#Demand Creation - Demandனா என்னன்னு என்னோட முதல் திரட்ல சொல்லிருப்பேன். அதோட அடுத்த கலை தான் இந்த Demand creation. உங்களுக்கு என்ன வேணும்னு தெரிஞ்சு தான் நீங்க எல்லா பொருளையும் வாங்குறிங்களா?. இந்த கேள்விய நீங்களே ஒரு 2 தடவை கேட்டு யோசிச்சு பாருங்க.
சம்பந்தமே இல்லாம சில பல ஆயிரங்கள ஜாஸ்த்தியா போட்டு பொருள வாங்குவோம். அதுக்கு காரணம் என்ன? அது எப்படி உங்கள வாங்க வைக்கறாங்க. அதுக்காக யூஸ் பண்ற மெத்தேட் தான் இந்த Demand creation அதாவது ஒரு பொருள வாங்குறதுக்கான ஏக்கத்த உங்கக்கிட்ட கிரியேட் பண்ணி இல்ல அதுக்கான காரணத்த உருவாக்கி
அதோட விலைய கூட்டி விக்கிறது தான் இந்த Demand creationல முக்கியமான விஷயம். வெங்காயம் விலை உயர்ந்தது வெங்காயம் பதுக்கல் கண்டுபிடிப்பு இப்படி நிறைய Demand creation நாம டெய்லி பாக்குறோம். ஆனா இது எல்லாம் அத்தியாவசிய பொருட்கள், இதுல அதிக நாட்கள் அந்த டிமான்ட்ட கிரியேட் பண்ண முடியாது
ஆனா நீங்க வாங்குற மத்த பொருட்கள்ள இதை உருவாக்க முடியும். அது எப்படின்னா நம்ம சூர்ய வம்சம் சின்ராசு கதைக்கு போவோம். அந்த பஸ்ஸ அவர் வாங்கி ஒட்ட ஆரம்பிச்ச உடனே. அதுல ஒரு லேடி கண்டக்டர் அப்பாயின்ட் பண்ணுவாங்க. அது தான் அந்த டிமான்ட் கிரியேஷன்.
உடனே அந்த பஸ் ஏற எவ்வளவு Crowd வந்துச்சு. 3₹ டிக்கெட்ட 30₹ கொடுத்து கூட வாங்க ரெடியா இருந்தாங்க. ஒரு வேலை சின்ராசு அதை தடுத்து நிறுத்தாம இருந்தா அதே Crowd அப்படியே continue ஆகும்னு நினைக்கிறிங்களா. கண்டிப்பா இல்ல. தர்மலிங்கம் அதை விட நல்ல ஃபிகரா இறக்கி இருப்பாரு.
அதுனால தான் சின்ராசு உடனே அடுத்த ஜடியாவ இறக்குனாப்ல அதாவது டிவி பார்த்து கொண்டே பஸ்ல பயணம். அப்புறம் தினம் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு குடம் இப்படி‌. இதுனால என்ன ஆச்சுன்னு அடுத்த அடுத்த அப்டேட்ஸ உடனே தர்மலிங்கத்தால கொடுக்க முடியல அதுனால சின்ராஸோட Bus கம்பெனி வளர்ச்சி அடைஞ்சது‌
அதாவது Steve Jobs சொல்றாப்ல "A lot of times, People don't know what they want until you show it to them" ன்னு அதாவது நீங்க அவங்களுக்கான சாப்பாடு ருசிய ஒரு தடவை காட்டிட்டிங்கன்னா அது அவங்களுக்கு பிடிச்சி போச்சுன்னா அவங்க அதுக்கு எவ்வளவு வேணும்னா செலவு பண்ணி திரும்ப வாங்குவாங்க
இதை அழகா உபயோக படுத்துனது நம்ம ஆப்பிள் கம்பெனிக்காரன். Productம் Service ம் அவ்வளவு நல்லா கொடுத்துட்டு நம்ம கிட்ட இருந்து அதுக்கான பிரிமியம் காச வாங்கிட்டே இருக்கான். இன்னொரு சிம்பிள் Example சொல்றேன். எத்தனை பேர் Netflix one month free Subscription யூஸ் பண்ணிருப்பிங்க
அந்த free subscription தான் அந்த Demand creation. அதாவது நீங்க ஒரு மாசம் யூஸ் பண்ணிட்டு அடுத்த மாசம் கேன்சல் பண்ணாம என்னோடத திரும்ப ரிச்சார்ஜ் பண்ணி பாப்பிங்கன்னு Confidentஆ பண்ணா பாருங்க. நீங்க ஒரு மாசம் free versionல என்ன பண்ணுவிங்க. புது மூவிஸ் புது சீரிஸ் பார்த்து பழகிடுவோம்
அதுக்கப்புறம் அந்த பழக்கத்தை விடமுடியாம நாம் திரும்ப ரீசார்ஜ் பண்ணுவோம்‌ அவன் எவ்வளவு காசு சொன்னாலும். அப்படி கிரியேட் பண்ற இந்த டிமான்ட் பேர் தான் டிமாண்ட் கிரியேஷன்‌. இது மாதிரி நிறைய வித்தைங்க இருக்கு. REFEREL BONUS, 50% OFF இது எல்லாமே அதுல தான் சேரும்.
இதுல முதல் விஷயமா அவங்க சொல்றதே. Give something away தான். அதாவது உங்களுக்கு தேவையான விஷயத்தை உருவாக்கி அதை உங்கக்கிட்ட இருந்து தள்ளி வைக்கிறது. அதாவது கல்யாணம் பண்ணி வச்ச வருஷத்தில ஆடி மாசம் பொண்டாட்டிய அம்மா வீட்டுக்கு அனுப்புறது மாதிரி. நமக்கோ அவங்க கண்டிப்பா தேவை.
ஆனா அவங்கள கொண்டு போய் அங்க வச்சிட்டா என்ன பண்ணுவோம்‌ எப்படியாவது வீட்டுக்கு கூப்பிட்டுவர படாத பாடு படுவோமே அதுதான். Free 1 இயர் cloud subscriptionன்னு
ஜ phoneல சொல்லுவான் நான் ஒரு வருஷம் கழிச்சு எடுத்த போட்டோ எல்லாம் பாக்க அவனுக்கு காசு தரனும் அவ்வளவு தான்.
நீங்க கேட்ட காச கொடுத்திட்டு இப்போ உங்க பொண்டாட்டிய கூப்பிட்டு போவிங்கள்ள அப்படித்தான் இந்த விஷயம் நடக்குது. கண்டிப்பா நாம முதல் வருஷம் தான் பொண்டாட்டி திரும்பி வர எல்லா வேலையும்,அடுத்த வருஷம் அவ அங்கையே இருக்கட்டும் விட்டுட்டுவோம்.அதுக்கு தான் சின்ராஸ் மாதிரி உடனே அடுத்த அப்டேட்
நம்ம வாழ்க்கையில வரும். அதான் மச்சினச்சு லீவுக்கு ஊருக்கு வரது. இப்படி அப்போ அப்போ கிடைக்கிற சின்ன சந்தோஷத்துக்காக பொண்டாட்டிய கூடவே வச்சிக்கிற மாதிரி. நமக்கு அவங்க அவங்க அப்போ அப்போ கொடுக்குற மொபைல் அப்டேட் அப்புறம் ஆஃபருக்காக.
அவன் கிரியேட் பண்ண டிமாண்ட் வாழ்க்கையில சிக்கி சின்னா பின்னமாயிட்டு இருக்கோம். இப்படி ஒரு டிமாண்ட்ட கிரியேட் பண்ண தான் எல்லா கம்பெனியும் முயற்சி பண்ணுது. அதுக்கான விளம்பரங்கள தான் ஒவ்வொரு நாளும் டிவில பாக்குறோம். Freedom mobile 251 இது தான் இந்த டிமாண்ட் மெத்தேட் யூஸ் பண்ணி
நம்மள எல்லாரையும் பெரிய லெவல்ல முட்டாளுக்குன விஷயம் இந்தியாவிலையே. இதுக்கு அவன் என்ன என்ன விஷயம் பண்ணிருக்கான்னு சொல்றேன். அவன் முதல்ல இந்தியா ஒட கார்ப்பரேட் கவர்னர்ஸ நல்லா தெரிஞ்சிக்கிட்டான். அதுக்கப்புறம் மக்கள் கிட்ட இருந்து காசு பார்க்கிறதுக்கான வழி.
அடுத்தது அதையும் பெருஷா பண்ணாம ஒரு அளவோட டிமாண்ட கிரியேட் பண்றது. அடுத்தது அதுக்கு அட்வர்டைஸ் பண்ண கவர்மென்ட்ட யூஸ் பண்ணது. அதாவது மோடிஜி மேக் இன் இந்தியா திட்டம். இல்லாட்டினா Manufacturing companyயே இல்லாத ஒரு கம்பெனி 251₹ மொபைல் கொடுக்கப்போறோம் அதுவும் இந்தியால Manufacturing
பண்ணப்போறோம்னு சொல்லி அதையும் நம்பி காச இழப்போமா. இதுல முக்கியமான விஷயம் எல்லாரும் ஆளுக்கு 4 ஆர்டர் பண்ணது. நம்ம வீட்டுல இருக்குறது 2 பேரு எதுக்கு 4.
2போனா 2 இருக்கட்டும்னு தான். கடைசியில மொத்தமா நாளும் போச்சு. இப்படி ஒரு கண்மூடித்தனமான டிமாண்ட்ட உருவாக்கி காசு பாத்துட்டு
போயிட்டான். என்ன பொருத்த வரைக்கும் கேட்டா இப்படி ஒரு விஷயம் நடக்குறப்ப அதை சரியா கவர்மென்ட் தான் கணிக்கல. அட்லிஸ்ட் இந்த மீடியாவாது ஏதாவது பண்ணிருக்கனும். அதுவும் இங்க செத்து போச்சு‌‌. சரி அது நமக்கு தேவையில்லாத பேச்சு. இந்த டிமாண்ட் வச்சி தான் பிஸ்னஸ்ல எல்லாமே
டிமாண்ட்ட எப்படி மெயின்டெயின் பண்ண போறிங்கன்றது‌ அதை விட முக்கியம். அது தான் ஒரு பிஸ்னஸை வழி நடத்தி கொண்டு போகும். ஒரு வேலை நான் தப்பா ஏதாவது சொல்லி இருந்தா சொல்லுங்க கத்துக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு என்றும் கடமை பட்டுள்ளேன். @girinath_2
You can follow @Karthicktamil86.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: