புது வீட்டுக்கு வந்து 2 வருஷமாச்சு... இந்த thread ல வீட்டு போட்டோஸ் போடலாம்ன்னு... அப்படியே சில வீடு maintenance tips #Kitchen1
2 வருஷத்துக்கு மேல உபயோகப்படுத்தாத எந்த பொருளும் 90% இனிமே உபயோகப்படுத்த வாய்ப்பு இல்ல - அதனால அடுத்த வீடு மாறும்போதோ/ பொங்கல் க்ளீனிங்லயோ அப்புறப்படுத்திடுங்க #Kitchen2
முடிஞ்ச வரைக்கும் ஒரே அளவு டப்பாக்களா வாங்கிக்கோங்க... வாங்கனுன்னு கூட இல்ல... டாபர் honey மாதிரி ஒரு சிலது நல்ல தரமான glass bottle ல வருது அத use பண்ணலாம்.. பார்க்க அழகு, இடமும் அடைக்காது #Kitchen3
Cutlery nnu சொல்ற, கரண்டி, ஸ்பூன், கத்தி, சிப்ஸ் சீவர கட்டை... எல்லாம் ஒரே இடமா வைக்க இப்பலாம்.. கம்மி விலைலயே tray கிடைக்குது... அதுல வெச்சிட்டா... அவசரத்துல தேடற வேலை ...
மனசுக்கு பிடிச்ச ரசனையான விஷயங்கள நல்லா எல்லார் கண்பார்வைலயும் படற மாதிரி வைங்க... மற்றவங்க அது எங்க வாங்கினீங்க? நல்லா இருக்கேன்னு சொல்லும்போது தனி புத்துணர்ச்சி/ positivity
இடம் பெருசா இருக்கணும்னு இல்ல... ஒரு வாசிங் மெஷின், வாஷ் பேசின், கீழ 2 drawers, மேல அழுக்கு துணி, டவல் வெக்க, அப்பறம் brush paste hair oil shampoo வைக்கனு எல்லாமே இந்த இடம் தான்...
கிடைக்கற சுவத்துல இந்த மாதிரி சில பாசிடிவிட்டி படங்கள ஒட்டலாம்... பார்க்கவும் அழகா இருக்கும்...
நாம ரொம்ப நேரம் இருக்கற இடம்னா எக்ஸ்ட்ரா அக்கறையோட அலங்கரிக்கம்னு எனக்கு தோணும்... அதனால கிச்சன்ல மட்டும் இந்த ஸ்பெஷல் படங்கள்....
அதே மாதிரி 7-8 வாடகை வீடு மாறி சொந்த வீடுனு வந்தப்போ நான் particular a இருந்த ஒரு விஷயம்... கிச்சன்லேர்ந்து டிவி பார்க்க முடியனும்னு.. அதனாலயே open kitchen ஆக்கினோம்... ஒவ்வொரு IPL ballக்கும் பின்ன கிச்சன்லேர்ந்து ஓடிஓடியா வர முடியும் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😑" title="Ausdrucksloses Gesicht" aria-label="Emoji: Ausdrucksloses Gesicht">
பூஜை ரூம்ல தான்னு இல்ல, ஊதுபத்திய bathroomலயும் வைக்கலாம் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😀" title="Grinsendes Gesicht" aria-label="Emoji: Grinsendes Gesicht">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="☝️" title="Zeigefinger nach oben" aria-label="Emoji: Zeigefinger nach oben">
Bathroomலயே கொஞ்சம் இடம் இருந்தா - துடப்பம், mop, இன்ன பிற சாமான் வெக்க vertical cupboard போடலாம்... பால்கனி அப்ப freeya இருக்கும்
எத்தனை crockery cutlery வந்தாலும் எனக்கு நம்ம அஞ்சறைப்பெட்டி தான் வசதி... அழகுக்கு அழகு, நேட்டிவிட்டிக்கு நேட்டிவிட்டி- திருமணத்துக்கு வாங்கி தந்த அம்மாவுக்கும் மகிழ்ச்சி
வீட்ட அழகா வைக்க காஸ்ட்லி சாமான்கள் வாங்கணும்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சமும் இல்ல... இந்த laughing Buddha 20₹
அப்படியே entrance ல சிலபல தத்துவங்கள் எழுதி வெச்சா calling bell அடிச்சி wait பண்றவங்க/ நம்ம வீட்டுக்கு வராதவங்க கூட நம்ம வீடு பற்றி நல்ல பாசிடிவ் thinking வரும்
இது வாசற்கதவுல... விருந்தோம்பல்ங்க! https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😌" title="Erleichtertes Gesicht" aria-label="Emoji: Erleichtertes Gesicht">
இன்னொரு முக்கியமான விஷயம்... ஒரு பொருள் வாங்கனும்னா அதுக்குன்னு வீட்ல ஒரு இடம் permanent a இருக்கணும்... அத எங்க வெக்கனு தெரியலனா வாங்கக்கூடாது... இந்த நாய்க்குட்டி கீசெயின் ஒருத்தர் குடுத்தாங்க... எங்க வெக்கனு தெரியாம.. scented candle உள்ள தற்காலிகமா...
கொஞ்சம் அதிர்ஷடமும் இருந்தா, கிச்சன் ஜன்னலேந்து இப்படி சில சமயம் வானவில்களும் தெரியும் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="❤️" title="Rotes Herz" aria-label="Emoji: Rotes Herz">
Water filter Aquaguard இருக்கு... ஆனா தண்ணி இந்த குடத்துல பிடிச்சி வெச்சிதான் குடிக்கறது... உடம்புக்கு நல்லதுன்னு சொல்றாங்க, குடத்தை தினமும் தேய்க்கணும் புளி, எலுமிச்சை, பீதாம்பரி ஏதாவது போட்டு... இல்லன்னா நல்லதுன்னு செய்ய போய் கெடுதல் ஆகிடும்
You can follow @Vinuthaas.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: