வரலாற்றை படித்தால் பல விஷயங்கள் இங்கு திரிக்கபட்டு பொய்யாக சொல்லபட்டிருப்பது தெரிகின்றது

காந்தியின் போராட்டம் தண்டனையாய் முடியும் பொழுது அன்றைய உலக பணக்காரர்களில் ஒருவரான நவாப் ஆஹாகான் பிரிட்டிசாரோடு வாதாடி தன் அரண்மனையிலே காந்தி தண்டனை காலத்தை கழிக்க வழி செய்கின்றார்
அவருக்கு இருந்த ஏராளமான அரண்மனைகளில் ஒன்று காந்திக்கு மகராஷ்ட்ரா பக்கம் ஒதுக்கபடுகின்றது, அதுதான் சிறையாம்

ஆம், அரண்மனையில் ஒரு சிறைவாழ்வு என்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை. இந்த தியாக வாழ்வின் உச்சத்தில்தான் அவர் கடிதமும் புத்தகமும் எழுதி கொண்டே இருக்கின்றார்
நேரு சிறைவாழ்வு இன்னும் தியாகம் நிறைந்தது. அன்னாருக்கு கடுங்காவல் விதிக்கபட்ட நிலையில் மனைவிக்கு உடல் சரியில்லை சுவிட்சர்லாந்து செல்ல வேண்டும் என கோருகின்றார், அனுமதி கொடுத்து சுவிஸ்க்கு அனுப்பி வைக்கின்றது பிரிட்டன் அரசாங்கம்
அந்த சிறைவாழ்வின் கொடுமையில் நேரு எழுதிய புத்தகம் மூன்று..

ஆனால் வ.உ.சி செக்கிழுத்திருக்கின்றார், சுப்பிரமணி சிவா சிறையில் தொழுநோயால் வாடியிருக்கின்றார்

சாவர்க்கர் அந்தமான் கொடுஞ்சிறையில் படாதபாடு பட்டிருக்கின்றார்
கவனியுங்கள், அரண்மனையிலும் சுவிட்சர்லாந்திலும் இருந்தவர்கள் தியாகிகள். ஆனால் அந்தமான் சிறையில் இருந்த சாவர்க்கர் வெள்ளையனிடம் மன்னிப்பு கோரிய அடிவருடி

இந்தியாவில் மட்டுமே இம்மாதிரி வீர வரலாறுகள் சாத்தியம்
You can follow @Sevakofmata.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: