🌺கூத்தனூர் ஸரஸ்வதி கோயில்....🌺

இன்று நவராத்திரியின் ஸரஸ்வதிக்கான தினத்தில் ஸரஸ்வதி தேவிக்கான கோயில் பற்றிப் பார்ப்போம்...

🌼. தமிழ்நாட்டிலேயே ஸரஸ்வதி தேவிக்கென்று தனிக்கோயில் உள்ள திருத்தலம்
🌼கூத்தனூர்🌼

🌼. ஸரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி,
அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தக்ஷிண த்ரிவேணி சங்கமாகப் பரிணமிக்கிறாள் என ப்ரமாண்ட புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

🌼. ஒரு சமயம் நான்முகனுக்கும் ஸரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக, இருவரும் பூமியில் பஹுகாந்தன், ஸ்ரத்தை எனும்
பெயர்களில் பிறக்க, ஸ்ரத்தையாக பிறந்த ஸரஸ்வதி இத்தலத்தில் கோயில் கொண்டாள் எனத் தலவரலாறு கூறுகிறது.

பெயர்களில் பிறக்க, சிரத்தையாக பிறந்த சரஸ்வதி இத்தலத்தில் கோயில் கொண்டாள் என தலவரலாறு கூறுகிறது.

🌼. பஹுகாந்தனாகப் பிறந்த நான்முகன் பித்ரு கார்யங்களில் முக்கியமாகப் போற்றப்படுவார்
என ஈசன் அருள் வழங்கியதால், கூத்தனூரில் அரசலாற்றில் புரியும் பித்ருகார்யங்கள் விசேஷ பலன்களைத் தருவதாக ஐதீகம்.

🌼. அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என புராண காலத்தில் அழைக்கப்பட்ட இத்தலத்தை, இரண்டாம் ராஜராஜன் தன் சபையில் அரசவைப் புலவராக விளங்கிய,
ஸரஸ்வதியின் அருள்பெற்ற ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினார்.

🌼. ஒட்டக்கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன்+ ஊர் = கூத்தனூர் என்றாயிற்று. ஒட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி ஸந்நதி உள்ளது.

🌼. விமானக் கலசம், ஞானத்தின் உருவாய் ஸரஸ்வதி இங்கு உறைவதைக்
குறிக்கும் வகையில், ஐந்து எனும் எண்ணிக்கையில் உள்ளது.

🌼. கருவறையில் வீணை இல்லாத
ஸரஸ்வதி தேவியை தரிசிக்கலாம்.

🌼. அர்த்த மண்டபத்தில் உற்சவ விக்ரகங்கள் அருள்கின்றன.

🌼. இத்தல நடராஜரின் பாதத்தின் கீழ் காணப்படும் முயலகன், பக்கவாட்டில் இல்லாமல், நேராக உள்ளது சிறப்பு.
🌼. மஹா மண்டபத்தின் இடது புறம் நான்கு முகங்களுடன் வேதம் ஓதும் நான்முகன்
அருள்புரிகிறார்.

🌼. கருவறையின் முன் ஸரஸ்வதியின் வாஹனமான ராஜஹம்ஸம் எனப்படும் அன்னம், அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது.

🌼. கம்பருக்காக இந்த ஸரஸ்வதி, கிழங்கு விற்கும் மூதாட்டியாகவும்,
இடையர் குலப் பெண்ணாகவும் நேரில் வந்து சங்கடங்கள் தீர்த்தவள்.

🌼. ஒட்டக்கூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு, பரணி பாடினால் விட்டுவிடுவதாகக் கூற, கூத்தரின் நாவில் அமர்ந்து பரணி பாடினாள் இந்த அன்னை.

தன்னைக் காத்த இந்த ஸரஸ்வதியை 'ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே' என
மனதாறப் பாடிப் பணிந்தார் ஒட்டக்கூத்தர்.

🌼. பிறவியிலேயே பேச்சிழந்த புருஷோத்தமன் எனும் பக்தனுக்கு, தன் தாம்பூல எச்சிலைத் தந்து, பூவுலகம் போற்றும் புருஷோத்தம தீட்சிதர் ஆக்கிய பெருமை பெற்றவள் இந்த தேவி.

🌼. பௌர்ணமியன்று இந்த அன்னைக்குத் தேனபிஷேகம் செய்து,
அந்த ப்ரஸாத தேனை மோதிர விரலால் ஸரஸ்வதியை தியானித்தபடி உட்கொள்ள, கல்வியறிவு பெருகும் என்பது ஐதீகம்.

🌼. ஸரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் ஸரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே பூஜிக்கும் வகையில் கருவறையிலிருந்து நீண்ட பாதங்கள் அமையுமாறு அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சி.
🌼. விஜயதஸமி அன்று புகழ்பெற்ற கலைஞர்கள் இத்தலம் வந்து தங்கள் கலைத்திறமையை தேவிக்கு அர்ப்பணிப்பது வழக்கம்.

🌼. சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவ மாணவியர் தேர்வு எழுதுமுன் தங்கள் எழுதுகோலை இந்த தேவியின் முன்வைத்து வணங்கி, பின்பே தேர்வு எழுத செல்கின்றனர்.
🌼. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் எனும் ஊரின் அருகே அரைகிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.

🙏: வாட்ஸப்

🍁வாஸவி நாராயணன்🍁
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: