உங்கள் தகவலுக்காக... (For Your Information) #அறிவியல்

பண்டைய காலத்திலிருந்து
முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையில் ஒரு இழுபறி நடந்து கொண்டே (a tug of war) இருக்கும். முதலில் தோன்றியது கருத்து-முதல்வாதமா (abstract) அல்லது பொருள்-முதல்வாதமா (material)? என்று.
அதாவது பொருட்கள் (அ. ஆற்றல்) முதலில் தோன்றியதா இல்லை கருத்துகள் முதலில் தோன்றியதா? என்ற விவாதம். அதிகாரவர்கம் & மதங்கள் ஆகியன கருத்துமுதல்வாதம் தான் முதலில் தோன்றியது என்று அதன் பக்கம் நிற்கும்.
பாட்டாளி, (பக்தியுடையோர் உட்பட்ட) சாமான்யர்கள் & அறிஞர் பெருமக்கள், பொருள்முதல்வாதம் தான் முதலில் தோன்றியது என அதன் பக்கம் நிற்பர். 2000 ஆண்டுகளாக இந்த சர்ச்சை நீடிக்கிறது.

வெப்பம், பருப்பொருள் (matter), மின்காந்த அலை ஆகியன இயற்பியலுக்கு உட்படுபவை. அவை வெறும் கருத்துகள் அல்ல
‘கொஞ்சம் இரு...! சோசலிசத்துல ஆரம்பிச்சு சட்டுன்னு சயின்சுக்குள்ள நுழையுற?’-ங்குற உங்கள் மனவொலி எனக்கும் கேட்குது. முழுசா படிங்க. புரியலன்னாலும் பரவாயில்ல கடைசி வரைக்கும் படிச்சுட்டே போங்க.
தகவல் என்ற சொல் நாம் வாழ்வில் ஒர் அங்கம். ஆனால் நாம் அதன் ஆழத்தை புரியாமல் நுணிப்புல் மட்டும் தான் மேய்ந்து கொண்டிருக்கிறோம். Information என்ற தகவல் இயற்பியல் விதிகளுக்கு உட்படுமா? தகவல் ஒரு கருத்தா (abstract) அ. பொருளா (physical)?
போல்ட்ஸ்மேன் & க்ளாடியஸ் ஆகியோர் நீராவி எந்திரங்கள் (steam engines) - லிருந்து எவ்வளவு ஆற்றலைப் பெறலாம் என்று ஆராயும் போது, ஒரு குறிப்பிட்ட அளவுதான் வெப்பத்தை ஆற்றலாக மாற்ற இயலும் என்று கண்டனர். அதற்குக் காரணம் என்டரோபி.
அப்படி என்றால் வெப்ப ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே சென்றால் அது உபயோகமற்றது என்று என்ட்ரோபி சொல்கிறது.

அதனால் தான் நீராவி / எரிவாயுகளை (நிலக்கரி, பெட்ரோல், டீசல் ஆகியன) முழுமையாக எரிக்க இயலாது 60% வரை புகையாக மாறி வீணாகிறது.
அதைப்போல 2ம் உலகப்போருக்குப் பின் க்ளாட் ஷன்னான் கம்பிவழியாக எவ்வளவு செய்திகளை அனுப்பலாம் என ஆராயும் போது, ஒரு குறிப்பிட்ட அளவுதான் தகவலை கம்பி (/மற்ற ஊடகங்கள்) வழியே அனுப்ப இயலும் என்று கண்டார். காரணம் என்டரோபி. அதாவது செய்திகளை குறிப்பிட்ட அளவிற்கு மேல் சுருக்கி திணிக்க இயலா.
அதனால் தான் உங்கள் word documentஐ நன்றாக compress (zip) பண்ண இயலும். ஆனால் படங்களை அ. காணொலிகளை word document அளவிற்கு சுருக்க இயலாது. அப்படி மீறி செய்தால் படங்களின் (data) துல்லியம் காணாமற் போய்விடும். அதற்கு lossy compression - இழப்பு மிகு குறுக்கம் - என பெயர்.
ஆக தகவலுக்கும் இயற்பியலுக்கும் ஒரே காரணி - என்ட்ரோபி. இப்போதைய machine learning-ல் என்ட்ரோபி அதிகம் பயன்படுகிறது. தகவலில் அதிக என்ட்ரோபி இருந்தால் அதனை மிஷின் லேர்னிங்கிற்கு அதிக பயனுண்டு. Cryptography - யிலும் என்ட்ரோபின் பயன் அதிகம். என்ட்ரோபி குறைவானால் தகவல் encryption வீண்.
இப்படி ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் ஓடிக் கொண்டிருக்கையில் 1991ல் ரோல்ஃப் லாண்டோவா (Rolf Landauer) ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிடுகிறார். தகவல் இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டது. அவற்றிற்கு சில பண்புகள் உண்டு - என.
எப்படி, ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ இயலாதோ. மேலும் ஒரு ஆற்ற்லை வேறொரு ஆற்றலாக மாற்றலாமோ (சூரிய ஆற்றல் —> மின்னாற்றல்). அதுபோல தகவலையும் ஆக்கவோ அழிக்கவோ இயலாது. அதனை சேமிக்க இடம் & ஆற்றல் ஆகியன தேவை - என்ற பண்புகள் முக்கியமானது என்று ஷன்னான் முதற்கொண்டு லாண்டோவா வரைக் கூறினர்.
அது எப்படி? ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் அவருக்கு முன்பாக இல்லையே? அவர்தானே அதனை “ஆக்கியது”?. நாமும் உலகில் உள்ள எல்லா ஹேம்லெட் புத்தகங்களையும் எரித்து, அதன் மின் பதிப்புகளையும் “அழித்து”விட்டால்... அந்த ஹேம்லெட் அழிந்துவிடுமே?
இல்லை. பற்பல நிகழ்வுகள் ஷேக்ஸ்பியரின் மூளையில் (மூளை ஒரு பொருள். அந்த நியூரானில் நடந்த ஆற்றல் மாற்றங்களில்) கற்பனையாக வெளிப்பட்டு ஹேம்லெட் என்ற தகவலாக மாற்றமாக (உங்கள் மொழியில் அது நாடகம்) அடைந்தது.
அதேபோல் அதனை சாம்பலாக்கியோ அல்லது கணிணியின் bitsஐ மாற்றயோ “அழிக்கலாம்”. ஆனால் அதன் வடிவம் தான் மாறியுள்ளதே தவிர அவை இல்லாமல் இல்லை. அதாவது அழித்தப் பின் நம்மால் அதனை படிக்க இயலாது. ஆனால் அறிவியல் ரீதியாக அவற்றின் சாம்பலை எடுத்து வெளியான புகையை & மற்ற இழப்புகளை,
மீட்டு ஒட்டி மீண்டும் ஹேம்லெட்டை கட்டமைக்கலாம். ஆனால் அதற்கான தொழில்நுட்பம் இப்போது நம்மிடம் இல்லை. ஆக மொத்தம் தகவல் அழியவில்லை. சிதைந்து உருமாறிவிட்டது. நம்புவதற்கு கடினமாக உள்ளதா?
இந்த வருடம் ரோஜர் பென்ரோஸ் எதற்கு நோபல் பரிசு வாங்கினார் தெரியுமா? கருந்துளையை பற்றி கண்டறிந்ததற்கு. என்னுடைய ஒரு இழையில் அப்படித்தான் எழுதினேன். அது பாதி உண்மை.

அவர் ஆராய்ச்சியில் விளக்கியது கருந்துளையில் தகவல் எவ்வாறு செல்லும் என்பது தான். அதனை சற்று எளிமையாக எழுதினேன்.
அந்தக் கட்டுரையில் “ஏன் ஸ்டீஃபன் ஹாக்கிங்கை பற்றி எழுதவில்லை?” என பலர் கேட்டனர். காரணம் ஹாக்கிங்கும் கருந்துளை தகவல் & கருந்துளை தகவல் முரண்பாடுகளை பற்றிதான் அதிகம் பேசினார். (ஹாக்கிங் - சஸ்கைண்ட் இடையே நடைபெற்ற கருந்துளை தகவல் பற்றிய விவாதம் புகழ்பெற்றது. வென்றது சஸ்கைண்ட் தான்)
நான் “தகவல் பண்புகளை” பற்றி விவரிக்காது ஹாக்கிங்கை பற்றி பேச முடியாது.

மேலும், சார்பியல் கொள்கைகளே ஒளிவேகத்தில் அங்கிருந்து எப்படி தகவல் பரிமாற்றங்கள் நடைபெறும் என்பதை தான் பற்றி பேசுகிறது.
அது மட்டுமல்ல தகவல், க்வாண்டம் உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைய (classical) தொலைத்தொடர்பில் எப்படி இடையூறில்லாது (noiseless transmission ) ஒரு தகவலை அனுப்ப இயலுகிறதோ அதுபோல க்வாண்டம் கணிணியிலும் noiseless transmission பண்ண இயலும்.
ஆனால் க்வாண்டம் கணிணியில் இடையூறு நிறைந்த பாதையில் சமிக்ஞைகள் அனுப்ப இயலாது. இது ஒரு பெரிய ஆராய்ச்சித் துறையாக உருவெடுத்துள்ளது.

ஈர்ப்பு விசை... இது ஐன்ஸ்டீனிலிருந்து ஹாக்கிங் வரையிலான அறிவியலாளர்களை தண்ணிகாட்டிக் கொண்டிருக்கிறது.
ஈர்ப்பு விசை தான் சார்பியல் விதியை க்வாண்டம் விதியுடன் இணைப்பதில் பெரும் தடையாக உள்ளது. இதற்காக க்வாண்டம் ஈர்ப்பு (Quantum Gravity) யை உருவாக்கி String Theory, Loop Quantum Theory ஆகியவற்றைக் கொண்டு ஒட்ட வைக்கப்பார்த்தனர்...
ம்ஹூம்... ஈர்ப்பு விசை எதற்கும் மசியவில்லை. ஆனால் க்வாண்டம் தகவல் அந்த சார்பியல் விதியையும் க்வாண்டம் விதியையும் இணைக்கும் - Relativistic Quantum Information - ஆற்றல் பெற்றுள்ளது என்று பலர் நம்புகிறார்கள். எனக்கும் அந்த நம்பக்கை உண்டு.
கணிணி (CS) அ. மின்னியல் & தொலைத்தொடர்பு (EEE) ஆகியவற்றில் தகவல் விதி (Information Theory) என்ற பாடம் படித்திருப்பீர்கள். ஆனால் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தீர்கள் என எனக்குத் தெரியாது. இன்னொரு முறை தகவல் என கூறும் போதோ கேட்கும் போதோ அதன் ஆழத்தையும் சேர்த்து உணருங்கள்.
ஏனெனில் இனிமேல் ஏற்படப் போகும் பெருமாலான அறிவியற் புரட்சிகள் தகவல் விதியைச் சார்ந்தே இருக்கும்.

ஆக... தகவலும் இயற்பியல் விதிக்கு உட்பட்டதே... தகவல் வெறும் கருத்தாக்கம் அல்ல. (என்னுடைய இந்த விளக்கங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. முழுமையானது அல்ல) கீழே தொடர்கிறது 👇
இந்தியாவில் கபிலர் உட்பட க்ரேக்க நாட்டு சாக்ரடீஸும் அரிஸ்டாட்டிலும் பொருள்முதல்வாதம் (பொதுவுடைமை) பேசினர். இவர்களுக்கு நடுவில் தோன்றிய செல்வச் சீமானாகிய ப்ளாட்டோ கருத்துமுதல்வாதம் (முதலாளித்துவம்) பேசினார்.
இப்படி படிவம் கண்டு வடிவம் மாறி கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் வரை பொருள்முதல்வாதம் பேசினாலும் அவ்வப்போது வெற்றி பெறுவது என்னவோ கருத்துமுதல்வாதம் (முதலாளித்துவம் / மதங்கள்) தான்.
அறிவியல் பல தருணத்தில் பொருள்முதல்வாதம் தான் முதலில் உருவானது என்று பல இடங்களில் கூறினாலும், அவை ஆணித்தரமாக இல்லை.
கருத்துமுதல்வாதம் தான் முதலில் தோன்றியது என்று முதலாளித்துவமும் & மதங்களும் மக்களின் மண்டையைக் கழுவினாலும், கருத்தும் ஒரு தகவல் தான்... பொருள்தான் - information is physical; not abstract - என்று கூறி இரண்டாயிர கால சர்ச்சைக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்து
முதலாளித்துவம் & மதங்களின் முகங்களில் கரியை பூசிவிட்டது தகவல் அறிவியல்.

“தகவலு”க்கு நன்றி 🙏
You can follow @HilaalAlam.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: