Thread:
System சரியில்லை என்பதற்கு இன்றைய சம்பவங்களே உதாரணம்.சட்டப்படி 30 நாளுக்கு மேலாக காலியாக இருக்கும் மண்டபத்துக்கு வரி நிவாரணம் கேட்க சம்மந்தபட்டவருக்கு உரிமை உண்டு. அதனால் @rajinikanth சட்டப்படி வரி நிவாரணம் கேட்டு மாநகராட்சிக்கு Sep 23ல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார்
1/14
ஆனால் 22 நாட்களாகியும் மாநகராட்சியிடமிருந்து பதிலில்லை. இதற்கு மேல் தீர்வு வேண்டுமென்றால் ஒன்று குறுக்கு வழியில் செய்யனும். இல்லை கோர்ட்டை அணுகனும். @rajinikanth கோர்ட்டை அணுகினார். ஆனால் கோர்ட், ஏன் எங்க நேரத்தை வீண்டிக்கிறீர்கள், அவங்ககிட்டையே போய் கேளுங்கனு சொல்லுது...
2/14
அதாவது, ஏற்கனவே நோட்டிஸ் விட்டும் பதில் வராதவங்ககிட்ட திரும்பவும் நினைவூட்டனுமாம். என்னடா System இது? இது @rajinikanth க்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள எல்லா வணிக கட்டிடங்களுக்குமான பிரச்சனை.வாராத வருமானத்துக்கு வரி கட்டனும். இதான் Systemஆ ? இதில் அரசு என்ன செஞ்சுருக்கனும்?
3/14
அரசு அதாகவே வருமானமில்லாத கட்டிடங்களுக்கு வரி தள்ளுபடி செய்திருக்கனும்.
இல்லை, நோட்டிஸ் கிடைத்தபின் முறையாக பதில் போட்ருக்கனும். ரெண்டும் இல்லாமல் கிடப்பில் போட்டா என்ன அர்த்தம்? ஒரு சாதாரண குடிமகனுக்கு, எங்க நியாயம் கிடைக்கும்? கோர்ட். அதான் @rajinikanth கோர்டுக்கு போனார்
4/14
ஆனா தங்கள் நேரத்தை வீணடிக்காதேனு சொல்ற கோர்ட், ஒரு இந்திய குடிமகனின் 22 நாட்கள் அரசால் வீணடிக்கப்பட்டிருப்பதற்கு ஒன்றும் சொல்லலை. இதைத்தானே @Suriya_offl சொன்னார்.கோர்டுக்கு ஒரு நியாயம் மக்களுக்கு ஒரு நியாயமானு? பதில் வராத இடத்துக்கே திரும்பவும் போன்னு சொல்றதுதான் Systemஆ?
5/14
@rajinikanth நினைத்திருந்தால் இதற்கு பல வழிகளில் தீர்வு கண்டிருக்கமுடியும். ஆனா செய்யலை.எல்லாமே சட்டப்படி போகவேண்டும் என நினைக்கிறார்.அதான் நோட்டிஸ், கோர்ட் என்று முறைப்படி சென்றார். அப்படி போனவருக்குத்தான் இந்த கதி. ரஜினிக்கே இப்படினா, சாதாரண மனிதனுக்கு? இந்த System மாறனும்
6/14
சட்டப்படி ஒரு வரிவிலக்கு பெற 22 நாளாகியும் கோர்ட் மறுபடி முதல்ல இருந்து என்று சொல்கிறது. ஒரு தீர்வுக்கு அரசாங்கத்தை அணுகும் சாதாரண மனிதனின் நிலைமையும், அரசு அதிகாரிகளின் மெத்தனமும், கோர்ட்டின் எச்சரிக்கையும் அதிர்சியடையவைக்கிறது.எந்த விசயத்துக்கும் இங்கு உடனடி தீர்வு இல்லை.
7/14
பொதுமக்களின் நேரத்தை granted ஆக எடுத்துக்கொண்டு, அரசு இயந்திரத்தின் அலட்சியத்தையும் , கோர்ட்டின் நேரத்தையும் மட்டுமே பார்க்கும் இந்த இத்துப்போன System நமக்கு தேவையா?இந்த System மாறனும்.பொதுமக்களின் நேரத்தை,பணத்தை மதிக்கும் System வரனும்.அது @rajinikanth மட்டுமே செய்யமுடியும்
8/14
இன்றைய நிகழ்வுகளுக்கு ஜால்ரா போடுபவனை பாருங்க.ஒருத்தன் கூட ஏன் 22 நாளாக அரசு பதில் அனுப்பலைனு கேட்கலை. மாறா பாதிக்கப்பட்டவனை இகழ்கிறார்கள்.ஒருவனுக்கு நியாயம் கிடைக்க தாமதமாவதை கொண்டாடும் அளவில்தான் இன்றைய Systemஐ 2 திராவிட கட்சிகளும் வைத்திருக்கின்றன. எதற்கெடுத்தாலும் தாமதம்
9/14
@rajinikanth க்கு நடப்பதுதான் ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்று நடக்கிறது. இந்த Systemல் மனித நேரம் என்பது மதிக்கப்படுவதேயில்லை.அரசு சம்பந்தப்பட்ட வேலை என்றாலே தாமதம், தாமதம்தான். ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண மாதக் கணக்கில், வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டும்.இந்த System மாறனும்
10/14
முதலில் சில யோக்கியன்களின் பதிவை பாருங்கள். இத்தனை சம்பாதிக்கிறார் 6.5 லட்சம் கட்ட முடியாதானு கேட்கறானுக.. எதுக்குடா கட்டனும் ? கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்துபவர் @rajinikanth . 6.5 லட்சம் ஒன்றுமில்லைதான். ஆனால் சட்டப்படி என்றால் எத்தனை கோடி வேண்டுமென்றாலும் கட்டுவார்
11/14
அப்படி சட்டப்படி இல்லையென்றால் அதற்கு தீர்வு காணுவார். உழைத்து சம்பாதித்தவனுக்கு, தெருவில் இருந்து கோடிஸ்வரன் ஆனவனுக்குத்தான்டா ஒவ்வொரு ரூபாயின் அருமையும் தெரியும். தெரிஞ்சதுனாலதான் அவர் இன்னும் இந்த நிலையில் இருக்கிறார். மக்கள் பணத்தை திருடுபவனுக்கு கோடி கூட ஜுஜுபிதான்.
12/14
ஆனானப்பட்ட அமிதாப்பே Money Management சரியாக செய்யாததால் ஒரு கட்டத்தில் தெருவுக்கு வந்தார். @rajinikanth பணத்தை மதிப்பவர். பணத்தை மதிப்பவனுக்குத்தான் பொதுமக்கள் பணத்தின் அருமை தெரியும்.திருடனுக்கு தெரியாது.இன்று அவர் சேர்க்கும் ஒவ்வொரு காசும் நாளை மக்களுக்கு போகக்கூடியது.
13/14
நேர்மையாக வரி செலுத்திவரும் ஒருவன் எவ்வாறு இன்றைய Systemஆல் அழைக்கழிக்கப்படுகிறான் என்பதை இன்று காட்டியிருக்கிறார் @rajinikanth . இந்த சிஸ்டத்தை மாற்றி, எந்த ஒரு பிரச்சனைக்கும் உடனடியாக தீர்வு கிடைக்குமாறு செய்வதுதான் அவரின் ஒரே நோக்கம். அதற்கு துணை நிற்போம்.
14/14
ரஜினியால் மட்டுமே மாற்றம் கொண்டுவரமுடியும். #இப்ப_இல்லைனா_எப்பவுமில்லை.
@rajinikanth
15/15
You can follow @rajini_mano.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: