டியடிச்சு

உள்ளே போய் யசோதையைக் கேட்டேன் அழுதுண்டே சொன்னாள்”
“என்ன?”
“யாரோ ஒரு சின்ன அழகான பெண் காலம்பற வந்தாளாம். உங்க வீட்டு குழந்தை ரொம்ப அழகாக இருப்பானாமே, நான் பார்க்கலாமா என்று கேட்டதாலே, இந்த அசடு யசோதா குழந்தையை தூக்கி அவள் கையிலே தந்திருக்கு. அவள் சப்பளிக்க உட்கார்ந்து மடியிலே

போட்டுக் கொஞ்சியிருக்கா. நான் இந்த குழந்தைக்கு பால் குடுக்க ஆசையா இருக்குன்னு கெஞ்சியிருக்கா. இந்த பேக்கு சரின்னு தலையாட்டியிருக்கு”.
“அப்புறம்?”
“என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ?”
“சரி, சரி நீயே சொல்லுடி”
“என்ன ஆச்சோ தெரியல்லை. குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு குடிக்க
“அப்புறம்?”
“என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ?”
“சரி, சரி நீயே சொல்லுடி”
“என்ன ஆச்சோ தெரியல்லை. குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு குடிக்க
முயற்சித்தபோதே அந்த பெண் அலறிண்டே அப்படியே சாஞ்சுட்டாளாம். அவ இருந்த இடத்திலே ஒரு பெரிய ராட்சசி கோரமாகக் செத்துக் கிடந்தாளாம். குழந்தை அவ மேலே விளயாடிண்டிருந்ததைப் பார்த்துட்டு நந்தகோபனும் மற்ற கோபர்களும் ஓடி வந்து குழந்தையை அப்புறப்படுத்திட்டு அந்த ராட்சசி யாருன்னு
கண்டுபிடிச்சிருக்கா. அப்பறம் அவளைத் தூக்கிக்கொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாளாம்”
“யாராம்?”
“பூதனை என்று பேராம். குழந்தையைக் கொல்ல வந்திருக்கலாம் என்று சொல்றா. ஏதோ யசோதை பண்ணின புண்ணியம், கடவுள் காப்பாத்தியிருக்கார். இல்லேன்னா குழந்தைக்கல்லவோ ஆபத்து ஏற்பட்டிருக்கும்!”
“யாராம்?”
“பூதனை என்று பேராம். குழந்தையைக் கொல்ல வந்திருக்கலாம் என்று சொல்றா. ஏதோ யசோதை பண்ணின புண்ணியம், கடவுள் காப்பாத்தியிருக்கார். இல்லேன்னா குழந்தைக்கல்லவோ ஆபத்து ஏற்பட்டிருக்கும்!”
“ஐயோ! குழந்தை எப்படி இருக்கான்?”
“அந்த கரிக்குண்டன் எப்போதும்போல சிரிச்சுண்டே தான் இருக்கான், எல்லாரையும் பார்த்து மயக்கறான். யசோதை கையைப் பிடிச்சுண்டு தூக்கு என்கிறான்”
“என்னமோ போடி, அந்தப் பயலைப் பத்தி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு சேதி வந்துண்டே இருக்கு”
“சரியாச் சொன்னே! கிருஷ்ணன்

ஒரு அதிசயக் குழந்தை தான் சந்தேகமில்லை”
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
ஹரியும் ஹரனும்
கோகுலத்தில் அன்று “ஜே ஜே” என்று கூட்டம். வாயிலில் எல்லா வீட்டிலும் தோரணம். தெருவெல்லாம் பெரிய பெரிய கோலங்கள். எந்த வீட்டில் என்ன விசேஷம் என்று தெரியாதபடி எல்லார் வீட்டிலும் மகிழ்ச்சிக்கோலம். ஊரே சந்தோஷ வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது. மேள தாளங்கள், வாண

வேடிக்கைகள், பெண்கள் சேர்ந்து இசை கோலாட்டம், கும்மி, கேளிக்கைகள். ஆண்களில் பலர் கூட்டம் கூட்டமாக பாடிக்கொண்டு, கூத்தாடிக் கொண்டிருக்கிறார்களே. இன்று என்ன விசேஷம் என்று ஊன்றிக் கவனித்தால் நந்தகோபன் வீட்டில்தான் கூட்டம் அதிகமாகவே காண்கிறது.
காரணம் என்னவென்றால் ஒரு குட்டிப்பயல்
காரணம் என்னவென்றால் ஒரு குட்டிப்பயல்
பிறந்திருக்கிறான் அந்த வீட்டில். ஊருக்கே செல்லம் அவன். அவனுக்கு பெயர் சூட்டு விழா என்பதால் வேத கோஷங்களும், மந்திர ஒலியும் வானைப் பிளக்கிறது. மந்தமாருதம், மெல்லிய பனிச்சாரல் போன்ற மழை தூற்றல், இடையிடையே சுகமான சூரிய வெப்பம், பறவை, பசுக்கள், கன்றுகளின் இடைவிடாத அற்புத சப்தம்.
காற்றில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வரும் இனிப்பு பலகாரங்களின் மூக்கைத் துளைக்கும் வாசம்.
“இது கைலாசமா வைகுண்டமா” என்று நம்மை நாமே கிள்ளிப் பார்க்கத் தோன்றும் ஆனந்த நிலை. எண்ணற்ற பேர் காத்திருக்கிறார்கள் குழந்தையைக் காண! இது யார்? ஒரு நீண்ட, நெடிய, ஆஜானுபாகுவான, புலித்தோல் அணிந்த
“இது கைலாசமா வைகுண்டமா” என்று நம்மை நாமே கிள்ளிப் பார்க்கத் தோன்றும் ஆனந்த நிலை. எண்ணற்ற பேர் காத்திருக்கிறார்கள் குழந்தையைக் காண! இது யார்? ஒரு நீண்ட, நெடிய, ஆஜானுபாகுவான, புலித்தோல் அணிந்த
உடல் நெற்றி பூரா வெள்ளிய திருநீறணிந்த, உருத்ராக்ஷ கமண்டல ஜடாதாரி? அவரும் குழந்தையைக் காணக் காத்திருக்கிறாரே! ரோஹிணி உள்ளே சென்றாள்.
“யசோதா, யாரோ ஒரு சாமியார் கூட வந்திருக்காரடி, பார்க்கவே ரொம்ப பயமாக இருக்கிறதே”
“ஒரு வேளை பிள்ளை பிடிக்கிற சாமியாரோ? உள்ளே விட யோசனையா இருக்கே!”
“யசோதா, யாரோ ஒரு சாமியார் கூட வந்திருக்காரடி, பார்க்கவே ரொம்ப பயமாக இருக்கிறதே”
“ஒரு வேளை பிள்ளை பிடிக்கிற சாமியாரோ? உள்ளே விட யோசனையா இருக்கே!”
“அதெல்லாம் இல்லை, விடேன், வந்து பார்க்கட்டுமே”
“குழந்தை பயந்து போய்ட்டான்னா?”
குழந்தை இதற்குள் ‘வீல்’ என்று அழுதது. முரண்டு பிடித்தது. யார் கையிலும் தங்கவில்லை. சமாளிக்க முடியவில்லை. நந்தகோபன் வேகமாக அருகில் வந்தான். “வழி, வழி”, குழந்தைய சூழ்ந்து கொள்ளாதீர்கள் கொஞ்சம் காற்று

வெளிச்சம் விடுங்கள்” என்று தூக்கி வைத்துகொண்டான். மேலும் அதிகமாகக் கத்தியது குழந்தை.
“சரி கொஞ்சம் வெளியே எடுத்து போய் வேடிக்கையாக எதையாவது காட்டு. அழுகை நிற்கிறதா என்று பார்ப்போம்” என்றார் ஒரு பெரியவர்.
இன்னும் சுரம் மேலே போனதே தவிர அழுகை நிற்கவில்லை.
“யாரோ ஒரு ரிஷியோ,
“சரி கொஞ்சம் வெளியே எடுத்து போய் வேடிக்கையாக எதையாவது காட்டு. அழுகை நிற்கிறதா என்று பார்ப்போம்” என்றார் ஒரு பெரியவர்.
இன்னும் சுரம் மேலே போனதே தவிர அழுகை நிற்கவில்லை.
“யாரோ ஒரு ரிஷியோ,
முனிவரோ, யோகியோ, ஒரு பெரியவர் நிற்கிறார் அவரிடம் விபூதி வாங்கித் தடவு” என்றாள் ஒரு பாட்டி.
ரோகிணி குழந்தையை வாங்கிக்கொண்டு சாமியாரிடம் சென்றாள். சாமியாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. குழந்தையை இரு கைகளிலும் வாங்கி இடி இடியென்று சிரித்தார், ஆனந்த தாண்டவமாடினார். குழந்தை அழுகையை
ரோகிணி குழந்தையை வாங்கிக்கொண்டு சாமியாரிடம் சென்றாள். சாமியாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. குழந்தையை இரு கைகளிலும் வாங்கி இடி இடியென்று சிரித்தார், ஆனந்த தாண்டவமாடினார். குழந்தை அழுகையை
சட்டென்று நிறுத்தினான். பொக்கைவாய் சிரிப்பு அனைவரையும் மயக்கியது. தனது சிறு கைகளால் சாமியாரின் ஜடையை பிடித்திழுத்தான். பின்னால் வளர்ந்து கோபியரின் பின்னலைப் பிடித்திழுக்க பயிற்சியோ? அனைவரும் சிலையாயினர்! ஏன் ஆகமாட்டார்கள்? ஹரனும் ஹரியின் பக்தரல்லவா? இருவரும் ஒருவரை ஒருவர்
இணைபிரியாதவர்களாயிற்றே! ஹரி, கிருஷ்ணனாக பிறந்தது தெரிந்து, அவனைப் பார்க்க ஹரன் ஆவலாக வந்ததை தெரிந்து ஹரி அழுது ஆகாத்தியம் பண்ணி வெளியே வந்து ஹரனைக் கட்டி தழுவி மகிழ்வதில் என்ன ஆச்சர்யம்!
ரெண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள்! ஒருத்தர் தன்னை பக்தியுடன் புகழ்ந்து வேண்டினால், யோசிக்காமல
ரெண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள்! ஒருத்தர் தன்னை பக்தியுடன் புகழ்ந்து வேண்டினால், யோசிக்காமல
வரங்களை வாரி வழங்குபவர். எத்தனை அசுரர்கள், ராக்ஷசர்கள் அப்படி தவமிருந்து சிவனிடமிருந்து வேண்டிய எல்லா வரங்களையும் பெற்று அவற்றை துஷ்ப்ரயோகம் செய்தவர்கள்! மற்றவர் அப்படி தவறாக அந்த வரங்களைப் பயன்படுத்துவோரை சாமர்த்தியமாக தண்டித்து, அழித்து தர்மத்தை நிலை நாட்டுபவராச்சே!
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
சகடாசுரன் வதம்
கம்சன் அனுப்பிய சகடாசுரனும் தேர்ந்தெடுத்து, அந்த வண்டியின் சக்கரத்தில் ஒளிந்து கொண்டிருந்தான். சகடாசுரனுக்கு ரொம்பவே சந்தோஷம்! பழம் நழுவி, பாலில் விழுந்துவிட்டதே! யாரும் இல்லாத இந்த அறையில் கிருஷ்ணன் தன்னந் தனியனாக நம்மிடம் வசமாக அகப்பட்டுகொண்டான். அவனை இப்போதே

தீர்த்துக் கட்ட வேண்டும். இதைவிட சிறந்த சமயம் அகப்படாதே என்று எண்ணி மெதுவாக சக்கரத்தை நகற்ற ஆரம்பித்தான்.
“ஒரே நசுக்கு - கிருஷ்ணன் காலி” என்பது அவனுக்கு எண்ணம். கிருஷ்ணன் கண் விழித்தான். தூங்குவது போல் இத்தனை நேரம் நடித்த மாயாவி, யசோதையின் மனதில் புகுந்து அவள் தன்னை இந்த
“ஒரே நசுக்கு - கிருஷ்ணன் காலி” என்பது அவனுக்கு எண்ணம். கிருஷ்ணன் கண் விழித்தான். தூங்குவது போல் இத்தனை நேரம் நடித்த மாயாவி, யசோதையின் மனதில் புகுந்து அவள் தன்னை இந்த
வண்டியின் அடியில் படுக்க வைத்தானல்லவா? சகடாசுரன் தன்னை நோக்கி சக்கரத்தை உருட்டி வருவதைக் கண்ட கிருஷ்ணன் துளியும் கவலைப்படவில்லை.அருகில் வரும் வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன், கிட்டே வந்ததும், தனது இடது காலால் அந்த வண்டி சக்கரத்தை உதைத்தான். என்ன பலமோ அந்த காலுக்கு! பெரிய
சக்கரம் எதிர் திசையில் உருண்டு ஓடி, அங்கிருந்த சுவரில் மோதி, கீழே விழுந்து சிதறியது. அதனுள் இருந்த சகடாசுரன் எலும்பெல்லாம் நொறுங்கி வலியில் கத்திய சப்தம் கேட்டு அனைவரும் உள்ளே ஓடி வந்தனர்.
வண்டி திசை மாறியிருக்கிறது. ஒரு பெரிய சக்கரம் வண்டியிலிருந்து கழன்றிருக்கிறது. பால்,
வண்டி திசை மாறியிருக்கிறது. ஒரு பெரிய சக்கரம் வண்டியிலிருந்து கழன்றிருக்கிறது. பால்,
தயிர், வெண்ணை எல்லாம் கொட்டி, கீழே படுத்திருந்த கிருஷ்ணன் வாயெல்லாம் வெண்ணையும் பாலும்! ஒரு பெரிய சக்கரம் தூரத்தில் பெரிய சுவரில் மோதி து£ள் தூளாகக் காட்சியளிக்கிறது. இது என்ன கோரம்! அதன் அடியில் ஒரு ராட்சசன் ரத்த வெள்ளத்தில் நகர முடியாமல் கிடக்கிறானே! அவர்கள் அவனை நெருங்கிக்
கொல்லும் முன்னே அவன் உயிர் பிரிந்து விட்டது. சகடாசுரன் கம்சனால் அனுப்பப்பட்டவன் என்று புரிந்து கொள்ள வெகுநேரம் ஆகவில்லை கோப, கோபியருக்கு.
“கிருஷ்ணா” என்று அடி வயிற்றிலிருந்து பாசத்தோடு கதறிக் கொண்டு ஓடிவந்தாள் யசோதை.
“என்ன பாதகி நான். உன்னைத் தனியே அந்த ராட்சசனிடம் விட்டு
“கிருஷ்ணா” என்று அடி வயிற்றிலிருந்து பாசத்தோடு கதறிக் கொண்டு ஓடிவந்தாள் யசோதை.
“என்ன பாதகி நான். உன்னைத் தனியே அந்த ராட்சசனிடம் விட்டு
வைத்தேனே. கடவுள் தானடா கிருஷ்ணா உன்னைக் காப்பாற்றினார்” என்று ஆதங்கப்பட்டாள் யசோதை.
“அது யார் அந்த இன்னொரு கடவுள் என்றோ, அடுத்த ராட்சசன் யாராக இருக்கும் என்றோ கிருஷ்ணன் யோசித்ததாகத் தெரியவில்லை! சிரித்துக்கொண்டே தன் வாய்க்குள் விழுந்த வெண்ணையும், பாலும் அளித்த ருசியில்
“அது யார் அந்த இன்னொரு கடவுள் என்றோ, அடுத்த ராட்சசன் யாராக இருக்கும் என்றோ கிருஷ்ணன் யோசித்ததாகத் தெரியவில்லை! சிரித்துக்கொண்டே தன் வாய்க்குள் விழுந்த வெண்ணையும், பாலும் அளித்த ருசியில்
மகிழ்ந்து கொண்டிருந்தான்!
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
வெண்ணை திருடிய கண்ணன்
கோகுலத்திலே, ஒரு வீட்டிலே புகுந்து வெண்ணெய் திருடிக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணன்.
அப்போது அங்கு வந்த அந்த வீட்டின் பெண்மணி “யார் நீ?” எனக் கேட்கிறாள்.
“பலராமனின் தம்பி” என சாமர்த்தியமாகக் கூறுகிறது குழந்தை.
“இங்கு எங்கு வந்தாய்?” என வினவுகிறாள்

அந்தப்பெண்.
“என்வீடு என நினைத்து நுழைந்து விட்டேன்” என்கிறான் கண்ணன். (ஏனெனில், கிராமங்களிலே எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருக்குமல்லவா!)
அந்தப் பெண் விடவில்லை. மேலும் கேட்கிறாள். “அதுசரி, வெண்ணெய்ப் பாத்திரத்தில் கையை வைப்பானேன்?” என்கிறாள்.
“கன்றுக்குட்டி ஒன்று காணவில்லை.

ஒருவேளை அது இந்த வெண்ணெய்ப் பாத்திரத்தில் இருக்கிறதோ எனப் பார்க்கிறேன். ஏதும் வருத்தமடைய வேண்டாம்” என விஷமமாகப் பதிலளிக்கிறான் கண்ணன்.
கன்றுக்குட்டியை வெண்ணெயிருக்குமிடத்தில் தேடிய அந்த குறும்பனைக் கண்டு யார்தான் மோகிக்க மாட்டார்கள். கோகுலத்திலே, கிருஷ்ணன் வெண்ணெயை மட்டும்
கன்றுக்குட்டியை வெண்ணெயிருக்குமிடத்தில் தேடிய அந்த குறும்பனைக் கண்டு யார்தான் மோகிக்க மாட்டார்கள். கோகுலத்திலே, கிருஷ்ணன் வெண்ணெயை மட்டும்
திருடவில்லை. கோபிகைகள் அனைவருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டான். அதனால் தான், தயிர், மோர், பால் எனக்கூவி விற்க வேண்டிய
ஒருபெண்மணி, கிருஷ்ணன் மீதிருந்த பிரேமை மிகுதியால், “கோவிந்தா, தாமோதரா, மாதவா” என கூவிக்கொண்டே போனாள் என்கிறார் லீலாசுகர்.
ஒருபெண்மணி, கிருஷ்ணன் மீதிருந்த பிரேமை மிகுதியால், “கோவிந்தா, தாமோதரா, மாதவா” என கூவிக்கொண்டே போனாள் என்கிறார் லீலாசுகர்.
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
கோபியர்களை மயங்க வைத்த கண்ணன்
அந்தக் கறுப்புப் பயல் துரு துரு வென்று இருப்பவன்.ஒரு இடத்தில் நிற்காமல் அலைபவன். அவனுக்கு என்று ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அத்தனை பேரும் சாமான்யமானவர்கள் அல்ல. கண் பார்த்ததை கை எடுக்கும். இவர்கள் அனைவருக்கும் தலைவன் அந்தக் கறுப்புப் பயல்.

ஐந்திலிருந்து எட்டுக்குள் தாண்டாத வயசு அனைவருக்கும். சாதுவாக இருப்பவனையும் தயார் செய்து விடுவான் அந்த கறுப்புப் பயல். ஒரு வீடு பாக்கியில்லாமல் அந்த தெரு, அதற்கடுத்த தெரு, எதிர் தெரு, அதன் பின்னால் என்று அந்தச் சிறிய கிராமத்தின், அனைத்து தெருவுக்கும் செல்வார்கள். எதற்கு?
வீட்டில்
வீட்டில்
கொஞ்சம் அசந்து இருக்கும் சமயம் பார்த்து அந்தந்த வீட்டில் சேமித்து வைத்திருக்கும் வெண்ணையை அபேஸ் செய்ய! ஒரு தடவை இரண்டு தடவை வேண்டுமானால் கோட்டை விட்டு ஏமாறலாம். விழித்துக் கொண்ட தாய்மார்கள், இந்தப் பயல்கள் கைக்கு எட்டாமல் உயரே உத்தரத்தில் ஒரு கயிற்றில் உறி கட்டி அதற்குள் வெண்ணை
பால் சட்டிகளை வைத்து விடுவார்கள். இந்தக் கும்பலுக்கு இதனால் பெரும் ஏமாற்றம். என்னடா செய்யலாம் என்று யோசித்தார்கள். இருக்கவே இருக்கிறானே தலைவன். அவன் யோசனை கொடுத்தான்.
“எந்த வீட்டில் கொஞ்சம் அசந்து போய் இருக்கிறார்கள் என்று பார்த்து வந்து சொல்லுங்கள்” என்றான் கறுப்பு பயல்.
“எந்த வீட்டில் கொஞ்சம் அசந்து போய் இருக்கிறார்கள் என்று பார்த்து வந்து சொல்லுங்கள்” என்றான் கறுப்பு பயல்.
அன்று இரண்டு வீடு தேறியது. ஆறடி உயரத்தில் வெண்ணை சட்டி உறியிலே தொங்க, அந்த வீட்டுக்காரி குளத்துக்குச் சென்றிருந்தாள். விடுவார்களா தக்க சமயத்தை! இந்த ஐந்தாறு பயல்களும் அந்த வீட்டில் நுழைந்தனர். தலைவன் யோசனை குடுக்க, ஒருவன் வாசலில் காவல் யாராவது வருகிறார்களா என்றுபார்க்க. ஒருவன்
கையில் ஒரு பாத்திரத்துடன். திருடிய வெண்ணையை சேமிக்க; இரு பெரிய பயல்கள் மண்டியிட்டு குனிந்து நிற்க, அனைவரிலும் சிறிய தலைவன் அவர்கள் மேல் ஏறி, உயரே இருக்கும் வெண்ணைச் சட்டியில் கை விட்டு அள்ளி கீழே கொடுக்க, பாத்திரக்காரனிடம் அது போய்ச் சேரும். அடுத்த நிமிடம், அனைவரும்
ஒதுக்குப்புறமாக, யமுனை நதியின் கரையோரம் வழக்கமாக சந்திக்கும் பகுதியில் ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, வெண்ணையை பாகப்பிரிவினை செய்வார்கள். கேட்கவேண்டுமா. பெரும் பங்கு கறுப்புப் பயலுக்குத் தான்.
இது தொடர்ந்து நடப்பதால் அனைத்து கோபியர்களும், அந்த கறுப்புப் பயல் வீட்டுக்கு
இது தொடர்ந்து நடப்பதால் அனைத்து கோபியர்களும், அந்த கறுப்புப் பயல் வீட்டுக்கு
வந்தனர். அவன் தாயிடம் முறையிட்டு இந்தக் கொள்ளையை எப்படியாவது நிறுத்த. இதோ வந்துவிட்டார்கள் திமு திமு வென்று. அவன் தாய் யசோதைக்குப் புரிந்து விட்டது. அனைவரும் வந்தால் அது நிச்சயம் அந்தப் பயல் சம்பத்தப்பட்ட ஒரு புகார் தானே வழக்கம்போல. அவன் அவர்களை பார்த்த கணத்திலேயே புரிந்து
கொண்டான் நண்பர்கள் போட்டு கொடுத்து விட்டார்கள் என்று. ஒன்றுமறியாதவனாக தனது தாய் பின்னால் சென்று அவள் கால்களைக் கட்டிக்கொண்டு நின்றான்.
“வாருங்கள் என்ன விஷயம்” என்றாள் யசோதை.
வந்த கோபியர் யார் முன்னால் விஷயத்தைச் சொல்வது என்று ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொண்டனர். அனைவரும்,
“வாருங்கள் என்ன விஷயம்” என்றாள் யசோதை.
வந்த கோபியர் யார் முன்னால் விஷயத்தைச் சொல்வது என்று ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொண்டனர். அனைவரும்,
பண்ணுவதை எல்லாம் பண்ணிவிட்டு “ஒன்றும் தெரியாத அப்பாவி” யாக அம்மா பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பயலையும் பார்த்தனர்.
கண்கள் சந்தித்தன. என்ன காந்த சக்தியோ? பெரிய வட்ட விழிகள். அவை பேசும் மொழியோ ஏராளம். இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்ற வைக்கும் கருவூலம் - அந்த
கண்கள் சந்தித்தன. என்ன காந்த சக்தியோ? பெரிய வட்ட விழிகள். அவை பேசும் மொழியோ ஏராளம். இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்ற வைக்கும் கருவூலம் - அந்த
கடலினும் பெரிய கண்கள். மெதுவாக, தலையை ஆட்டிக்கொண்டே அந்த விழிகள் அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டே பேசின
“தயவுசெய்து சொல்லாதே, சொல்லாதே” என்று.
“என்னவிஷயம் சொல்லுங்கள் ஏன் எல்லாரும் பேசாமலேயே நிற்கிறீர்கள்? அமருங்கள்” என்றாள் யசோதை.
“ஒன்றுமில்லையம்மா. நாம் அடிக்கடி சந்திக்க
“தயவுசெய்து சொல்லாதே, சொல்லாதே” என்று.
“என்னவிஷயம் சொல்லுங்கள் ஏன் எல்லாரும் பேசாமலேயே நிற்கிறீர்கள்? அமருங்கள்” என்றாள் யசோதை.
“ஒன்றுமில்லையம்மா. நாம் அடிக்கடி சந்திக்க
முடியாமல் வேலை இருக்கிறதே. அதான் எல்லாரும் ஒன்று சேர்ந்து உன்னைப் பார்த்து விட்டுப் போவோம் என்று வந்தோம்.”
அந்த விழிகள் செய்த மாயம் அல்லவா இது?
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

அந்த விழிகள் செய்த மாயம் அல்லவா இது?
#கண்ணன்கதைகள்
#கிருஷ்ணகதைகள்
#கிருஷ்ணலீலை
நெட்டில் சுட்டது
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

@Varsha69396205 @SriramKannan77 @premaswaroopam @CVeeraraghavan @JAGADEESVARRAJ @MTirupur @stpalraj @anand_tamil