நேத்து பெய்த கனமழை காரணமாகவும் பாதாள சாக்கடை சரியா Maintain-பண்ணாத காரணத்தினாலும்,ஏரி இருக்கும் இடமாக பார்த்து வீடு கட்டியதாலும் வீட்டிற்க்கு உள்ளே தண்ணீர் வந்துவிட்டது. இதை பற்றி மீடியாவிடம் மக்கள் சொன்னால் அல்லது பதிவு செய்தால் கிட்ட தட்ட Zombies போல பாய்ந்து வந்து 1/n
#Thread
"உன்னை யாரு ஏரிக்கு உள் வீடு கட்ட சொன்னது?" என பெரிய இயற்கை ஆர்வலர் போல காட்டிக்க முயற்சி பண்றாங்க சிலர்.உண்மையிலே ஏரியில் பேராசை கொண்டு வீடு கட்டியவர்களா அவர்கள்?

நிச்சயம் அதிகப்படியான மக்கள் குறைந்த வாடகையில் ஒரு வீடு! குழந்தைகளுக்கு பக்கத்தில் ஸ்கூல் இதெல்லாம் கணக்கு
பண்ணி போற வீடு தான் அது! அது அவங்களோட சொந்த வீடு இல்லை.ஆனா இவங்க ஏதோ அந்த ஏரியை அவங்க 2-Years ah ப்ளான் பண்ணி பித்தாலாட்டம் பண்ணி CMDA Approval வாங்கியவர்கள் போல பூமிக்கும் வானுக்கும் குதிக்கிறார்கள்!

சென்னையில் பாதி பேருக்கு இருக்கும் ஒரு கனவு "சொந்த வீடு".
அந்த கனவுக்கும் ஒரு உணர்ச்சி இருக்கு"வாடகை வீட்டில் இருந்தால் House Owner (சிலர்) வாடைகைக்கு இருப்பவர்களை எப்படி இரண்டாம் தர குடிமக்களை போல நடத்துவார்!என்பதும்,வாடகையும் கொடுத்துவிட்டு நின்னா குத்தம்,நடந்தா குத்தம் நிலைமை உணர்ந்து இருந்தா தெரியும்!
இன்னைக்கு தேதிக்கு ஆக்கிரமிப்பு என்ற சொல் குடிசைகளை மட்டும் குறிப்பதாக இருக்கிறது.உண்மையில் குடிசைகள் மட்டும் தான் ஆக்கிரமிப்பு பண்ணுதா? பெரிய பெரிய Builders-Lake View Apartment கட்டுகிறார்களே அது எந்த கணக்கு?

அத கூட விடுங்க
இன்னைக்கு நேரா போங்க திருநெல்வேலி புது பஸ்டாண்ட் எங்க இருக்கு என பாருங்க! அதோட End'ல குளம் இருக்கும் அது குளத்தில் கட்டவில்லை என மறுக்கவே முடியாத சான்றாக இன்னமும் இருக்கு.இதெல்லாம் நீங்க சொல்ற ஆக்கிரமிப்புல வராதா சார்?இது போல நிறைய சொல்ல முடியும்!

குறிஞ்சி-முல்லை-மருதம் தொடங்கி
இயற்கையாக இருந்ததை நாம் மாற்றவில்லை என சொல்ல போகிறோமா?
மீண்டும் சென்னைக்கு வருவோம்,அறப்போர் இயக்கத்தை சேர்ந்த சுல்தான் (நீர் ஆர்வலர்) சொல்கிறார்

வேளச்சேரி
கூடுவாஞ்சேரி-இதெல்லாம் ஏரி தான்.
"பாக்கம்" என்றால் நீர் தேக்கிவைக்ககூடிய இடம் என பொருள்.

அப்போ நுங்கம்பாக்கம்,கோடம்பாக்கம்
Etc Etc இப்படியே போனால் சென்னையில் பாதி Area கவர் ஆகிவிடும்.இதோ சென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் ஏரியில் கட்டுவதாக அறப்போர் இயக்கம் புகார் சொல்கிறது? என்ன செய்ய?
இன்னும் ஒரு படி மேலே சொல்றேன்.பள்ளிகரனை சதுப்பு நில பற்றி பேசுவோமே.இது இன்னைக்கு இருப்பதுவா? அடையாறு தொடங்கி சிறுசேரி வரை இருந்ததாக சொல்கிறார் சுல்தான்.அப்போ இன்னைக்கு அந்த அந்த இடத்தில் இருக்கும் ஐடி நிறுவனங்களை என்ன செய்யலாம்? இப்படி வாய் கிழிய பேசியவர்கள் பல அந்த அந்த
நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே டைப் செய்து தான் இருப்பார்கள்!
நான் ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்வதை ஒரு போதும் நியாயப்படுத்தவில்லை.ஆனால் உயிருக்கும் உடமைக்கு தஞ்சம் புகும் பொழுது தயவு செய்து உங்க "இயற்கை" பாசத்தை காட்டாதிங்க! அவங்க பாவம் சார்!
நேத்து வரை இருந்த வீட்டுல கண் முன்னே டி.வி வாசிங் மிஷின் என தண்ணில மிதக்குறத பார்த்தா அந்த வலி தெரியும்.அத விட குழந்தைகளையும் பெரியவர்களையும் பத்திரப்படுத்த நினைக்கும் பொழுது உதவவில்லை எனில் கடந்து போங்க!

கொஞ்சம் கூடுதல் பணம் இருந்தால்,பெரிய Builder பணக்காரன் ஏரியில் வீடு கட்டி
இருந்தாலும் மழை தண்ணீரில் இருந்து தன்னை பாதுகாத்துக்க தன் கட்டிடத்தை ஏது ஏதோ செய்துவிடுகிறான்.அவன் Balcony-ல் நின்று கொண்டு "Why these people are encroaching? என சொல்வதற்க்கும் நீங்கள் சொல்வதற்க்கும் சற்றும் வித்தியாசம் இல்லை!
நீங்க கை காட்டும் மக்களில்,பலர் CMDA Approval வாங்கியவர்கள் தான்.அப்போ கொடுத்தவர்கள்?ஏரியில் வீடு கட்டுவதை தடுக்க வேண்டும் தான் ஆனா எப்படி? சிட்டி லிமிட் பெருகிவிட்டே போகிறது,மக்கள் தொகையும் கூட அப்போ என்ன நடக்கும்? இதெல்லாம் Urbanization Impact தான்.
நீ இதை பத்திலாம் இப்போ தானே பேசுற என நீங்க கேட்கலாம்.நான் இதை பல வீடியோவாக கூட பதிவு செய்து இருக்கிறேன்.

ஏன் வேளச்சேரி இப்படி மோசமான நிலைமையில் இருக்கிறது என்றும் தீர்வை பற்றியும் வீடியோ இது :

பார்க்க :
அம்பத்தூர் ஏரி-கொரட்டூர் ஏரியில் இருக்கும் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள், நானும் சுல்தானும் பதிவு செய்த வீடியோ.என் நிலைப்பாடு எரியை ஆக்கிரமிப்பு செய்யலாம் என்பதல்ல.அதுக்கு தீர்வு மக்களை மட்டும் குறை சொல்லாமல் தீர்வை நோக்குவது!

பார்க்க :
You can follow @ImAvudaiappan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: