Daddy’s little princess விட His Queen அப்படிங்கறது பகிரங்க செல்லமா தான் பாக்கனும். இன்னிக்கி #Anithasampath ‘த்தோட கன்ஃபெஷன் ரூம் அழுகை நம்ம’ல்ல பல பேரின் நிதர்சனத்த உணர்த்துறாப்ள இருந்துச்சு.அவரில்லனா நம்ம என்ன பண்ணப்போறோம்ங்கற பயத்தையும் உள்ள விதைக்குது. /1
நல்ல படிக்கிறா , தெளிவா இருக்குறா... அவ முடிவ அவளே எடுக்கட்டும் (இல்ல) எடுத்த முடிவு சரியா இருக்கும்னு பெற்றோர் நம்புற முடிவுல ஒன்னு தான் தனக்கான துணைய தானே தேர்ந்தெடுப்பது. மனசுல பட்டதும், சரிங்கறதுக்கு உடன் நிக்கறதும், இத்தனை துணிவும் இருந்தும் /2
பெண் என்பதுனாலவே இளகிய மனமும் இருந்திருது அதுக்கு வெகுளித்தனம் (அல்லது) குழந்தைத்தனம் அப்படினு ஏத்துக்கிட்டு நம்மள கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அப்பாம்மா மாதிரியே... உன் இயல்பு அத மாத்திக்காதனும் அவங்க நம்மள சரிப்பாதியா நடத்த ஆரம்பிச்சதும்/3
நமக்கு ஒரு பயம் வந்திருதுங்க. நம்மளே நம்ம கூட வாழமுடியாத ஒரு பைப்போலார் டிஸ்ஸார்டர்ல தவிக்கிறோம்...பெத்ததுக தான் விதியே நம்மள ஊக்குவிக்குதுகன்னா இவரும் அப்படியே சொல்றாரே... “ஒரு வேளை இருக்குமோ”ன்னு பரிதாபங்கள் சுதாக்கர் மாதிரி யோசிக்க வெச்சிருது இந்த காலத்து ஆண்களின் அனுகுமுறை /4
இப்படியாக இருக்கும் போது... சமூகமோ/ சொந்தமோ/ குடும்பமோ அங்கீகரிக்கற பெண்களின் முடிவு எல்லாமுமே “இது சரியா இருக்கும் நீ பண்ணு” அப்படினு சொன்ன கணவரால மட்டும் தான். இப்படி ஒன்னு ரெண்டு மூணுன்னு வரிசையா முடிவுகள் எடுக்க ஆரம்பிப்போம் எல்லாத்துக்கும் அவர் Support தான். /5
மீடியான்னு மட்டுமில்ல ஏன் ட்விட்டர்ல காலம் தள்ளுறதும் பெரிய போராட்டம் தான். “எப்பா ஏய்ய்ய்... இதெல்லாம் தப்புப்பா” எங்கயாச்சும் சொன்னா போதும் ஒரு சாரார் ஆதரிக்கவும் மறுசாரார் மண்ண வாரி தூத்துறதும் வாடிக்கை ஆனது தான். அதுல மிக பெரிய மன அழுத்தம் பெண்களை சார்ந்தது . /6
அதிலும் திருமணமான பெண்கள். எனக்கான ஒரு கருத்திருக்கு அத என் டேட்டா என் டிஎல்ல நான் எழுதுறேன்... இதுல நீ யாருவேன்னு இங்க கேட்டுருவேன்... அவனும் அவளே இவளேன்னு பேசிருவான்னு வெச்சுக்கோங்க. போடா போடா நீ வாடா வாடா டீலிங்ல அது ட்விட்டர்ல முடிஞ்சாலும்... இதோட அந்த ஸ்ட்றஸ் ரியல் லைஃப்/7
ரியல் லைஃப்க்குள்ள வந்துருது. அப்போ அவர்ட்ட தான் ஷேர் பண்ண முடியும் இல்லியா? அப்போ “பாப்பா... அவங்க கிடக்குறாங்க! இந்த பாயிண்டும் சொல்ருக்கலாம்ல! எனக்கு தான் ட்விட்டர் வராது... நீயாச்சும் இந்த ப்ரச்சனைய எழுதலாம்ல”னு அடுத்த டாப்பிக் /8
கூட்டிப்போயிடுவார். இப்படி ஒன்னு ரெண்டு நண்பர்களும் இருக்காங்க. இது என் அனுபவம். அவ்வளவே. ஆக, இந்த காலத்து ஆண்கள் இப்படி நீ முன்னேறுன்னு நம்மள தூக்கி விடுறது பேரானந்தம்னு நினைச்சு மிதப்புல வாழ்ந்துக்கிட்டிருக்கப்போ! #Anithasampath உடைஞ்சு அழுதது /9
எங்களுக்கு பெரிய அச்சுருத்தல ஏற்படுத்திருக்கு . “ நான் ஒன்னு முடிவு பண்ணி செஞ்சிட்டேன். எது சரி தப்புனு சொல்ல நீயெல்லடா” அப்படிங்கற அந்த நிலைமைல தான் எல்லாருமே சிக்கியிருக்கோம். Hyperness/bubbly/frank/open-minded/Socializing/being me அப்படிங்கறது ஒரு முள்/10
அந்த முள்ளுல நம்ப சேலைய போட்டுட்டோம் . இனி அனிதா மாதிரி தவிக்கற நிலைமைக்கு தள்ளப்பட்டிறாத மாதிரி அந்த சேலைய கிழிஞ்சிராம எடுக்கக் கத்துக்கனும்.
His Queen என்பது முள்ளால் ஆன க்ரீடம்னு உணர்ந்தது இன்னிக்கி #BigBossTamil4 ‘ல தான் /11
His Queen என்பது முள்ளால் ஆன க்ரீடம்னு உணர்ந்தது இன்னிக்கி #BigBossTamil4 ‘ல தான் /11
அவர் காதலுக்கு பரிசு நம்ம பொறுமையா ஒரு விஷயத்த கையாளனுங்கறதா தான் இருக்கும். இந்த Being Me அவருக்கு வேண்டுமாயின் நம்மிடம் பிடித்த விஷயமாக அமைந்திருக்கட்டும். அவருக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதே சிறப்பு/12