தலைவருக்கு தெரியாதது எதுவும் இல்லை.நீங்கள் கேட்பதால் மனதில் தோன்றியதை சொல்கிறேன்.தலைவருக்கு தெரியும் எப்போ என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று.தலைவரின் முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.(நெகட்டிவ் எனில் அதில் இருந்து வெளி வர சில மாத‌ங்க‌ள் ஆகும். அது ஒரு பெரிய வலி)
தலைவர் கட்சி கொடி பெயர் எல்லாம் நவம்பர் மாதமே அறிவிக்க வேண்டும். கண்டிப்பாக தலைவர் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும்.. காரணம் தலைவரால் சுற்றுப்பயணம், மாநாடு என்று எதுவும் பண்ண முடியாது அதனால் கண்டிப்பாக தலைவர் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும்.
அனைத்து அறிவிப்புகளும், கூட்டங்களும், விவாதங்களும், கூட்டணி முடிவுகள், கூட்டணி கட்சிகளின் ஆலோசனைகளும் ஜும் மீட்டிங், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த வேண்டும். தலைவர் வீட்டில் மட்டுமே இருக்க வேண்டும் கட்சி சம்மந்தப்பட்டவர்கள், கூட்டணி கட்சியினர், அரசியல் ஆலோசகர்கள், நண்பர்கள்
யாரும் நேரில் சென்று தலைவரை பார்க்கவே கூடாது. அனைத்தும் தொலைபேசி அல்லது ஆன்லைன் வழியாக மட்டுமே இருக்க வேண்டும். தற்போது ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பயன்படுத்திய தொழில் நுட்பம் உதவியுடன் தலைவர் வீட்டில் இருந்தே பிரச்சாரம் செய்ய முடியும். அது இல்லை என்றால் தலைவர் பே‌சிய வீடியோக்களை
மீடியாக்களில் ஒளிபரப்பு செய்யலாம். இங்கு ஏற்கனவே சிறிய வாகனத்தில் எல்இடி டிவி வைத்து அரசியல் கட்சிகள், மற்ற பொருட்கள் விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் அதை ஒவ்வொரு ஊரிலும் நேரடியாக மக்களிடம் தலைவரின் அனைத்து பிரசார வீடியோக்கள், கொள்கைகள் அனைத்தையும் கொண்டு சேர்க்கலாம்.
ஒரே நேரத்தில் அனைத்து செய்தி சேனல்கள் மற்றும் உள்ளூர் சேனல்களிலும் அடிக்கடி தலைவர் பே‌ச்சு, தலைவ‌ர் பேசிய புது புது வீடியோவை ஒளிபரப்பு செய்தால் போதும்.அதே போல் உறுப்பினர் அட்டைகள் உடனே வழங்க வேண்டும், கட்சி நிர்வாகிகள் நியமனம் முழுமை அடைய வேண்டும். கிளை, ஒன்றிய, மாவ‌ட்ட,
மாநில நிர்வாகிகள், மக்களிடம் நேரடியாக சென்று இப்போது செய்வது போல் மக்கள் குறைகளை நிவர்த்தி செய்து, தலைவரின் செயல் திட்டங்களை எடுத்து கூறினால் நல்லதே நடக்கும். டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் மூலம் பிரச்சாரங்கள் மிகவு‌ம் அதிகமாகவும் சரியாகவும் இருக்க வேண்டும்.
எம்ஜிஆர் அவர்கள் படுத்துக்கிட்டே வெற்றி பெற்றது போல நம் தலைவர் வீட்டில் இருந்தே பிரச்சாரம் செய்து வெற்றி பெற முடியும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. 🤘 🤘
You can follow @mp_saravanan2_0.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: