நமது தலைவர் ரஜினி அவர்களிடம் இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் ஒரு பேட்டியில் பிடித்த தலைவர் யார் என கேட்டார். அதற்கு தலைவர் சிறிதும் தயக்கமும் இன்றி லீ குவான் யூ என்றார். இந்த பேட்டியை பார்ப்பதுற்கு முன் அந்த பெயரை நான் கேள்வி பட்டதுகூட இல்லை. ஆனாலும் தலைவருக்கு பிடித்திருந்தால்
நிச்சயமாக அவர் ஒரு பெரிய மனிதராக இருப்பார் என எண்ணினேன். அதே போல் அவர் மிக சிறந்த மனிதர். அவர் வாழ்க்கையை வலைத்தளத்தில் பார்த்தேன். அதை அனைவரும் அறியவே இந்த சிறு தொகுப்பு.
லீ குவான் யூ அவர்கள் 1923 செப் 16 ல் பிறந்தார். படிப்பில் சிறந்து விளங்கினார் .
லீ குவான் யூ இங்கிலாந்து ல் சட்டம் பயின்று ஹொனோர் பட்டம் பெற்றார். 1950 பாரிஸ்டராக ஆனார். பின் வழக்கறிஞராக பணியாற்றினார். 1954ல் மக்கள் செயல் கட்சியை தொடங்கினார். 1959ல் சிங்கப்பூரின் பிரதமரானார். இந்த சமயத்தில் சிங்கப்பூரின் நிலை மிக மோசமாக இருந்தது. 2ம் உலகப்போரில் கடுமையாக
சிங்கப்பூர் ஜப்பானால் தாக்க பட்டு பாதிப்பு அடைந்தது. பின் மலேயா கூட்டமைப்புடன் இணைந்தது . அங்கு இருந்த கட்சி வேறுபாட்டால் தனியே பிரிந்து 1965ல் தன்னை தனி நாடக அறிவித்தது.
இந்த நிலையில் சிங்கப்பூர் பெரிய பாதிப்பில் இருந்தது. வறுமை, வேலைஇன்மை, கொள்ளை என மிக கீழ் நிலையில் இருந்தது
பிரதமரான லீ சிங்கப்பூரில் தொழிலை முன்னேற்றம் ஏற்பட விரும்பினார் . இதற்கான ஒரு சிஸ்டத்தை ஏற்படுத்தினார். அதன் படி தொழில் தொடங்க தேவை படும் அணைத்து அனுமதியும் ஒரே இடத்தில் கிடைக்க சிங்கள விண்டோ சிஸ்டம் என்பதை கொண்டு வந்தார். இது இப்போதுதான் நம் நாட்டில் செயல் படுகிறது.
அனால் 60 ஆண்டுகளுக்கு முன்பே அதனை லீ அவர்கள் ஏற்படுத்தி இருந்தார். நம் தலைவர் சொல்லும் சிஸ்டம் சரி செய்யப்பட வேண்டும் என்பது இது போன்ற சிஸ்டம்தான். தொழில் தொடங்க தேவையான நிலம் நீர் மின்சாரம் போன்ற அனுமதிகள் ஒரே இடத்தில் கிடைக்க அவர் ஏற்படுத்தி இருந்தார்.
இதனால் பல வெளிநாட்டு கம்பெனி தொழில் தொடங்க வந்தது. இதற்கு பின் லீ அனைவருக்கும் வீடு என்பதற்காக குடியிருப்புகளை அதிகரிக்க எண்ணினார். நிலப்பரப்பில் சிறிய நாடக இருந்த சிங்கப்பூரில் அதிக குடியிருப்பு ஏற்படுத்த பல அடுக்கு மாடிகட்டிடங்களை காட்டினார். அனைவரும் வீடு பெற ஏற்பாடு செய்தார்
இது மட்டும் இல்லாமல் சிறு சிறு தீவுகளாக இருந்த சிங்கபூரின் நிலத்தை அதிகரிக்க கடலில் இருந்து நிலத்தை மீட்டும் திட்டம் தீட்டினார். இதனால் 581ச.கி மீ இருந்த சிங்கப்பூர் 700 ச கி மீ ஆகா மாறியது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினார்.
இதே நேரத்தில் பல கடுமையான சட்டங்களும் இயற்றினார்.
18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் கண்டிப்பாக ராணுவத்தில் 2 ஆண்டுகள் இருக்க வேண்டும் என சட்டம் எடுத்து வந்தார். அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் இரண்டு குழந்தைகள் மேல் பெற்றால் சலுகைகள் குறைக்க படும் என்றார்.பிரதமரான சில மாதங்களிலே மக்களுக்கு தனி அடையாள எண்ணை கொடுத்தார்
அவர்களின் சொத்து மதிப்பை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். நீரை குழாய் மூலம் அண்டை நாட்டிலிருந்து எடுத்து வந்தார். அனால் அவர்கள் அதன் விலையை ஏற்ற அதனை உடனே நிறுத்தினார். கடல் நீரை நல்ல நீர் ஆக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
சிங்கப்பூரை நவீன சிங்கப்பூராக மாற்றினார். சிறு புள்ளியாக இருந்த நாட்டை மிக முக்கிய புள்ளியாக மாற்றினார். இன்று சிங்கப்பூர் வர்த்தகத்திலும் மிக முன்னேற்றத்தை பெற இவரே காரணம். சிங்கப்பூர் முன்னேற தமிழர்கள் கடுமையாக உழைத்தனர். அதனால் தமிழை ஆட்சி மொழிகளில் ஒன்றாக கொண்டுவந்தார்.
31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். 1991ல் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 2015ல் நிமோனியா நோயால் மார்ச் 23 ல் காலமானார். அதுவும் சிங்கப்பூர் அரசு பொது மருத்துவ மனையில்.
லீ குவான் யூ நம் தலைவரை போல எளிமையானவர். உழைப்பாளி.
சிங்கப்பூர் மாரியதையை போல் நம் தமிழகமும்
சிறந்ததாக மாறும். அதற்கு நம் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் தலைமையிலான ஆட்சியே தேவை. இங்குள்ள கட்சிகள் சம்பாதிக்கவே ஆட்சிக்கு வர துடிக்கின்றனர். இந்த நிலை மாற தலைவர் வழி ஆட்சியே சிறந்தது.
ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம்...
இப்போ இல்லனா .. எப்போவும் இல்ல ...
- கோபிநாதன்
You can follow @gopiyojivizi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: