மனிதன் முதன் முதலில் எழுதியது கணக்கு வழக்கு தான், இலக்கியங்கள் இல்லை. எழுத்தின் தேவையை ஏற்படுத்தியது கணக்கு வழக்கு சிக்கல் தான். ராஜாங்கள்கள் உருவான பின் அத்தனை மக்களின் சொத்து விவரம், வரவு, கடன், வரி வசூல் எல்லாம் கணக்கு வைக்க மனித மூளைக்கு அப்பால் எழுத்து வடிவம் தேவைப்பட்டது.
இந்த கணக்குகள் எல்லாம் சேமித்து வைக்க, மீண்டும் போய் அலச symbolsஐ தாண்டி numbers தேவைப்பட்டது. பகிர்ந்து அளிக்க fractions, இல்லாமையை குறிக்க zero, வரவு செலவுக்கு negative numbers இப்படி மனிதனின் தேவைக்கேற்ப கணிதம் வளர்ந்துக்கொண்டுள்ளது. உலகின் பொருட்களின் வடிவங்களைப் பார்த்து
geometry. கணிதம் தேவைக்கேற்ப வளர 2300 வருடங்களுக்கு முன்பு கிரேக்கர்களுக்கு இயற்கை விதிகளை கடவுள் கணிதத்தின் மூலம் எழுதியுள்ளார் என நம்பினர். கணிதம் தேவையிலிருந்து இந்த உலகையை புரிந்துக்கொள்ள ஒரு கருவியாக பார்க்கப்பட்டது. கணிதம் கிரேக்கர்களுக்கு தத்துவ பாடம்.
ஆனால் 18ஆம் century வரையுமே மிகப்பெரிய mathematiciansகே கணிதத்தையும் நிஜ வாழ்க்கையும் இணைத்து பல குழப்பங்கள் இருந்தன. யாரும் negative numbers உபயோகிக்கவே தயங்கினர். Euler -1 infinity விட பெரியது என எழுதினார். கணிதம் இதற்கிடையில் நிஜ உலகத்தைப்போல் அதுக்கென்று கணித உலகம்
ஒன்று உருவாகிக்கொண்டு இருந்தது. கோள்களையும் அதனுடைய பாதையையும் கண்ணகளாலும் telescopeஆலும் கண்டுபித்துக் கொண்டு இருந்த மனிதன் Newton's law மூலம் Neptuneயை கண்டுபிடித்தான் மற்றும் மற்ற planetsஉடைய motionஉம் மிகச்சரியாக Newton's law தருகிறது. Newton's law தான் இந்த பிரபஞ்சம் செயலை
விவரிக்கும் விதி என எண்ணிய போது, Mercuryஇன் motion மட்டும் சரியாக வரவில்லை. So mercury முன்னால் வேறு ஒரு planet இருக்கலாம், Newton's law தப்பாக இருக்காது என அந்த புதிய planet தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால் அப்படி ஒரு planet கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்பு 1916இல் Eisensteinஇன் General Relativity Mercuryஇன் motionஐ மிகச்சரியாக கணிக்கிறது. Gravity அதிகம் இருக்கும் பட்சத்தில் Newton's law வேலைச்செய்யாது என அறிகின்றனர். இந்த தேடலில் ஒரு சுவாரசியம் உள்ளது அல்லவா, விடைக்கான தேடல். ஒரு புதிருக்கான விடைத்தேடல்.
இதே புதிர் கணிதத்தின் உலகத்திலும் உண்டு. அதுக்கான விதிகளுக்கு உட்பட்டு. ஒரு cubic equationக்கு 3 solutions இருக்க வேண்டும் என விதி. ஆனால், ஒரு சில equationsகு பதில் √-1 formஇல் வருகிறது. √-1 என்றால் என்ன அதுக்கான தேடலில் imaginary numbers எனும் number கண்டுபிடிக்கப்படுகிறது.
புதிருக்கான தேடல்.
1+2+3+4+5+6+..... = -1/12
இதை பார்க்கும் போது எப்படி இவ்வாறு இருக்கும், ஒரு curiosity வருகிறது அல்லவா. இந்த புதிருக்கான தேடல் ஆரம்பிக்கும். இதனால் நம் வாழ்க்கைக்கு என்ன பயன் என தோணாது. இவ்வாறு mathematicians இந்த கணித உலகின் அழகியகியலுக்காக கணிதம்
வளர ஆரம்பித்தது. தேவையை தாண்டி, புரிதலைத்தாண்டி கணிதத்தின் அழகியலால் கணித வளர்கிறது.
H.Poincare உடைய quote "The mathematician does not study pure mathematics because it is useful; he studies it because he delights in it and he delights in it because it is beautiful".
G.H.Hardy Number theory பற்றி research செய்யும் போது, number theoryகு அந்த காலகட்டத்தில் எந்த உபயோகமும் இல்லை. அவர் கூறுகிறார் "We have concluded that trivial mathematics is, on the whole, useful, and that the real mathematics, on the whole, is not." அவர் மறைந்து பல வருடங்களுக்கு
பிறகு Number theoryஇன் உபயோகம் Security system, Barcodes, Authentication system இப்படி பலதில் உள்ளது. ஆனால், இதற்காக number theory அவர் research செய்யவில்லை. இந்த கணித உலகம் நம் காலத்தை தாண்டி பல நூற்றாண்டுங்கள் முன்னே உள்ளன, முக்காலவாசியின் உபயோகம் இன்று இல்லை.
ஆனால், அதுக்கான தேவை ஒரு நாள் வரும். வெளிச்சம், இசை, வெப்பம், உணர்வு இவ்வாறு நம் உணர்வை ஒரு mathematical equation தருகிறது. ஏன் சந்தோசம் சோகம் கூட mathematical equationஆல் சொல்லலாம். இந்த பிரபஞ்சத்தின் நியதியே ஒரு mathematical equationனால் தர முடிகிறது.
Eisenstein quote உடன் முடிக்கிறேன்
"How can it be that mathematics, being after all a product of human thought, independence of experience, is so admirably appropriate to the objects of reality?"
You can follow @manithan2020.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: