நான் மோடியை என்றுமே தனி இயக்கத்தை சேர்ந்தவராக பார்க்க வில்லை அவர் இந்திய பிரதமராக தேசத்தின் தலைவர்களில் ஒருவராக தான் பார்க்கிறேன்🙏

தலைவர் கூட்டணி அமைத்தாலும் ஏற்றுக்கொள்வேன் ஏன் என்று கேட்பவர்களுக்கான பதில் இது🤔 https://twitter.com/narendramodi/status/1318574615992520705
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பிரதமராக இருந்த போது அதிகமான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ளவில்லை

ஆனால் அவர் மகள் இந்திரா அவர்களின் அரசியல் பயணம் கடினமானது அவரை சொந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களே எதிர்த்தனர் அங்கு காமராசர் என்ற ஆளுமை அவரை முன்னிறுத்தி பிரதமராக்கியது
பின்னாளில் அவரே காமாரசரை எதிர்த்தார் அவரின் அறிவுரைகளை கேட்க மறுத்தார் எமெர்ஜன்ஸியை கொண்டு வந்து நாடெங்கும் அதிர்ப்தியை ஏற்படுத்தினார் அவப்பெயர் பெற்றார்

பதவியை இழந்தார் மீண்டும் பிரதமாரகும் போது பழைய பாடங்கள் அவரை மாற்றின அவர் இறந்த பின் பிரதமரான அவர் மகன்
ராஜிவ் மக்கள் மனதில் நேருவை போல் நல்ல பெயர் பெற்றார் ஆனால் அனைத்தும் சிறிது காலமே அமைதிபடை அனுப்பி அவப்பெயர் பெற்றார்

இப்படி காங்கிரஸ்ஸின் பிரதான தலைவர்களே 100% நற்பெயருடன் ஆட்சி செய்ததில்லை
பின் வாஜ்பாய் ஆளும் காலத்தில் என்னற்ற சாதனைகள் இன்றைய நவீன இந்தியாவின் கட்டமைப்பு இவர் உருவாக்கியது தான் அப்துல்கலாம் ஐய்யாவை குடியரசு தலைவராக்கி இந்தியாவின் ராணுவ வலிமையை பன்மடங்காக்கினார்

முதல்முறை பிரதமர் ஆனதும் 13 மாதங்களில் ஆட்சி கலைப்பு ஜெ. ஆதரவு வாபஸ் கருணாநிதி ஆதரவு
பின்னாளில் குஜராத் கலவரம் இவர் அரசியல் அஸ்திவாரத்தை ஆட்டம் காண செய்தது நாடெங்கும் எதிர்ப்பலை

மீண்டும் காங்ரஸ் ஆட்சி இந்த முறை இந்தியாவின் சிறந்த பொருளாதார வல்லுனர் இந்திராகாந்தியின் அமைச்சரைவையில் இருந்தவர் மிகச்சிறந்த தலைவர்
மன்மோகன் சிங் வாஜ்பாயின் பெரும்பாலான திட்டங்களை அப்படியே தொடர்ந்து நடத்தினர் ஒரு சில திட்டங்களை தவிர மற்ற அனைத்தையும் நிறைவேற்றினார்

அவர் ஆட்சியின் தொடக்கத்தில் இருந்த வளர்ச்சி பின்னாளில் மெல்ல குறைந்தது விலைவாசி உயர்வு 2ஜி ஊழல் போன்ற குறை வடக்கில் காங்கிரஸ் க்கு சரிவை தந்தது
இலங்கை பிரச்சினை, ஆந்திர பிரச்சினை, காவிரி விவகாரம் முல்லை பெரியாரு பிரச்சினை அனைத்திலும் சுமூக முடிவு எட்டப்படாமல் தெற்கிலும் தேய்ந்தது இரண்டு முறை தொடர்ந்து பிரதமராக இருந்தும்

மிகச்சிறந்த பொருளாதார மேதையாக இருந்தும் உலக பொருளாதார சீர்குலைவிலிருந்து இந்தியாவை காத்தும் இவர்
தோல்வி அடைந்தார் காரணம் ஆளுமை இல்லை பொம்மை, கைப்பாவை, என்ற விமர்சனங்கள், கூட்டணி ஊழல் அரசு என்ற அடையாளம், ஆனால் தனிபட்ட முறையில் அவருக்கு எந்த கெட்ட பெயரும் இல்லை இருந்தும் தோல்வி

பின் தான் குஜராத் மாநிலத்தை இந்தியாவின் மாடலாக அறிமுகம் செய்த மோடியின் வருகை
மோடி தன் முதல்வராக இருந்த மாநிலத்தை ஒரு பிஸினஸ் ஹப்பாக மாற்றினார்..பெரும் தொழிற்சாலைகளை தன் மாநிலத்தில் நிர்ணயித்தார்

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த தொழில் நிறுவனங்களின் தலைமை நிலையத்தை குஜராத்தில் நிர்மாணித்து சாணக்கியத்தனம் செய்தார்
இந்திராவிற்கு பிறகு வலுவான இரதமர் என்ற பெயர் அவருக்கு இருக்கிறது...

முடிவில்லா பல பிரச்சினைகள் முடுத்து வைக்கபட்டது முடிவுகளை தந்தார் மோடி என்றே சொல்லலாம்

பல்வேறு விமரசனங்கள் இருந்தாலும் அவர் தந்த விடை இந்தியாவின் சிறந்த பிரதமர்களே தரத்தயங்கியது (காஷ்மீர்,ஆந்திரா)
அவர் அரசு கொஞ்சம் சருக்கியது #NEET #CAA #NRC ஆனாலும் இவை எதுவும் அவர் ஆட்சியிழக்கும் அளவுக்கு பெரியதாக இருக்க போவதில்லை

விமர்சங்களுக்கு அப்பர்பட்ட தலைவர்கள் யாரும் இல்லை சில எதிர்ப்புகள், விமர்சனங்கள் இருந்தாலும் #2023 ல் அவர் மீண்டும் பிரதமராகவே அதிக வாய்ப்பு இருக்கிறது
You can follow @PrithivirajK89.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: