My Covid Days, Corona மாம்ஸ் உடன் வாழ பழகிய நாட்கள் - A Thread 👇
03.10.2020 (Day 1)
Night 10 pm இருக்கும், IPL (DCvsKKR) பாத்துட்டு இருக்கும்போதே, செம தலவலி இருந்துச்சு.. சரி எதோ Office அலைச்சல்னால தான், தூங்குனா சரியாகிடும்னு மேட்ச் முடிஞ்ச உடனே தூங்கீட்டேன்!!
04.10.2020 (Day 2)
காலைல எழுந்ததும் அதே தலவலி, சரி Sunday தானனு சாப்ட்டுட்டு திரும்ப படுத்துட்டேன், வேற எந்த ஒரு Symptomsம் இல்ல. சாயுங்காலம் கொஞ்சம் Tiredஆ இருந்துச்சு!!
05.10.2020 (Day 3)
தலவலி எதும் இல்ல, கொஞ்சம் Tiredness தான், வேற எதுமே Feel ஆகல, சரினு Office புறப்பட்டு போயாச்சு, அங்க போனப்பறம் Tiredness அதிகமாச்சு.. பாதி நாள்ல திரும்ப வீட்டுக்கு வந்துட்டேன்!!
06.10.2020(Day 4)
Again same tiredness, Office வர வண்டிலாம் ஓட்டீட்டு போக முடியாத அளவு Tiredness, சரி Test ஒன்னு எடுத்துடலாம்னு வடபழனி HiTech Centreகு காலைல 7 மணிக்கே போனேன், அவன் வீட்டுக்கு போங்க, நாங்களே வீட்டுக்கு வந்து எடுப்போம்னு சொன்னான், கடசிவர வரல..
07.10.2020(Day 5)

இனி இவனுங்கள நம்ப வேணாம்னு, நானே Kilpaukல இருக்க Premier Health Centreகு காலைல போய் Test எடுத்துக்கிட்டேன்(Rs.3000), Evening 5மணிக்கு Covid Positiveனு Mail அனுப்பீட்டாங்க. Throat Pain அதிகமாச்சு. அதே Tiredness with Body pain
08.10.2020(Day 6)

Chennai Corporationல இருந்து வீட்டுக்கு வந்து மருந்து அடிச்சாங்க, Kilpauk Test Centreகு Call பண்ணி Wifeகும் Test எடுக்கனும்னு சொன்னேன், Evening Doorstepல வந்து எடுத்துட்டு போனாங்க, Night 11 pm Mail came, Wife also Tested Covid Positive!!
08.10.2020(Day 6)

ஞாயித்துக்கிழம பசங்களோட Full Day TestMatch ஆடீட்டு வீட்டுக்கு வந்தா எப்டி இருக்கும், அதே அளவு Body pain அப்டியே இருந்துச்சு, Evening Sense of Smell இல்ல, நானும் Soap/Shampoo/Dettol/Amurtanjanனு எல்லாத்தயும் மோப்ப நாய் மாதிரி மூந்து மூந்து பாத்துட்டு இருந்தேன்
09.10.2020 (Day 7)

Corporationல இருந்து Ambulance வந்துச்சு, Screening Testகு கூட்டீட்டு போனாங்க. X-Ray, BloodTest, BP, Oxygen Level & Temperature எல்லாத்தயும் Check பண்ணீட்டு, 1 Week Pulianthope KP Park Detention Centreல Admit ஆக சொன்னாங்க
09.10.2020 (Day 7)
Symptoms பயங்கர Body Pain, ஊசி குத்துறாப்ள ஒரு Throat pain and Loss of smell. Evening 6Pmகு KP Parkகு வந்ததாச்சு!! நல்ல Room, நல்ல Facilities, நல்ல சாப்பாடு, முக்கியமா அமைதியான ஒரு Atmosphere!!
10.10.2020 (Day 8)

Body pain கம்மியாச்சு, Throat pain அதிகமாகிடுச்சு, Sense of smell இன்னும் சுத்தமா தெரியல, Taste தெரியுது, எதோ Netflix & 2 IPL Match இருக்கவும் ஜம்முனு பொழுத கழிச்சாச்சு!!
11.10.2020 (Day 9)

படுத்தே கிடக்கலாம் போல Feeling. Daily Intakes பத்தி இங்க சொல்லீடுறேன். Morning 7:30கு கபசுர குடிநீர் & Coffee, 8:30கு Breakfast (இட்லி, தோசை, பொங்கல், உப்மா (Any 3 in this daily)), Lunch at 1:30pm - Saravana Bhavan Meals, Evening 3:30pm - சாத்துக்குடி பழம்
11.10.2020(Day 9)

Evening 5:30pm - Tea, கபசுர குடிநீர் & 1 Cup சுண்டல், Daily ஒரு Boiled Egg, Night 8pm - Dinner(Chappathi, Idly, Dosa, Idiyappam, Pongal(Any 3)). இது போக Daily 5 Tablets!! நல்ல உணவு மட்டுமே போதும் Covid-a விரட்டியடிக்கனு டாக்டரும் சொன்னாரு
12.10.2020(Day 10)

Throat Pain கொஞ்சம் கம்மியாகிடிச்சு, Sense of smell இன்னும் இல்ல, பயங்கர Body Pain இருந்துக்கிட்டே இருக்கு, Light-a Tiredness மட்டும் தான். Netflix, IPL & நல்ல தூக்கம் இருக்கவும் பொழுத ஓட்டியாச்சு.
13.10.2020(Day 11)

Throat Pain சரியாகிடுச்சு, காலைல Dettol Smell கும்முனு அடிச்சுது, எதோ RCB Cup அடிச்ச அளவுக்கு ஒரு ஆச்சரியம். Sense of smell is back. ஆனா Body pain & tiredness is the same.
14.10.2020(Day 12)

Returning to Normalcy. எல்லாம் சரியான ஒரு Feel. உடம்பு வலி மட்டும் தான். மத்தபடி எதும் இல்ல, நல்ல சாப்பாடு & அமைதியான ஒரு Atmosphere and ofcourse daily IPL games Helped a lot both physically and Mentally.
16.10.2020(Day 14)

Discharge ஆக சொன்னாங்க, Wifeகு நாளைக்கு(17.10) Discharge, சேர்ந்தே Discharge ஆகிடுறோம்னு சொல்லீட்டு இன்னைக்கு Discharge ஆகுறேன். இத சொல்லியே ஆகனும், The State Govt is doing their Best in tackling this crisis. சாப்பாடு, Bed facility,Tablets, Rooms எல்லாம் Free
ஆனா ஒரே வருத்தம் என்னன்னா இங்க வேலை செய்யுற Room cleaning, Food Providing Members மத்த வேலைகள் செய்யுற பசங்களுக்கு சம்பளம் 3 மாசமா Govt இன்னும் குடுக்கலயாம். குடுத்தா வேலைய விட்டு நின்னுடுறாங்களாம். கடசிய மொத்தமா குடுப்பாங்கனு நினைக்குறேன்
என்னால முடிஞ்ச பண உதவிகள அவங்களுக்கு செஞ்சிருக்கேன், வெளில போன உடனே எதாச்சு Funds திரட்டி இவங்களுக்கு (6 பேர்) Settle பண்ணலாம்னு ஒரு Plan இருக்கு. These Guys are the Real warriors. They deserve a huge applause. *The End*
முக்கியமா Symptoms இருந்தா உடனடியா தயவு செஞ்சு Quarantine ஆகிக்கோங்க, 4 நாள் Rest எடுத்தா சரியாகுற மாதிரியான காய்ச்சல் நோய் தான் இதுனாலும், இத சாதாரணமா எடுத்துக்க வேண்டாம்!! Friend ஒருத்தன் இப்படி தான் Easyயா எடுத்துக்கிட்டான், அவனுக்கு சரி ஆகிடுச்சு, அவங்க அப்பா இப்போ ICUல
Food Intake - Idly, Dosa, Pongal, சாத்துக்குடி, முட்ட, Normal Meals, பட்டானி, சுண்டல், பாசிப்பயிரு, Dates, பாதாம், கபசுர குடிநீர். நிறைய சுடு தண்ணி எடுத்துக்கனும், சாப்பாடு எல்லாம் எப்பவும் சூடாவே சாப்படனும்.

Foods to Avoid - Oil Items and if possible NonVeg Items for 10 days!!
You can follow @sudhanks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: