கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி என கூறும் மக்கள் நீதி மய்யம், கூட்டணிக்காக அறிவாலயத்தின் கதவுகளை தட்டியிருக்கிறது.

அறிவாலயத்தின் வாசலில் நின்று கொண்டு, கமல்ஹாசனை முதல்வர் ஆக்குவோம் என்று செயற்குழுவில் முழங்கினால் எப்படி...?

Thread
அதோடு மட்டுமில்லாமல் திமுக கூட்டணிக்கு வந்தால் மநீம-விற்கு 40 முதல் 50 சீட்டுகள் தர வேண்டும் எனவும் வலியுறுத்தலாம்.

காங்கிரசுக்கே 20 தொகுதிகளை தாண்டி திமுக கொடுக்குமா என்பது சந்தேகம் என்ற நிலையில், மநீமவிற்கு எப்படி 40 தொகுதிகளை தருவார்கள் என மய்யத்தார் எதிர்பார்க்கின்றனர்?
இன்றைய செயற்குழு கூட வெறும் சடங்குக்காக கூட்டப்பட்ட கூட்டமாகவே இருந்திருக்கிறது.

கமலை முதல்வர் நாற்காலியில் அமர்த்துவோம் என பொதுச்செயலாளர்கள் அருணாச்சலம், முருகானந்தம், குமரவேல், துணை தலைவர் மகேந்திரன் போன்றோர் முழங்கியிருக்கிறார்கள் அவ்வளவே.
கூட்டணி பற்றியோ, தமிழக கட்சிகளின் நிலை குறித்தோ எதுவும் விவாதிக்கப்படவில்லை.

ஆனால், அருணாச்சலம் மட்டும் அதிமுகவை சாடி "கூவத்தூர் கூட்டத்தை வீழ்த்துவோம்" என மூன்று, நான்கு முறை பொங்கியிருக்கிறார்.

மற்றவர்கள் "கப்சிப்" என இருந்திருக்கிறார்கள்.
வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு தராமல், கமல் ஆலோசனை குழுவான சங்கையா சொலியூஷன்ஸ் சுரேஷ் அய்யரை தேர்தல் வியூகம் குறித்து பேச சொல்லியிருக்கின்றனர்.

அவரும் வழக்கம்போல் விட்டமின் "ப" பற்றியும், டீ கடை முதல் டெலிவிஷன் வரை விளம்பரங்கள் தருவது பற்றியும் பேசியுள்ளார்.
விளம்பரங்கள் அதிகம் தந்தால்தானே சங்கய்யா சொலியூஷனையும் மக்கள் நீதி மய்யத்தோடு சேர்த்து பிரபலப்படுத்த முடியும் என்பதை அறிந்தே விளம்பரம், விளம்பரம் என்று சொன்னதோடு, ஒரு PPT யையும் போட்டு காட்டி 108 தொகுதிகள் நமக்கு சாதகமாக இருப்பதாக (?) சொல்லியிருக்கிறார்.
தலைமையுரை நிகழ்த்திய கமல்ஹாசன், நான் #BiggBossTamil நிகழ்ச்சி நடத்தினாலும், திரைப்படத்தில் நடித்தாலும் அவற்றை மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரத்திற்காகவே பயன்படுத்தி வருகிறேன் (ரைட்டு) என மய்யப்படுத்தியிருக்கிறார்.
தேர்தலுக்கு பணம் முக்கியம் என்றும், அதனை திரட்டி தந்தால்தான் ஊர்கூடி தேர் இழுக்க முடியும் எனவும் பேசியுள்ள கமல், 90களின் பிற்பகுதியிலேயே நற்பணி மன்ற பணிகளுக்கு ₹30 கோடி வரை திரட்டியதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
யாருடன் கூட்டணி வைக்கலாம் ? தனித்து போட்டியிடலாமா ? என்பது குறித்தெல்லாம் கமலும் எதுவும் பேசவில்லை, தலைமைக்கழக நிர்வாகிகளும் கேட்கவில்லை.

கூட்டணி பற்றிய முடிவை எடுக்க கமலுக்கு அதிகாரத்தை கொடுத்து, லஞ்ச்சோடு கூட்டத்தை முடித்திருக்கின்றனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam
You can follow @SRajaJourno.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: