உடைச்சு பேசிருவோம்
இவங்களாம் தலைவர் கிட்ட பேசியிருப்பாங்க,அவர் கட்சி ஆரம்பிக்கலனு தெரிஞ்சு BJP ல சேர்ந்திருக்காங்கனு சொல்றவங்க கொஞ்சம் யோசிங்க,
தலைவர் இவங்ககிட்ட காத்திருங்கனு கமிட் பண்ணிட்டா கட்சி ஆரம்பிக்கும் போது பதவி கொடுக்க வேண்டிருக்கும் So அவர் டிப்ளாமட்டிக்கா பேசிருப்பார்
அதேநேரம் பாஜகவை பொருத்தவரை ரஜினி வந்தால் அவர்களுடன் நிற்க வேண்டும் இல்லையேனில் வரக்கூடாது ஏனேனில் இவர்களுடன் நிற்காவிட்டால் இவர்கள் கடந்த 5 வருடங்களாய் சேர்த்து வைத்திருக்கும் திமுக எதிர்ப்பு + இந்துத்துவா ஓட்டுகளை ரஜினி ஸ்வீப் செய்து விடுவார் என்று பயம் உண்டு.
மேலும் தலைவர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசியதுனு சொன்னது அவங்களுக்கு பயத்தை உண்டு பண்ணிருக்கும் அதனால் அவர் வராமல் இருப்பது சேஃப் என்றே நினைப்பார்கள்,
குஷ்பு போல அரசியல் மாற்றத்தை தேடுபவர்கள் உடனடியான ரெமடி தேவை என்றே நினைப்பார்கள்.
மேலும் நிருபிக்கப்பட்ட கட்டமைப்பு தேவையென எண்ணுவார்கள், ரஜினி ஒருவேளை கட்சி ஆரம்பித்து வலிமையான கூட்டணி வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் இணைந்திருப்பார்கள், தலைவரை பொருத்தவரை வேட்டைக்கு பிரதானமான தேவை பொறுமை என்று உணர்ந்திருப்பார், மேலும் கொரானாவால் தனது திட்டங்களை மாற்றியிருப்பார்
கைகளை மூடி இருக்கும் வரை மட்டுமே உள்ளிருக்கும் பொருள் பற்றிய ஆர்வம் இருக்கும் என்று தெரிந்தே வைத்திருப்பார், முக்கியமா கட்சி வேண்டாம்னு நினைச்சிருந்தா அதை கண்டிப்பா தெரியப்படுத்தியிருப்பார், தேவையில்லாமல் தனது ரசிகர்கள் மனதில் ஆசை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க மாட்டார்.
அதனால் தலைவர் ரசிகர்களே!! நாம நின்னுட்டு இருக்கிறது ஒரு மாயமான குகை இங்க நம்ம கண் முன்னாடி ஏகப்பட்ட கண்கவர் பொருள்கள் இருக்கு ஆனா எதை தொட்டாலும் நாம போக வேண்டிய பாதை மாறிடும், தலைவர் சொல்ற செவிட்டு தவளை மாறி ரஜினிகாந்த் என்கிற வாசலை நோக்கி போயிட்டே இருப்போம்.
தலைவர் திரும்ப அரசியல்ல வரும்போது இவ்வளவு நாளா மாணிக்கத்தை பாத்தவங்க பாட்ஷா வையும், சிட்டியை பாத்தவங்க 2.0 வையும், சரவணனை பார்த்தவங்க வேட்டையராஜா வையும் பாப்பாங்க.
So Be Positive and spread Positivity.
You can follow @hunmid12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: