சிலபல வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருப்பு பண ஒழிப்பில் நமது ஏழைநடிகரின் 80% சொத்துக்கள் வகையாக சிக்கிக் கொண்டதாம். ஆரம்பத்தில் இதை வைத்து தேர்தலில் குரல் கொடுக்க சொல்லலாம் என்றே நினைத்திருந்தார்களாம். ஆனால் சம்பந்தப்பட்ட ஃபைல் குஜராத்திய சாணக்கியரிடம் சென்றதும்
அதைப் பார்த்தவர் இதை வைத்து வீடே கட்டலாமே என முடிவு செய்து ஏழை நடிகரை உடனே தொடர்பு கொண்டாராம். விபரத்தை கேட்ட ஏழை நடிகர் ஏகத்துக்கும் அதிர்ந்து போய் விட்டாராம். அப்போது அரசியலில் இறங்கி கட்சி ஆரம்பித்து 2021 தேர்தலில் போட்டியிட்டால் சொத்துக்களுக்கு கேரண்டி என்று சொல்லப்பட்டதாம்.
இதனை ஆரம்பத்தில் ஏற்க மறுத்துவிட்ட ஏழை நடிகர் பின்னர் பிடியின் தீவிரத்தை உணர்ந்து சம்மதித்தாராம். ஆனாலும் அவருக்கு முழுமனதாக அரசியலில் ஈடுபட சம்மதம் இல்லையாம். அதனாலேயே அரசியலில் இறங்குவது உறுதி ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி வந்தாராம்.
அப்போது அவரைச் சந்தித்த நீண்டநாள் நண்பர் ஒருவர், இப்போதும் உங்கள் மார்க்கெட் உச்சத்தில் தானே இருக்கிறது.. மீண்டும் நடித்து எல்லா சொத்தையும் சம்பாரித்து விடலாமே என தூபம் போட்டிருக்கிறார். பலவிதமாக யோசித்த ஏழை நடிகரும் அதே முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதனால் தான் அரசியல் என்று அறிவித்த பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்தவண்ணம் இருக்கிறாராம். இன்னிலையில் தம்மை வாழவைத்த தமிழர்களுக்கு எதிராகவே தம்மை அரசியல் செய்ய சொல்கிறார்களே என்ற கவலை வேறு அவரை வாட்டி வந்ததாம்.
இதனை எப்படி சரி செய்து மீள்வது என சிந்தித்தவர், ஒரு நாள் தமது அருணாச்சலம் படத்தை பார்த்த போதுதான் அந்த ஐடியா வந்ததாம்
அதன்படி அருணாச்சலம் படத்தில் வந்த ஜனகாராஜ் தேர்தல் காமெடியை நிஜமாகவே அரங்கேற்றி விடலாம் என்ற முடிவு செய்திருக்கிறார். அதாவது, தன்னையே ஒரு காமெடி பீசாக மாற்றி
தனது அரசியலால் மக்களுக்கு எந்த கேடும் விளைந்து விடாதவாறு தமிழர் நலனை காத்து வரும் சக்தியாக மாறி இருக்கிறார். இதன் விளைவாக அவர் படங்களும் ஓடாமல் தடுமாறி வருவதே அவரை மிகவும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறதாம். எனவே ஏழையின் படங்களை நன்றாக ஓட வைக்க வேண்டியது அனைத்து தமிழர்களின் கடமையாகும்
You can follow @boopu43.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: