ஒரு நல்ல மொபைல் வாங்கணும் ங்கிறது பொண்ணு பாத்து கல்யாணம் பண்றமாதிரி அவ்ளோ சாதாரணம் கெடையாது 😐. அதுக்கு என்னன்னா factors consider பண்ணனும்னு பாப்போம்.

இந்த அமேசான் sale day அல்லது பிளிப்கார்ட் Big Billion dayல மொபைல் வாங்குற ஐடியால இருக்குறவங்க கண்டிப்பா படிங்க. 
#Thread
ஒரு மொபைல் வாங்கணும்னா கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளணும்.
1. Brand
2. RAM & Memory
3. Processor
4. Battery Capacity
5. Display
6. Camera

முதல்ல Brand.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கம்பெனி மொபைல்கள் மேல ஈர்ப்பு இருக்கும். தப்பில்ல. ஆப்பிள் யூஸ்ஸர்ஸ் அவ்ளோ சீக்கிரம் ஆன்ட்ராய்டு பக்கம் வரமாட்டாங்க. அது போல ஆன்ட்ராய்டுலயே samsungல ஆரம்பிச்சு vivo வரை பல brandகள் மார்க்கெட்ல கெடைக்கிது. மொதல்ல இவங்க origin of countries பாத்துருவோம்.
இந்திய மொபைல் மார்க்கெட்ல 75% சீன கம்பெனிகளின் ஆதிக்கம் தான். அதுல ஒரு சூட்சுமம் என்னன்னா Vivo, Oppo, Realme, Oneplusன்னு பெயரளவில் பிரிஞ்சுக்கிடந்தாலும் எல்லாம் ஒரே கம்பெனி கீழ தான் வருது (BBK). அதாவது மாவு ஒன்னு தான். Product தான் தோசை இட்லி ஊத்தப்பம்ன்னு வேற வேற.
அதே போல Redmi, Poco ரெண்டும் ஒரே கம்பெனி. Asus தைவான். Lenovo ஹாங்காங், samsung கொரியா, Honor Huawei சீனா. இது போக சில iqoo 3 போன்ற Sub-brandகளும் இருக்கு. சுருக்கமா சொல்லனும்னா நாம் தமிழர் மய்யம் ரஜினி மக்கள் மன்றம் ன்னு நீங்க பாத்துப்பாத்து போடப்போற ஓட்டு பிஜேபிக்கு போற மாதிரி
உங்க பட்ஜெட் கூட brand பக்கம் போகவைக்கும். 40k பட்ஜெட் இருந்தா தாராளமா Oneplus போகலாம். 15-20k னா vivo oppoவ செட்டில் ஆகிடலாம். எல்லாம் ஒரே கம்பெனி தான். அடுத்தது RAM & Memory. இதுல பெரிய option கெடையாது. External memory வழக்கொழிந்து போயிட்ட காலத்துல 256GB வரை memory கிடைக்கிது.
மொபைல்ல படம் பாக்குறவங்க, மீம் கிரியேட்டர்ஸ், கேம் ளாடுறவங்க 6GB RAM போயிடறது நல்லது. கீழ்கண்ட RAM+Memory combinations தவிர நமக்கு பெரிய choice இல்ல.
3GB+32GB
4GB+64GB
6GB+128GB
6GB+256GB
8GB+256GB
அடுத்து Processorஇது கிட்டத்தட்ட கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குற மாதிரி. மிஸ் ஆச்சு, மொபைல் இருக்கிறவரை ரணவேதனை தான். இதை மட்டும் சரியா choose பண்ணிட்டா பக்கா மொபைல் உங்க கைல. Processorகள்ல மூணேமூணு தான் இந்திய மார்க்கெட்ல இருக்கு.
1. Snapdragon
2. Helio
3. Exynos
இந்தியால விக்கிற மொபைல்கள்ல 98% Snapdragon (SD) தான் இருக்கு. கிட்டத்தட்ட monopoly. மொபைல் விலைல 35% வரை இதுவே எடுத்துக்கும். performance அப்புடி. மொபைல் வாங்கும்போது SD இருக்கான்னு பாத்து வாங்குறது கிட்னிக்கு நல்லது. அதுவும் 7&8 சீரிஸ் SD உள்ள மொபைல் வாங்கிட்டா இன்னும் சிறப்பு.
onlineனில் saleல 90% மொபைல்கள் SD தான் வருது. Oneplus மொபைல்கள் ஏன் இவ்ளோ costly இருக்குன்னா அந்தந்த வருடங்கள்ல வெளிவர்ற SDய புடிச்சுப்போட்டு ரிலீஸ் பண்றனால தான். 99% பிரீமியம் மாடல் மொபைல்கள் SDஇல்லாம வர்றதே இல்ல. SD ஏன் trustable Processorனு technicalல வேற ஒரு பதிவுல பாப்போம்
Onlineன்னு இல்லாம கடைகள்ல மொபைல் வாங்க போனீங்கன்னா SD Processor உள்ள மொபைல்களை விரல்விட்டு எண்ணிடலாம். SD நிகரான Processorன்னா MediaTek கம்பெனியோட Helio Processor. Performance லெவல்ல SDக்கு சளச்சதில்ல ன்னாலும் ஏனோ மக்களால்/Brandகளால் விரும்பப்படுறது இல்ல.
ஆனாலும் Vivo Oppo போன்ற Brandகள் பத்துல ஒரு மொபைல் Helio Processorரோட வெளியிடுறாங்க. காரணம் SDய விட Helio விலை குறைவு. அந்த விலை வித்தியாசம் மொபைல் விலையிலும் எதிரொளிக்கும்ல. அதுனாலேயே கடைகள்ல கிடைக்கிற மொபைல்கள் onlineல கிடைக்கிறது இல்ல. விலையும் குறைவா இருக்கும்.
அம்மாம்பெரிய கம்பெனி நானு தம்மாத்துண்டு Processor செய்யமாட்டேனானு வேட்டிய மடிச்சுக்கட்டி உருவாக்கின Processor தான் Exynos. இன்னும் பெருசா self எடுக்காத Processsor. சொந்தமா ஹோட்டல் வச்சுருக்குறவன் பக்கத்துக்கு ஹோட்டல்ல போய் பிரியாணி சாப்பிட்டு வர்ற மாதிரி அவனே SD தான் யூஸ் பண்றான்
Battery Capacityய முழுக்கமுழுக்க screen sizeசை பொறுத்துதான் இருக்கு. Screen size 6"களுக்கு நெருக்கி இருந்தால் battery குறைந்தது 4500mAH இருக்கும் பட்சத்தில் ஒருநாள் சார்ஜ் தேவை பூர்த்தியாகும்.
Battery capacity ஏறஏற மொபைல் வெயிட் கூடும். இப்போதெல்லாம் mid range மொபைல்களிலேயே 5000-6000mAH அசால்டாக வருகிறது. உட்சபட்சமா Samsung M51ல 7000mAH.
Displayகளை பொறுத்தவரை mid range மொபைல்கள்ல bestu Samsung தான். அவன் தர்றமாதிரி Amoled display+கிளாரிட்டி எந்த மொபைல்களிலும் இல்லைனு அடிச்சு சொல்லலாம். Vivo Oppoகள்ல மத்த Specகாக Displayல compromise ஆகித்தான் ஆகணும். வேற வழியில்ல.
கடைசியா Camera. Nokia மட்டுமே சில மாடல்கள்ல Zeiss லென்ஸ் பயன்படுத்துது. அதுவும் வாழ்ந்துகேட்ட ஜெமீன் மாதிரி கேவலமாக தான்ருக்கு. 2 front 4 rear கேமரான்னு வர ஆரம்பித்திருக்கும் நிலையில் விருப்பம்போல தேர்வு செய்யலாம். இதிலும் arranged marriage போல் options அவ்வளவாக வாய்ப்பதில்லை.
எனக்கு தெரிஞ்ச வரையான points இங்க லிஸ்ட் பண்ணிருக்கேன். இதை தாண்டி உங்களுக்கு ஏதாவது தெரிஞ்ச கமெண்ட் பண்ணுங்க. உங்க அனுமதியோடு இந்த threadலயே பின்னால add பண்ணி ரயில் ஓட்டலாம். 
நன்றி 🙏
You can follow @nkchandar.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: