தலைவர் பத்தி நியூஸ் வந்தாலோ அவர் பேட்டிக்கு பிறகோ சில தலைவர் ரசிகர்கள் 'தலைவா இது வேண்டாம்' என்று சொல்லும்போது பல தலைவர் ரசிகர்கள் சொல்லும் வார்த்தைகள் 👇

'உனக்கு என்ன தெரியும் பொத்திட்டு இரு,நீ தலைவர் ரசிகனா,தலைவருக்கு எல்லாம் தெரியும்'

அந்த அறிவுஜீவிகளுக்கான த்ரெட் இது(1/7)
இது அரசியல் கண்ணா..

நிறைய ரசிகர்கள் ஆலோசனைகள் தருவார்கள் தான்.. ஏன் என்றால் ஆலோசனை தருபவர்கள் அவர்கள் சுற்றியுள்ள மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை தலைவருக்கு தெரிய படுத்த தான் முயற்சிப்பார்கள்

மக்கள் மனநிலை எப்படி இருக்கு மக்கள் நம் கட்சியை எப்படி பார்க்கிறார்கள் என்று (2/7)
ஒவ்வொரு ரசிகனிடம் அவன் ஏரியாவின் பிரதிபலிப்பு இருக்கத்தான்செய்யும்

அது - ve இருந்தா தலைவரிடம் சொல்லத்தான் செய்வான் இப்படி பண்ண வேண்டாம் என்று

தலைவா நீ ஒரு மாசத்துக்கு முன்னாடி கட்சி ஆரம்பிச்சா போதும் ஜெயிச்சடலாம் நாங்க இருக்கோம்னு சொல்றவனை எல்லாம் என்ன சொல்றதுனு தெரில!?(3/7)
அரசியலை பத்தி தெரியுமா!? அரசியல் கள நிலவரங்கள் எந்த போக்குல போயிட்டு இருக்குதான்னு தெரியுமா!?

ஒரு சொல் உண்டு

'ஆயிரம் ஆலோசனைகளை கேள் ஆனால் முடிவு நீ மட்டும் தான் எடுக்க வேண்டும்'

தலைவர் லட்சம் பேரிடம் ஆலோசனைகள் கேக்கட்டும்.. முடிவு அவருடையது..

(4/7)
ஆனால் உனக்கு என்ன தெரியும் மூடின்னு இரு தலைவருக்கு எல்லாம் தெரியும் ன்னா என்ன அர்த்தம்!?

பின்பு ஏன் தலைவர் இவ்வளவு பேரிடம் ஆலோசனைகளை கேட்டுக் கொண்டுருக்கிறார் தினமும்!?

இந்த ஆலோசனைகளை ஒரு ரசிகன் சொல்லக் கூடாதா!?

அரசியல் விமர்சகர், அறிஞர்கள் மட்டும் தான் சொல்ல வேண்டுமா!?

(5/7)
கடைசியாக ஒன்று

என் தலைவர் ஜெயிக்க வேண்டும் என் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நான் தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும் அது நெகடிவ்வா இருந்தாலும் அழுத்தமாக சொல்லுவேன்

பிற ரசிகர்கள் சொல்லும் சொல்லுக்கு செவி சாய்க்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்!(6/7)
இந்த த்ரெட் க்கு வரும் கமெண்ட்களை வரவேற்கிறேன்..

ஏனென்றால் உங்களை மாதிரி நான் அறிவுஜீவி என்று கம்பு சுத்துவதில்லை.. அனைவரின் கருத்துக்களையும் வரவேற்பேன்.. செவி கொடுத்தும் கேப்பேன்..(7/7)

தலைவா
@rajinikanth FYI
You can follow @sarvan_lsr.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: