#Thread #Dhoni #IPL2020

இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை. அதனால் ப்ளேயிங் லெவனில் இடம் தரவில்லை என்கிறார் மகேந்திர சிங் தோனி.

சி.எஸ்.கே தவிர மற்ற அணிகள் அனைத்தும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை நம்பியே விளையாடியும் வருகிறது.
பெங்களூரு அணிக்கு படிக்கல், சைனி, சுந்தர், சிராஜ், தூபே, குர்கிராத் சிங் போன்றோர்.

ஹைதராபாத் அணிக்கு கலீல், நடராஜன், விஜய் ஷங்கர், கர்க், சமத், அபிஷேக் போன்றோர்.

கொல்கத்தா அணிக்கு கில், மாவி, வருண், நாகர்கோட்டி, ப்ரஸித் க்ருஷ்ணா போன்றோர்.
ராஜஸ்தான் அணிக்கு கார்த்திக் தியாகி, ரியான் பராக், அங்கித் ரஜ்புத், உனாத்கட், ஸ்ரேயாஸ் கோபால், திவேதியா போன்றோர்.

டெல்லி அணிக்கு கேப்டனே 25 வயது இளைஞர்தான். தவிர, ப்ரிதிவ் ஷா, ரிஷப் பண்ட், அக்ஸர் படேல், தேஷ் பாண்டே உள்ளிட்ட இளம் பட்டாளத்தால் ஆனது டெல்லி.
பஞ்சாபுக்கு அர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா, ரவி பிஸ்னாய் போன்றோர் உண்டு. பல வீரர்களை சுழற்சி முறையில் கையாளவும் செய்தது.

மும்பை அணியை சொல்லவே வேண்டாம்... இளம் வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கி அனுப்பும் வேலையை செய்துகொண்டிருக்கிறது.
CSK என்ன செய்கிறது? எத்தனை தமிழக வீரர்களை அடையாளம் கண்டு வாய்ப்பளித்துள்ளது? ஆரம்ப நாட்களில் பத்ரிநாத், பாலாஜி, அஸ்வின், முரளி விஜய் போன்ற வீரர்களுக்கு இடம் கொடுத்தது. அவர்களும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் மட்டுமே.தவிர, அவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமையும் உண்டு.
சென்னை நம்ம ஊரு. நம்ம தமிழக அணி என்று சொல்லி சி.எஸ்.கே எனும் ஃப்ராடு டீம்க்கு ஆதரவு தரும் எல்லா முட்டாள்களையும் பார்த்து ஒன்றைக் கேட்கிறேன். ஏற்கனவே பலமுறைக் கேட்டதுதான். நம்மைப் போல ஒருத்தன் - நம்மள்ள ஒருத்தனுக்கு அங்க இடமே கிடைக்காதா ?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கமெண்ட்ரி பண்ணும் வேல கூட நம்மள்ள ஒருத்தனுக்கு ஏன் கிடைக்க மாட்டேங்குது ? தமிழ் பையன் ஒருத்தனை அடையாளம்கண்டு, நம்ம ஊருக்காக பிரதிநிதித்துவப்படுத்தும் எண்ணமே அவங்களுக்கு கிடையாதே...
அப்றம் எப்டி ’நம்ம ஊரு சென்னைக்கு பெரிய விசில் அடிங்கன்னு’ உங்களால கொண்டாட முடிகிறது ? காசு வாங்கிட்டு ஓட்டு போடும் வாக்காளர்களுக்கும் உங்களுக்கும் பெருசா வித்தியாசமே இல்லை என்பது எனது கருத்து.
அது போகட்டும்... இளைஞர், ஸ்பார்க் மேட்டரைப் பார்ப்போம்.
மற்ற அணிகளைப் போல இளம் வீரர்களை அடையாளம் கண்டு, தங்கள் அணிக்காக வாங்காமல் விட்டதற்கு யார் பொறுப்பு ? இருக்கும் இளம் வீரர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்காமல் இருப்பது யார் தவறு ? இப்போதைய சி.எஸ்.கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட்னு ஒரு இளம் வீரர் இருக்கிறார்.
லிஸ்ட் ஏ கேரியரில் அவரது பேட்டிங் ஆவ்ரேஜ் 49. ஸ்ட்ரைக் ரேட் 98. டி/20 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 134. இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய ஏ அணி நியூஸிலாந்துக்கு டூர் போனது. நியூஸி ஏ அணியுடனான 3 ஒருநாள் போட்டிகளில் 154 ரன்கள் எடுத்துள்ளார்.
பெங்களூரு அணிக்கு படிக்கல்லை தேர்வு செய்தது போல, சென்னை அணிக்கு ரெய்னாவின் இடத்தில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்திருக்கலாமே... ? திறமையான வீரர்தானே ?
பியூஷ் சாவ்லாவை ஆறே முக்கால் கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே. ஏன் இவ்வளவு விலை கொடுத்து சாவ்லாவை வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு, எல்லாம் எங்க தல தோனிக்கு தெரியும்... யார, எதுக்கு, எப்படி யூஸ் பண்ணனும்னு பூஜை பண்ணி பேசிட்டு போனார் டீம் மேனேஜ்மெண்ட்டை சார்ந்த ஒருத்தர்.
அப்படி பூஜை பண்ண மாலைதான், இன்னிக்கு சுருக்குக் கயிறாக மாறி கழுத்தை நெறிக்கிறது.

இன்னொன்று, திருவாளர் தோனி அவர்களின் முதல் நான்கு ஒருநாள் போட்டிகளின் இன்னிங்ஸ் இதுதான். 0, 12, 7*, 3.
அதன் பிறகும் கங்குலி வாய்ப்பு கொடுத்தார். பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் இருந்தபோதிலும்! அதனால்தான் தோனி நமக்கு கிடைத்தார். ஐந்தாவது போட்டியில் பகிஸ்தானுக்கு எதிராக 148 அடித்தார். அதன் பிறகான போட்டிகளிலும் டாப் ஆர்டரில் இறக்கிவிட்டும் சொதப்பவே செய்தார்.
10 போட்டிகளில் 184 ரன். ஆவ்ரேஜ் 18 . இருப்பினும், ஸ்பார்க் இருப்பதை உணர்ந்ததால்தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது இந்திய அணி. அது போல கெய்க்வாட்டையோ, ஜெகதீசனையோ உருவாக்கும் முனைப்பையே காட்டாமல் இருக்க காரணம் என்ன ?
நான் சொல்லட்டுமா? தோனிக்கு கல்யாண வீட்ல மாப்ளயாகவும்,இழவு வீட்ல பொணமாகவும் இருக்க வேண்டும் எனும் முனைப்பே அதிகம். தன்னைப்பற்றி மட்டுமே மீடியாக்கள் பேச வேண்டும். தான் மட்டுமே திறமையானவன் என்றும்,தனித்து விளங்குபவன் என்பதையும் நிறுவிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம்
தான் போன பிறகு, இன்னும் அதள பாதாளத்திற்கு போகும் என்று கருதியே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாதியில் ஓய்வை அறிவித்தார் தோனி.
என்ன இருந்தாலும் தோனி மாதிரி வருமா...
இதுக்கு தோனியே கேப்டனாக இருந்திருக்கலாம்...
போன்ற கருத்தாக்கங்கள் பரவ வேண்டும் என்றே எதிர்பார்த்தார்.
ஆனால் அவற்றை சுக்கு நூறாக உடைத்துப்போட்டார் விராத் கோலி. நம்பர் ஒன் அணியாக கொண்டு வந்தார். இன்றைய தினம் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கேப்டனாக உயர்ந்து நிற்கிறார் கோலி.
அதுபோலதான் லிமிட்டட் ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் கூட...
தனக்குப் பிறகு, தான் மட்டுமே கேப்டனாக பேசப்பட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். ஆனால் அதையும் உடைசிட்டு வறான் கோலி.
வின்னிங் பர்ஸண்டேஜ் 70 -க்கும் மேல.
இதுவரை இரண்டு ஐ.சி.சி தொடர்களில் மட்டும்தான் கேப்டனாக செயல்பட்டிருக்கிறான் கோலி.
இரண்டுமே இங்கிலாந்தில் நடைபெற்றவை. சாம்பியன்ஸ் ட்ராபியில் இறுதிப்போட்டிக்கு சென்றது இந்தியா. 339 ரன்களை சேஸிங் செய்ததால் வெற்றி கிடைக்கவில்லை.

உலகக்கோப்பையில் லீக் போட்டிகளில் இங்கிலாந்திடம் மட்டுமே தோற்று அட்டவணையில் முதலிடம் பிடித்தது இந்திய அணி.
அரையிறுதியில் நியூஸியின் அபாரமான பந்து வீச்சால் தோல்வியுற்றோம்.

அந்த 2 தொடர்களும் இங்கிலாந்துக்கு பதிலாக இந்தியாவில் நடைபெற்றிருந்தால், நமக்கு வெற்றி கைகூடி வந்திருக்கலாம். ஆனாலும், தான் கேப்டனாக பொறுப்பேற்ற இரண்டு ஐசிசி தொடர்களிலும் சிறப்பாகவே வழிநடத்தி சென்றான் விராத் கோலி.
இருப்பினும், இன்றளவும் தோனி ரசிகர்கள் செய்யும் ஏளனங்களில் முக்கியமான ஒன்று, கோலிக்கு கேப்டன்ஷிப் தெரியாது. ஐ.சி.சி கப்பு ஜெயிச்சானா? ஆர்.சி.பி-யை ஜெயிக்க வச்சானா ? ப்லா ப்லா ப்லா என்பதே. இது அண்ணார் தோனிக்கும் நல்லாவே தெரியும். நாம தனியா கெத்தா நிக்க வேண்டும் என்பதே அவரின் அவா.
இந்த வருஷம் அல்லது அடுத்த வருஷத்தோடு CSK அணியில் இருந்து ஓய்வுபெற்றாலும்,தோனி இருந்த வரைக்கும் CSK கெத்தா இருந்துச்சிப்பா... 10 ப்ளே ஆஃப்,3 முறை சாம்பியன் என்று அவரைப் பற்றி மட்டுமே பேச வேண்டும். அதற்காகவே அடுத்த தலைமுறை இளம் அணியை உருவாக்காமல் மிக தெளிவாக காய்களை நகர்த்துகிறார்.
யுவ்ராஜ்க்கு கல்தா கொடுத்து, தான் மட்டுமே மிடில் ஆர்டரில் நீடிக்க வேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டு செயல்பட்டார். நம்பர் 4, 5 இல் ஸ்திரமான வீரரை இன்று வரை அடையாளம் காண முடியாமல் திணறுகிறது இந்திய அணி. இன்னொன்று, ரிஷப் பண்ட் வயதில் தோனி சர்வதேச கிரிக்கெட்டுக்கு விளையாடவே வரவில்லை.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை உடைச்சிட்டான் பண்ட். இருந்தாலும், பண்ட் -க்கு கீப்பிங் பண்ண வரல, அவசரப்பட்டு அவ்ட் ஆகிடுறான். தோனி மாதிரி வருமா என்று கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள் தோனி ரசிகர்கள். நான் குறிப்பிடும் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
பொது புத்தியில் என்னல்லாம் விதைக்கப்படுதிறது என்பதை உணர்ந்தால் மட்டுமே நான் சொல்வதும் புரியும்.
மும்பைக்கு ரோஹித் இல்லைன்னாலும், RCB-க்கு கோலி இல்லைன்னாலும், டெல்லிக்கு ஸ்ரேயாஸ் இல்லைன்னாலும், கொல்கத்தாவிற்கு கார்த்திக் இல்லன்னாலும் இப்ப இருக்கும் நிலை அப்டியே நீடிக்கும்.
அந்தந்த அணி நிர்வாகம் அதை பார்த்துக்கும். ஆனால் சென்னைக்கு தோனி இல்லன்னா, மவுசும் இருக்காது. சிறப்பான அணியாக செயல்படவும் செய்யாது. ச்சே... தோனி சிறப்பா செயல்பட்ட வரைக்கும் சென்னை எப்டி இருந்துச்சு தெரியுமா என்று சிலாகிப்பார்கள் ஒவ்வொருவரும் !
அதுபோன்ற “ வந்தாய் ஐயா... வந்தாய் ஐயா... “ எனும் ரசிகர்களின் பூஜிக்கும் பாடலைத்தான் அவரும் எதிர்பார்க்கிறார் !

ஆனால் சென்னை இத்தனை ஆண்டுகாலம் சிறப்பாக செயல்பட்டதற்கும் தோனி மாத்திரமே காரணமல்ல. சுரேஷ் ரெய்னா எனும் நங்கூரம் அங்கே இருந்தது !
ஐ.பி.எல் -இல் கோலிக்கும் முன்னாடி லீடிங் ரன் ஸ்கோரர் சுரேஷ் ரெய்னா !

தவிர, சேப்பாக்கம் எனும் சொந்த குகையும் அதற்கேற்ற ஸ்பின்னர்களும் இருந்தார்கள்.

அதுபற்றி இன்னொரு நாளில் பார்ப்போம்!
இறுதியாக,

இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனியே சொல்வது அணியில் இருக்கும் இளம் வீரர்களை பலவீனப்படுத்தும் போக்காகும். அவர்களை அவமதிப்பதாகும். ஒருவித குற்ற உணர்சிக்கு ஆளாக்குவதாகும். ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களையும் குறைத்து மதிப்பிட்டு அவமதிப்பதாகும் !
You can follow @ganesananbu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: