உலகக் கோப்பையில் இரண்டு முறை வேர்ல்ட் கப் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது ..

மூன்றாம் முறை இந்தியாவுடன் மோதும் போதும் வெஸ்ட்இண்டீஸ் வெல்லக் கூடிய வாய்ப்பே அதிகமாக இருந்தது ...

அது ரிச்சர்ட் அவுட் ஆகும் வரை
இருந்தது.

ஆனால் கபில்தேவ் என்ற உறுதியான தலைமை
மட்டுமல்ல ...கபில் தேவ்ன்
போலிங் முறையில் சிறிது மாற்றத்தை செய்தார் ..

மீடியம் பௌலிங் மகிந்தர் அமர்நாத் பந்துவீச வைத்தார்.

திடீரென வெஸ்ட்இண்டீஸ் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன

அந்தக் காலத்தில் வீழ்த்த முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணியை காலமும் சூழ்நிலையும் அதற்கேற்ற தலைமையும்
உருவாக்கி இந்திய உலகக் கோப்பையை கபில்தேவ் மூலமாக பெற்றோம்.

எல்லாருடைய வெற்றியும் காலமும் சூழ்நிலையும் மட்டும் தான் நிர்ணயிக்கிறது..

எம்ஜிஆர் இறந்ததும் இனி திமுக தான் ஆட்சி செய்யும் என நினைத்து இருந்த காலத்தில்
கருணாநிதியால் இரண்டு ஆண்டுகள் கூட நிறைவு பெற முடியவில்லை
42 வயதான ஜெயலலிதா ஆட்சியை பிடிக்கும் என்று திமுக நினைத்திருக்கவே நினைத்து இருக்காது..

திடீரென ராஜீவ் காந்திக்கு இறக்கவே அது ஜெயலலிதாவுக்கு சாதகமாய் போனது. ஆட்சியில் அமர்ந்தது..

ஜெயலலிதா வெற்றியை தீர்மானித்தது காலம் சூழ்நிலையும்தான்..

அதற்குப் பிறகு திமுக,வைகோ தலைமையில்
வைகோவுக்கு அதிக வாய்ப்பு இருந்தது. உதயசூரியன் சின்னம் முடக்கப்பட்டது.
திமுகவிற்கு இருண்ட காலமாக அது இருந்தது. மதிமுக வைகோ தலைமையில் வீறுகொண்டு எழுந்தது

ஆனால் 96 தலைவரின் திமுக ஆதரவு அறிக்கைக்குப் பிறகு மதிமுக செல்லாக்காசானது.

செல்லாக்காசாகி இருந்த திமுக
தலைவரின் ஆசியுடன்
கலைஞர் மீண்டும் முதலமைச்சரானார் ..

அரசியலை தீர்மானிப்பது காலமும் சூழ்நிலையும் தான்

காமராஜர் என்ற பெருந்தலைவரை திமுகவால் தோற்கடிக்கவே முடிந்திருக்காது..

காமராஜரின் தோற்கடித்தது திமுக அல்ல ..

இந்தித் திணிப்பு என்ற தேசிய காங்கிரஸின் கோஷம்

தமிழ் மொழியால் தோற்றார் காமராஜர்
அண்ணாவால் தன் தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை..

MGR என்ற ஒரு நடிகனின் பலம் அறிந்த அண்ணா எம்ஜிஆர் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டதால்,
எம்ஜிஆர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு இவையெல்லாம் அண்ணாவை முதலமைச்சராய் ஆக்கியது.
அண்ணா செய்த அரசியலை
கருணாநிதி செய்யத் தவறியதால்
எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்க
நிர்ப்பந்திக்கப்பட்டார்.
முதலில் எம்ஜிஆருக்கு நாம் தேர்தலில் நின்றால் வெல்லுவோமா என்ற சந்தேகம் தான் அதிகமாய் இருந்தது..
திண்டுக்கல் இடைத்தேர்தல்
எம்ஜிஆருக்கு ஒரு பரிசோதனையாக இருந்தது.
ஆனால் எம்ஜிஆர் எதிர்பார்க்காத வண்ணம்
அந்தத் தேர்தலில் அவர் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

அதற்குப் பின்பு சட்டமன்றத் தேர்தலில் திமுக எம்ஜிஆரை வெல்ல முடியவில்லை.

எம்ஜிஆர் அரசியல் செய்வதற்கு காலமும் சூழ்நிலையும் மட்டுமே காரணமாக இருந்தது.
அசைக்க முடியாத காங்கிரசை டெல்லீயில்
அண்ணா அசாரே மூலம் வீழ்த்தி காட்டினார் சாதாரண ஒரு அரசு அதிகாரியாக இருந்த கெஜ்ரிவால்..

என்பது காலக்கட்டத்தில் இரண்டு எம்பிகள் மட்டுமே கொண்ட பாரதிய ஜனதாவால்

அத்வானி என்ற ஒரு மனிதர்
தனது ரதயாத்திரையால்
பாரதிய ஜனதாவால் ஆட்சி அமைக்க
முடியும் என்று நிரூபித்தார்.

ராஜீவ் கொலைக்குப் பிறகு அரசியல் முழுக்கு போட்டிருந்த சோனியாவை நீங்கள் அரசியலுக்கு வந்தால் தான் காங்கிரஸ் மீண்டும் பிழைக்கும் என நேரு குடும்பத்தை மீண்டும் நிறுத்தியதால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது
ஆனால் இத்தாலி காரி சோனியா இந்தியநாட்டை ஆளக்கூடாது என விமர்சனம் வந்ததால் கூஜாவாக இருந்த.
அதுவும் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் மன்மோகன்சிங்குக்கு பிரதமர் ஜாக்பாட் கிடைத்தது.

அரசியலில் அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலேயும் அமைகின்றன

ராஜுவ் இறந்தார் ..
யாரெனத் தெரியாத நரசிம்மராவ் பிரதமராக மாறினார்.

கூட்டணி ஆட்சியில் தேவகவுடா பிரதமராகிறார்.

அரசியலில் அதிர்ஷ்டத்தால் வென்றவர்கள்
நேரு முதல்
பன்னீர்,எடப்பாடி வரை .

நாளையும் ஒரு அதிசயம் அற்புதம் நடக்கும் ..

2021ல் முதலமைச்சர் பதவியே துச்சமென நினைக்கும்
என் தலைவன் காலில்
அந்தப் பதவியே மண்டியிடும்..

அரசியலில் சோதனைகள் ஏற்படும் பொழுதெல்லாம் ஒரு புது தலைமை உருவாகும்.

அந்தநாள் இன்னும் ஆறு மாதத்தில் என் தலைவன் தலைமையில் உருவாகும்

என் தலைவன் சொன்ன மாதிரி ஆண்டவனே நம்ம பக்கம்

இந்த முறை ஆண்டவனின் அருளும் காலம் சூழ்நிலை தலைவர் பக்கம் தான் இருக்கிறது
அரசியல் எதிரிகளின் நக்கலுக்கும் நய்யாண்டிக்கும் இடம் கொடுக்காமல்

தலைவன் அரசியலில் துளிகூட சந்தேகப்படாமல் அவர்மேல் விசுவாசம் வைப்போம் .

இயேசு கிறிஸ்து மறைவுக்குப்பின் 13 பேர் உலகம் முழுவதும் கிறிஸ்துவ மதத்தை பரப்ப முடியும் என்றால்
தலைவா உன் கட்சியை உலகெங்கும் பரப்ப கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த உலகங்கெங்கும் உள்ளனர்..

தலைவரின் கொள்கை பிரகடனம் உலகின் எல்லா மூலையிலும் ஒரே நாளில் சென்றடையும்..

உங்கள் பின்னால் நாங்கள்
உங்கள் முன்னால் தமிழகம்.
@rajinikanth
You can follow @Djagannathan1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: