#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#Out_of_Africa theory

19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் டார்வின் என்ற இயற்கையியல் அறிஞர் குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானான் என்ற சித்தாந்தத்தை வெளியிட்டார். சிலவகை குரங்குகள் படிப்படியாக பரிணாமவளர்ச்சி அடைந்து மனித உருவை எட்டின என்றும்
அப்படித் தோன்றிய முதல் மனிதன் ஆப்பிரிக்காவில்தான் உருவானான் என்ற கருத்தை வெளியிட்டார்.( எல்லா குரங்குகளும் ஏன் மனிதர்களாக மாறவில்லை என்றெல்லாம் கேட்காதீர்கள். Theory of Natural Selection என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. அதன்படி சிலவகை குரங்குகளே காலப்போக்கில் பல தலைமுறைகளுக்குப்
பிறகு மனிதர்களாயின.)

மனித இனத்திற்கு Homo Sapiens என்று கார்ல் லின்னியஸ் (Carl Linnoes) என்ற ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஏற்கனவே பெயரிட்டிருந்தார். தாவர, விலங்கின, மனித இனத்தை வகைப்படுத்த அவர் பல பெயர்களைப் பயன்படுத்தினார். மனிதன் என்ற இனத்திற்கு ( Species ) அவர் Homo Sapien என்று
அதே பெயரை பிற்காலத்தில் வந்த விலங்கியல் அறிஞர்கள் பயன்படுத்தினர். இந்த Homo Sapienக்கு முற்பட்ட காலத்தில் நியான்டர்தால், டெனிசோவன்( Denisovan) போன்ற மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் முழு வளர்ச்சி அடைந்த மனிதர்கள் அல்லர்.காலப்போக்கில் அவர்கள் அழிந்துவிட்டார்கள்.
அல்லது ஹோமோ சேபியனுடன் கலந்துவிட்டார்கள். இப்போது உள்ள மனித இனம் Homo Sapiensதான். நாமெல்லாம் ஹோமோ சேபியன்கள்தான்.

1973ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருளியல்(Paleontology) அறிஞரான கிரிஸ் ஸ்டிரிங்கர் (Chris Stringer) என்பவர் ' Out of Africa' என்ற சித்தாந்தத்தை வெளியிட்டார்
இதன்படி ஆப்ரிக்காவில் தோன்றிய மனிதர்கள் (Homo Sapiens) இன்றைக்கு சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து பல குழுக்களாகப் பிரிந்து தொலைதூரம் பயணித்து வெவ்வேறு இடங்களில் குடியேறினர். ஆப்ரிக்காவில் ஏற்பட்ட கடும்குளிரைத் தாங்கமுடியாமல் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு
குடிபெயர்ந்தனர்.

ஒரு பிரிவினர் நைல் நதி ஓரமாகப் பயணித்து லெவன்ட் (ஆசியா மைனர், சிரியா உள்ள பகுதி) என்ற பிரதேசத்தை அடைந்தனர். அவர்களின் எலும்புக்கூடு குறிப்பாக முதுகெலும்பு,தாடை, பற்கள் ஆகியவை அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 2018இல் இஸ்ரேலில் நடந்த அகழ்வாராய்ச்சியில்
இஸ்ரேலில் உள்ள மிஸ்லியா குகைகளில் இவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இரண்டாவது பிரிவினர் சுமார் 65000 வருடங்களிலிருந்து 40000 ஆண்டுகளுக்கு முன்னர் அரேபியா வழியாக ஆசியா, ஐரோப்பிய பகுதிகளை அடைந்தனர்.

மூன்றாவது பிரிவினர் சுமார் 70000லிருந்து 50000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து தெற்கு நோக்கிப் பயணித்தனர்.
இதற்கு " Southern Dispersal Theory " என்று பெயர்.

இவர்கள் தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கடலோரமாகப் பயணித்து தெற்கு ஆசியா வந்தனர். அரேபியா, இந்தியா ஆகியநாடுகளை அடைந்தனர்.இவர்களில் ஒரு பிரிவினர் ஆஸ்திரேலியா சென்றடைந்தனர். இந்தியாவில் இவர்கள் வந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்
ஆந்திரப்பிரதேசம், கர்நூல் மாவட்டத்திலுள்ள ஜ்வாலாபுரம் என்ற ஊரில் கிடைத்துள்ளது.

இவர்கள் பயன்படுத்திய கற்கள், கருவிகள் ஆப்பிரிக்கர் பயன்படுத்தியவற்றைப் போன்றே உள்ளன. ஆனால் அப்போது வாழ்ந்த மனிதர்களின் எலும்புக்கூடு எதுவும் ஜ்வாலாபுரத்தில் கண்டெடுக்கப்படவில்லை.
நம் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் இந்தப் பிரிவினைச் சேர்ந்தவர்களே.

இந்த " Out of Africa " சித்தாந்தம் உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஆப்பிரிக்க ஹோமோ சேபியன்களின் வழித்தோன்றல்களே என்று DNA சோதனை (மரபணு சோதனை) மூலம் 1990ஆம்
ஆண்டில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆலன் வில்சன் ( Allan Wilson ) மற்றும் அவரது மாணவி ரெபெக்கா கேன் (Rebecca Can ) ஆகிய இருவரும் நிரூபித்தனர். இதில் குறிப்பாக ரெபக்கா கேன் என்பவர் இப்போது வாழும் மனிதஇனம் ஆப்பிரிக்காவில் சுமார் இரண்டு லட்சம் வருடங்களுக்குமுன் வாழ்ந்த
மைடோகோன்டிரியல் ஈவ் ( Mitochondrial Eve ) என்ற தாயிடம் இருந்து உருவாகி வந்தது என்று கூறினார். இந்தப்பெயர் பிற்காலத்தில் சூட்டப்பட்டாலும் இந்தத்தாய் வாழ்ந்தது உண்மை. இதை தொல்பொருளியல் அறிஞர்கள் (Paleontologists) மற்றும் மரபணுவியல் அறிஞர்கள் ( Geneticists ) ஆமோதித்துள்ளனர்.
தமிழர் நாகரிகம் Out of Africa நாகரீகமா???

இந்த ' Out of Africa ' சித்தாந்தத்தை உலுக்கும் விதமாக தமிழ்நாட்டில் ஒரு கண்டுபிடிக்கப்பட்டு நிகழ்ந்தது. சென்னையிலுள்ள ' சர்மா பாரம்பரிய கல்வி மையம் ' ( Sharma Centre for Heritage Education ) என்ற அமைப்பு
சென்னையிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அத்திரம்பாக்கம் என்ற ஊரில் 2018ஆம் ஆண்டு துவக்கத்தில் ஓர் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டது. அந்த அகழ்வாராய்ச்சியில் பழைய கற்கால (Paleolithic ) மக்கள் பயன்படுத்திய, பாறைக்கற்களைத் தீட்டி தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கற்கள் கூரிய முனைகளை( Tangled Points ) கொண்டதாகவும், அறுக்கும் திறன் (Blade Technology) கொண்டதாகவும் உள்ளன. இதை ஆராய்ச்சி செய்த பேராசிரியர் சாந்தி பப்பு மற்றும் முனைவர் குமார் அகிலேஷ் ஆகியோர் இந்த பழைய கற்கால ஆயுதங்கள் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமை
வாய்ந்தவை என்று தொல்லியலாளர்கள் கூறுகின்றனரே ? இவற்றைப் பயன்படுத்திய மனிதர்கள் யாவர் ? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? இங்கே தமிழ்நாட்டிலேயே உருவானவர்களா ?

இதுபற்றி பேராசிரியர் சாந்தி பப்பு கூறுகையில் ஹோமோ சேபியன்களுக்கு முன்னரே ஆப்பிரிக்காவில் தோன்றிய நியான்டர்தால் மனிதர்கள்,
ஹாமினின் மனிதர்கள் (Hominis ) இந்தியத் துணைக்கண்டத்திற்கு பயணித்துவந்து தமிழ்நாட்டுப்பகுதிகளில் வாழ்ந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.அவர்கள் பழைய கற்காலத்தை( Paleolithic) சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களே அத்திரம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டவை
என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இவர் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை சர்வதேச அறிவியல் இதழான ' Nature ' இல் ஜனவரி 31, 2018 இல் பிரசுரமானது. அப்போது இது பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிது காலம் கழித்து இது மங்கிப்போய்விட்டது. காரணம்
அத்திரம்பாக்கம் அகழ்வாராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை.

அங்கு வாழ்ந்த மனிதர்களின் படிமங்கள் ( Fossils) , குறிப்பாக முதுகெலும்பு, தாடை, பற்கள் முதலியவை கண்டெடுக்கப்பட்டிருக்கவேண்டும் அப்போதுதான் தொல்பொருளியல் அறிஞர்கள் (paleontologists )
மற்றும் மரபணுவியல் அறிஞர்கள் (Geniticists ) அதை அங்கீகரிப்பார்கள்.

இதற்கிடையில் தமிழர் அமைப்புகள், திராவிடர் அமைப்புகளைச் சேரந்த சிலர் தமிழ்நாட்டில்தான் 3,85,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்தார்கள் எனவும், அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வரவில்லை எனவும், தமிழ்நாட்டிலேயே
தோன்றியவர்கள் எனவும்,அவர்கள்தான் தமிழர்களின் மூதாதையர்கள் எனவும், அவர்கள் சிறந்த நாகரிகத்தை அடைந்திருந்தனர் என்றும் பிரசாரம்செய்யத் தொடங்கிவிட்டனர். இவையெல்லாம் உண்மையாக இருக்கலாம். ஆனால் அவற்றை உலகளவில் புகழ்பெற்ற தொல்பொருளியல் அறிஞர்கள், மரபணுவியல் அறிஞர்கள் அங்கீகரிக்கவேண்டும்
அப்போதுதான் அதற்கு நம்பகத்தன்மை (Credibility ) ஏற்படும். அதுவரை அது ஏட்டுச்சுரைக்காயாகத்தான் இருக்கும்.
Credit : G.Ragavan

🙏🙏🙏

#End
You can follow @Ganesh_Twitz.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: