இராஜராஜரின் இயற்பெயர் அருமொழி.

கல்வெட்டுகளில் அருமொழி என்றும், செப்பேடுகளில் அருண்மொழி வர்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.
வர்மன் என்ற பின்னொட்டுடன் அழைக்கப்படும் ஒரே சோழ அரசன் இவரே
( " அருள்மொழி " என்ற பெயர் எங்கும் காணப்படவில்லை)

#ஐப்பசி_சதயம்
#ராஜராஜ_சோழன்
பெரும்பாலானக் கல்வெட்டுகளில் இவர் இராஜராஜன் என்றே அழைக்கப்படுகிறார்.

வெகு அரிதாக ஒரு சில கல்வெட்டுகளில் மட்டும் இவரது இயற்பெயரான அருமொழி என்ற பெயர் கிடைக்கிறது.

அம்மாதிரியான ஒரு சிறப்பான பெயர், திருநறுங்கொண்டை கல்வெட்டில் காணப்படுகிறது.
#ஐப்பசி_சதயம்
#ராஜராஜ_சோழன்
தென்னாற்காடு மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்கொண்டை என்னும் ஊர். திருநறுங்குன்றம் என்றும் அழைக்கப்படுகிறது. ஊரின் குன்றுப்பகுதியில் பார்ச்சுவநாதருக்கு எடுக்கப்பட்ட ஒரு சமணர் கோவில் உள்ளது.

இராஜராஜனது 17 ஆம் ஆட்சி ஆண்டில், இவரது தளபதி மும்முடிச்சோழ பிரம்மராயன்
என்பவர் இக்கோவிலுக்கு இரண்டு நந்தா விளக்கு எரிக்க தானம் தருகிறார்..

இக்கல்வெட்டில் இராஜராஜன் இவ்வாறு குறிக்கப்படுகிறார்..

" பராந்தகன் அருமொழியான மும்முடிச்சோழன் ஸ்ரீராஜராஜதேவன் "

தனது தந்தையின் பெயரான பராந்தகன் ( சுந்தரச்சோழன்) .
தனது பெயரான அருமொழி. சிறப்புப்பெயரான
மும்முடிச்சோழன். விருதுபெயரான இராஜராஜன்.

நான்குப்
பெயர்களையும் குறிப்பிடும் ஒரே கல்வெட்டு இதுவாகும்.
You can follow @Bhairavinachiya.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: