வீரா. தெருவில் விடப்பட்ட நாய். கருணையுடன் இத்தகைய நாய்களை எடுத்து வளர்த்து நோய் தீர்த்து பராமரிக்கும் ஒரு அமைப்பிடம் இருந்து ஒரு இடைக்கால பாதுகாவலராக மகள் எடுத்து வளர்க்கிறார். Corona காலத்து வீடடங்கி இருக்கும் சூழலை இது கொஞ்சம் பயனுள்ளதாகவும் ரசிக்கும்படியாகவும் ஆக்குகிறது. 1/7
வீராவுக்கு ஒரு பெரிய உடற்கூறு பிரச்சனை. கைவிடப்படும் போது அதன் இரு பின்னங்கால் பாதங்களையும் நறுக்கிவிட்டு வீசியிருக்கிறார்கள்.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😠" title="Wütendes Gesicht" aria-label="Emoji: Wütendes Gesicht"> இதன் காரணமாக அவனால் நான்கு கால்களால் நடக்க இயலுவதில்லை. முன்னங்கால்கள் இரண்டால் அவன் சிறிது தொலைவு மட்டுமே நடப்பான். 2/7
மையத்தில் நன்கு பராமரித்ததால் பின்னங்கால்கள் புண் இல்லாவிட்டாலும் ஓடியாடி செயல்படாததால் ஒரு மன அழுத்த சூழலில் அலுப்பு காரணமாக தன் முன்னங்காலையே கடித்து கடித்து காயப்படுத்தி வைத்திருந்தான். 3/7
கடந்த ஒரு மாதமாக இங்கே ஓரளவு கவனித்துக் கொண்டது முன்னங்கால் காயம் நன்றாக ஆறி இருக்கிறது. கூடவே அவனால் காலைக்கடிக்க இயலாதவாறு இருக்கும் படியான கவசம் ஒன்றும் அணிவித்தது நல்ல பலனைக் கொடுத்தது. ஆனாலும் நான்கு கால்களில் நடக்க அவனுக்கு ஏதேனும் செயற்கை கருவி பொருத்த வேண்டும். 4/7
அதற்கு சில முயற்சிகள் செய்து பார்த்து சரி வராமல் பிறகு பின்னங்கால்களுக்கு சக்கரம் பொருத்திய வண்டி அமைப்பது என்று தீர்மானமானது. இணையத்தில் விற்பனைக்கு இருக்கும் இத்தகைய சக்கர வண்டிகள் ஆயிரக்கணக்கில் விலை. வீரா எடைகுறைவானவன். சரி நாமே எளிமையான ஒன்றைச் செய்து பார்ப்போமே... 5/7
என்று நேற்று இரண்டு சக்கரங்கள் வாங்கி வந்து இன்று ஒரு வண்டி பூட்டியாயிற்று. ஆனாலும் இன்னும் சரியாக கச்சை கொண்டு பொறுத்தவெண்டும் . சில சோதனைகள் செய்து பார்த்ததில் ஓரளவுக்கே வெற்றி. இன்னும் சில முயற்சிகளில் வெற்றியடையலாம் என்று நம்பிக்கை வந்திருக்கிறது. 6/7
சென்ற வாரம் ஊட்டி போயிருந்தபோது புல் தரையில் பாதமில்லாத தன் கால்களால் நன்றாகவே ஓடினான். இந்த ஓட்டத்தைத் கொண்டுவர வேண்டும். 7/7
வீராவைக் கவனித்து பாதுகாத்து வருவதற்காக பலரும் மனம் திறந்த பாராட்டுக்களை சொல்வது மிகுந்த மகிழ்வான ஒன்றாக இருந்தாலும். இப்படி ஒன்றைச் செய்யலாம் என்று (நடைமுறைச் சிக்கல்கள் எதிராக நின்ற போதும்) முனைந்து எங்களோடு வாதிட்டு சமாதானப்படுத்தி சாதித்தது மகள். பின்னால் நின்று கட்டமைப்பு ..
சாதனங்கள் யோசனைகள் என்று உதவியது, பதிலியாக அவனைக் கவனிப்பது போன்றவை என் பணிகள். இந்த கசியும் மனம் என்றும் இருக்கட்டும் மகளே என்று உங்களோடு நானும் வாழ்த்திக் கொள்கிறேன்.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤗" title="Umarmendes Gesicht" aria-label="Emoji: Umarmendes Gesicht">