Thread...
1.ஒவைசியும் தமிழ்நாடும்...
ஒவைசி திமுக விற்கு ஒரு பொருட்டே அல்ல.

தமிழ்நாட்டில் இஸ்லாமிய கட்சிகள் பெரிய அளவில் வாக்கு வங்கி உள்ளவை அல்ல.அதில் சிறிய அளவில் வாக்கு வங்கி வைத்துள்ளவை மமக(தமுமுக),SDPI,IUML.இது தவிற TNTJ சற்று பலம் வாய்ந்தது.ஆனால் அரசியல் கட்சி அல்ல.
2.ம.ம.க.மற்றும் IUML ஏற்கனவே திமுக கூட்டணியில் தான் உள்ளன. SDPI மட்டும் இன்னும் தெளிவில்லை.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி யுடன் சென்றது.இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வரலாம்.அல்லது தமிழ்நாடு ஒவைஸியாக முயற்சி செய்யலாம்.ஆனால் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
3.ADMK-BJP கூட்டணி உறுதி ஆனதால் ADMKவிற்கு வழக்கமாக வாக்களிக்கும் கொஞ்சம் இஸ்லாமியர்/சிறுபான்மையினர் கூட default ஆக திமுகவுக்கு வாக்களிக்க தயார் ஆகி விட்டார்கள்.

இஸ்லாமிய கட்சிகளை கழகங்கள் சேர்ப்பது தங்கள் கூட்டணியில் இஸ்லாமிய கட்சி உள்ளது என காட்டிக்கொள்ள மட்டுமே உதவும்.
4.உண்மையில் அதனால் எந்த பலனும் இல்லை .அதிமுக கூட்டணியில் எதாவது ஒரு லெட்டர் பேடு இயக்கத்தை சேர்த்து காட்டிக்கொள்வார்கள் என்பதற்காக திமுகவும் அதை செய்ய வேண்டிய கட்டாயம் மட்டுமே உள்ளது.இஸ்லாமியர்கள் /கிருஸ்துவர்கள் / ஏனைய சிறுபான்மையினர் திமுகவுடன் ஏற்கனவே ஒன்றித்தான் உள்ளனர்.
5.எந்த இஸ்லாமிய கட்சிக்கு சீட் கொடுத்தாலும் குறைந்த எண்ணிக்கை ,திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட நிபந்தனை விதிக்க வேண்டும்.

அதைவிட திமுகவிலேயே இஸ்லாமியர்களுக்கு கனிசமாக சீட் கொடுத்தால் சிறப்பு . இது தான் மிக முக்கியம்.திமுகவில் பிரதிநிதித்துவம் இருந்தாலே போதுமானது.
6.ஆனால் இஸ்லாமியர்களை பிரதிநிதித்தவப்படுத்தினால் பாஜக வளர்ந்து விடும் என திமுகவில் உள்ள சில ஸ்லீப்பர் சங்கிகளால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.இதே பரப்புரை தான் காங்கிரஸில் இருந்த ஸ்லீப்பர் சங்கிகள் செய்தனர்.அதன் பலனை இன்று அனுபவிக்கிறது.
7.காங்கிரஸின் உறுதியான அடிப்படை வாக்கு வங்கியான சிறுபான்மையினர் , தலித்துகள்,மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் . இவற்றிற்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டனர்.காங்கிரஸ் எடுத்த சில முட்டாள் தனமான நடவடிக்கைகளால் அந்த வாக்குகளை அந்நியப்படுத்தி விட்டனர்.
8.அந்த வாக்குகள் இன்று வேறு போக்கிடம் இல்லாததால் சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.
அவர்கள் தான் இன்றைய பாஜக வின் B-team. அதே ஃபார்முலாவில் உருவாக்கப்பட்டவர்கள் சீமான் மற்றும் கமல்ஹாஸன்.
9.ஆனால் தமிழ்நாட்டின் களம் வேறு.
திமுகவிற்கும் இஸ்லாமிய /கிருஸ்துவ/மற்றும் ஏனைய சிறுபான்மையினர்க்கான பிணைப்பு என்பது ஆயிரம் ஒவைசிக்கள் வந்தாலும் அசைத்துப்பார்க்க முடியாது.End.
You can follow @shafeeqkwt.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: