சிட்னி ஷெல்டனுடைய முதல் நாவல், The Naked Face. அந்த நாவலை எழுதி வெளியிட்டபிறகு, அவருக்குத் திடீரென்று ஓர் அச்சம், & #39;ஒருவேளை, நம்ம புத்தகத்தை யாருமே வாங்கலைன்னா? வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பிரதிகூட விற்காத புத்தகம்ன்னு எல்லாரும் நம்மை இழிவாப் பேசிட்டாங்கன்னா?& #39; |1
இப்படி நினைத்த அவர், முதல் வேலையாக ஒரு புத்தகக் கடைக்குச் சென்றார். தன்னுடைய புத்தகத்தைத் தானே ஒரு பிரதி வாங்கிக்கொண்டார். நிம்மதியாக வீட்டுக்குத் திரும்பினார். |2
ஆனால், அவர் இப்படியெல்லாம் அச்சப்பட்டிருக்கவே வேண்டியதில்லை. அந்த நாவல் நன்றாக விற்றது. சிட்னி ஷெல்டனும் தொடர்ந்து அடுத்தடுத்த நாவல்களை எழுதினார். |3
இப்போது, சிட்னி ஷெல்டன் பெரிய, புகழ் பெற்ற எழுத்தாளர், பல வெற்றிகரமான நாவல்களின் ஆசிரியர். தன்னுடைய புதிய நாவல்களெல்லாம் விற்காமல் போய்விடுமோ என்கிற ஐயமோ அச்சமோ அவருக்கு இல்லை. அதே நேரம், |4
பழைய சென்டிமென்டை விடவும் அவர் விரும்பவில்லையாம். ‘The Naked Face’ வெளியாகி 30ஆண்டுகளுக்குப்பிறகு (2001ல்) அவர் அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘இப்போதும், என் புதிய நாவல் வெளியாகும்போது, அதே நாளில் நான் ஒரு புத்தகக் கடைக்குச் சென்று ஒரு பிரதி வாங்கிக்கொள்வேன்.’|5
ஃபேஸ்புக்கில் சிலர் தங்களுடைய போஸ்டுக்குத் தாங்களே லைக் போடுவதைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்பாக வரும். சிட்னி ஷெல்டனுடைய இந்தப் பேட்டியைப் படித்தபிறகு, அதுவும் ஒருவிதத்தில் சரிதானோ என்று தோன்றுகிறது. |6/6