சிவலிங்கம் 🙏🙏🙏

சிவலிங்கம் என்பது இறைவனை அடைவதற்கு அல்லது தெரிந்து கொள்வதற்கான ஒரு அடையாளச் சின்னம் அல்லது ஒரு குறி ஆகும். லி – லயம், கம் — தோற்றம். உலகின் அனைத்து பொருட்களும் தோன்றுவதற்கும், ஒடுங்குவதற்குமான இடம்
1/15
சிவலிங்கம் என்றால் சிவனின் அருவுருவ திருமேனி அதாவது உருவத்திற்கும் அருவத்திற்கும் இடைப்பட்ட ஒரு அடையாளமேயாகும். இதனையே
காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்
என்கிறார் சேக்கிழார்.
2/15
லிங்க புராணத்தில் சிவலிங்கம் பற்றி என்ன சொல்லப்பட்டிக்கிறது எனப்பார்த்தால் மேற்பகுதி அண்ட சராசரங்களையும் கீற்பகுதி அண்டசராசங்களை தாங்கி நிற்கும் மிக அளப்பரிய சக்தியையும் குறிக்கும் என செல்லப்பட்டிருக்கிறது.
3/15
சிவ புராணத்தில் சிவலிங்கத்தின் மேற்பகுதி சிறிதிற்கும் சிறிதான பெரிதிற்கும் பெரிதான சகலத்தையும் உள்ளடக்கிய ஒரு ஸ்தம்பம் எனக் குறிப்பிடுகிறது இதனையே மாணிக்கவாசகர் அணுவிற்குள் அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய் என கூறுகிறார் இந்த கருத்தும் லிங்க புராண கருத்தினையே வலியுறுத்துகிறது
4/15
லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே
5/15
அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் வெளிப்படுகின்றன.

தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது.
6/15
லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன. இதன் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக் கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம்.
7/15
இவ்வாராக மூவரின் ஆற்றலையும் உள்ளடக்கிய பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம்.
சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த்
8/15
தெரிகிறது.
சிவ ஆகமப்படி பீடமானது சக்தியையும் (நாதம்), லிங்கமானது (விந்து) சிவனையும் குறிக்கும் ஒரு சிவசக்தி சொருபமே சிவலிங்கமாகும். பஞ்சாட்சர தத்துவத்தில் சிவவிங்கம்
கீழ்ப்பாகம் — ந
நடுப்பாகம் — ம
மேல்ப்பாகம் — சி
நாதக்குழி — வ
லிங்கம் — ய ஆகும்.
9/15
இவை நிவர்த்தி கலை, பிரதிஸ்டைக் கலை, வித்தியாக் கலை, சாந்திக் கலை, சாந்தியாதீதக் கலை என்று பஞ்சகலா சக்தி ரூபமாகிறது. சிவலிங்க வடிவம் சுயம்புவாக தோன்றியது. இது உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒன்றாகும் இயற்கையோடு இசைந்த தத்துவம். நாதமும் விந்துவும் அதாவது ஒலியும் ஒளியும்
10/15
இணைந்த சிவசக்தித் தத்துவமாகும். லிங்கம் என்பது புலன்களிற்கு எட்டாத பரம் பொருளிற்கு சின்னமாக அமைந்தது.
சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்களத்தின் அதாவது சுபத்தின் அடையாள வடிவமே சிவலிங்கமாகும்.
11/15
பளிங்கினால் செய்யப்பட்ட ஸ்படிக லிங்க வழிபாடு தான் சிறந்த வழிபாட்டு வகையாக கருதப்படுகிறது. காரணம் அந்த பொருளுக்கு அதற்கென சொந்தமாக நிறம் கிடையாது. அது எதனோடு தொடர்பில் ஈடுபடுகிறதோ அதன் நிறத்தையே பெறுகிறது. அதனால் அது ‘நிர்குண பிரம்மன’ அல்லது இயல் பண்புகள் முற்றிலும் ஒழிந்த
12/15
முதன்மை சக்தி அல்லது உருவமற்ற சிவனை குறிக்கும்.
அணுமின் நிலையங்களின் கொதிகலன்கள் 90 விழுக்காடு லிங்க வடிவிலேயே அமைந்துள்ளன. இதனையும் கருத்திற் கொண்டு ஆய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும். எல்லையற்று விரிந்துஇ பரந்து இருக்கும் ஓர் அளப்பரிய சக்தியின் அல்லது இறைத் தன்மையின்
13/15
ஆதிவடிவமேலிங்க வடிவமாகும்.
சிவதியானத்தில் முதல்படி சாதாரணமாக நாம் வீடுகளில் வைத்திருக்கும் படங்களில் வைத்திருக்கும் சிவனின் உருவம். இரண்டாவது படி சிவசக்தியான அருவுருவத் திருமேனியான லிங்கத் திருவுருவம். மூன்றாவது படி அருவத் தியானம். இது ஒரு குருவின் மூலம் மட்டுமே
14/15
தெரிந்து கொள்ள வேண்டியது. அருணகிரிநாதர் இதனை ஒட்டியே “அருவாய் உருவாய் குருவாய்” என அருளியுள்ளார்.
உருவமாய், அருவுருவமாய், அருவமாய் படிப்படியாக தியானம் செய்த ஒருவர் சிவோகம் என்ற நிலையை அடைகிறார். அதாவது நானே சிவம் என்ற நிலையை அடைகிறார். இதனையே சான்றோர்கள் “தெள்ளத்
15/16
தெளிந்தாரிற்கு சீவன் சிவலிங்கமாமே” என்று கூறியுள்ளனர். தெள்ள தெளிந்து முழுமையாக உணரந்தவரிறகே சீவன் சிவலிங்கமாகும். இதுவே இந்து மதத்தினரின் இறுதி நிலையாகும். இதனையே “தத்துவ மசி” — நான் அது ஆதல். “அஹம் பிரமாஸ்மி” – நானே கடவுள் என வேதங்கள் சொல்கின்றன.

சிவாயநம 🙏🙏🙏
You can follow @siththan22.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: