#வந்தாரை_வாழவைக்கும்_தமிழகம்😊
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும்,
ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.!

அப்போ அதைபத்தி இங்க இருந்தா யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄
அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.!

நம்ம மக்களோட
🔥நேர்மை,
🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல்
🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது,
அப்புறம் முக்கியமா,
🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄
இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..!
நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..!

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக
"யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி
அங்குள்ள அவங்க மக்களிடம் எடுத்து சொல்லுறாங்க. இது நல்லாவே வசதியா கை கொடுத்ததுன்னே சொல்லலாம்.!

இதனால தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் பல குடும்பங்களாக பெருகியது.! தமிழகத்திலுள்ள குக்கிராமங்களில் கூட ஒரு அடகுக்கடை அவர்களால் திறக்க முடிந்தது.!
இதோட அடுத்த கட்டம், குஜராத் மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்தும் அந்த மக்கள் வர ஆரம்பித்தார்கள்.!

சின்னதா அடகு கடை மட்டும் நடத்திட்டு இருந்தவங்க.,
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சின்னச்சின்ன தொழில் நிறுவனங்களுக்கு, அப்புறம் சில்லரை வணிகத்திற்கு என கடன் வழங்க ஆரம்பிச்சாங்க.!
"வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" வழக்கம்போல இவர்களையும் வாழவைத்தது..!
அதுவும் சிறப்பாகவும் அமோகமாகவும்..!

இதனால பல தமிழக கிராமங்களில் ஊருக்குள்ள ஒரு அடகு கடையும் அதை ஒட்டிய மாதிரியே சின்னதா ஒரு ஜவுளி கடையும் ன்னு சின்னதா கிளை பரப்ப ஆரம்பிச்சு இருந்தாங்க..!
'குறிப்பாக கடன் வாங்குவதற்கு அடுத்தன் கிட்ட போய் கை கட்டி நிற்பதற்கு பதிலா, வீட்ல இருக்கிற பெரிய பாத்திரங்கள், சின்ன நகைகள்
இப்படி ஏதாவது ஒன்றை கொண்டுபோய்க் கொடுத்து, பேப்பர்ல ஒரு நாலு கையெழுத்து போட்டா போதும் மிக எளிதாக பணம் கிடைச்சுடும்.'
என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாங்க.!😊
இன்னொன்னு,
காந்திஜீ சொன்ன
" வாடிக்கையாளரே நமது தெய்வம்" என்பதற்கு ஏற்ப அவங்க கடன் வாங்க வர்றவங்களை நல்ல முறையில் நடத்தினார்கள்..! அப்புறம்

'நம்மில்,
நிம்மள்,
நான் சொல்லுது,
தர்றான்,
ஆவறது இல்லே'

இப்படியே இவங்க பேசுன தமிழும்.
இதைக்கேட்டு நம்ம மக்கள் அப்படியே பூளாங்கிதம்,
அடைஞ்சு,நீட்டின பேப்பருல எல்லாம் கையெழுத்து போட்டு காசை மட்டும் வாங்கிட்டு வந்தாங்க.!

பண்டிகை காலங்களில் எல்லாம், கைல காசு இல்லைன்னா,
வீடுகளில் இருந்த பெரியசெப்புப் பாத்திரங்களான அண்டா குடம், மோதிரம் இதெல்லாமே அவங்கிட்ட அடகுக்கு போகும்.அந்த காசுல பக்கத்திலேயே அவங்க சின்னதா,
திறந்து வச்சிருக்கிற ஜவுளிக்கடையில் அப்படியே புது துணிமணிகளையும் எடுத்துட்டு வந்துருவாங்க..!

" இது நல்ல பிசினஸ் மாடலாக இருக்குல்ல..!" @Karthicktamil86

இந்த பிசினஸ் வெற்றியடைய இவங்க பின்பற்றக்கூடிய ஒரே விஷயம்
"யாருக்கும் அடமானம் இல்லாம கடன் குடுக்க கூடாது என்பது தான்..!"
உதாரணமாக
ஒரு புது பித்தளை குடத்தோட மார்க்கெட் ரேட் 200 ன்னா (அப்போ அந்த ரேட்டு தான்) இவங்க பழசுங்கறதுனால 50-60% ரேட் பிக்ஸ் பண்ணுவாங்க. அதாவது 100-120 க்குள்ள. அதுல பாதி தான் கடன் குடுப்பாங்க.(55 - 60) ரொம்ப பேசி வச்சு கேட்டுப்பார்த்தா ஒரு எக்ஸ்ட்ரா 5% தருவாங்க.! (55+2.25 - 60+3)
இதுக்கு மேல ஒரு இம்மி பைசா கூட நாம் எதிர்பார்க்க முடியாது..!
இதுல அடுத்தடுத்து ஒரு மூணு மாசம் நம்மளால வட்டி கட்ட முடியலன்ன, பெருசா எல்லாம் நம்ம கிட்ட வந்து சண்டை போட மாட்டாங்க. அவங்க எப்பவுமே நல்லா தமிழ் , ஹிந்தி பேசத் தெரிஞ்ச ஒரு பையன வேலைக்கு வச்சிருப்பாங்க.
அவன் வட்டி கட்டாத ஒவ்வொரு மாசமும் வந்து ஒரு பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு போயிடுவான்.
நமக்குத்தான் மானம் பெருசாச்சே..!
வட்டி கேட்டு தெரு வாசல்ல நின்னுகிட்டே அசிங்கமாக கத்துற கடன்காரங்க மத்தியில இது எவ்வளவோ தேவலை என்னு நம்மளும் கையெழுத்து போட்டு கொடுத்திருப்போம்..!🙄
அவ்வளவு தான். மூணு மாசம் வட்டி கட்டலன்னா நாலாவது மாசம் அந்த அடமானம் வச்ச பொருள் அங்களுக்கு சொந்தமாகிவிடும்..!
இப்படி அவங்க கொஞ்சம் கொஞ்சமா உழைச்சு சம்பாதிச்சு சேர்த்த சொத்து ரொம்ப பெருசு.!
இப்படியே படிப்படியா டெவலப் ஆகி பிறகு அவங்க பெரிய நிறுவனங்கள் திரைப் படங்கள்
என அவங்க பைனான்ஸ் பண்ற சர்க்கிள் ரொம்ப பெருசாக்கி கிடுச்சு..! இன்னைக்கு தமிழ்நாட்டுல நிறைய நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள்,
முதலீட்டாளர்கள்,
தொழில் பண்றவங்கன்னு நிறைய பேர் அவங்க கிட்ட தான் கடன் வாங்கி இருக்காங்க.! நிறைய நிறுவனங்களில் அவங்க சைலன்ட் பார்ட்னர் ஆகவும் இருக்காங்க..!🙄
இதுல ஒரு விஷயம் என்னன்னா, நிறைய தமிழ் படங்களில்,
🔥இவங்கள ஒரு அப்பாவி மாதிரியும்,
🔥தமிழ் சரியா பேச வராத மாதிரியும்,
🔥 மத்தவங்க இவங்க கிட்ட போலியான நகைகளை அடகு வச்சுட்டு ஏமாத்துற மாதிரியும்,
🔥கடனுக்கான வட்டி கேட்டு வர்ற இவங்கள கலாய்க்கிற மாதிரியும்,
🔥காமெடி பண்ற மாதிரியும்,
இது மாதிரியான காட்சிப்படுத்துதல் எல்லாம் இவங்க பைனான்ஸ் பண்ற படங்கள்ல திட்டமிட்டே புகுத்தப்பட்டிருக்கும்..!

உண்மை இதற்கு நேர் மாறானது😂 இவங்களுக்கு நல்லா தமிழ் தெரியும், எழுதவும் பேசுவும்,
நல்ல விபரமானவங்க,
அவ்வளவு சாமானியமா எல்லாம் ஏமாற்றவும் முடியாது..!🤔
இன்றைக்கு அதிகப்படியான தங்கநகை கடன் வழங்கும் நிறுவனங்கள் (Gold Loan Companies)உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.!
இதுக்கெல்லாம் விதை இவங்க போட்டது தான்.
எல்லாம் சரி,யார் இவங்க.!😊

நன்றி மக்களே.!
🙏🙏🙏

@sArAvAnA_15 @teakkadai1
@gcybertron @aram_Gj @Ganesh_Twitz
@Narayanramsubbu
You can follow @theroyalindian.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: