எந்த பிரச்சனைக்கும் ரஜினி குரல் கொடுக்க மாட்டார்,தாமதமாகவே கொடுப்பார் என பொய் பிம்பம் உருவாக்கி அரசியல் செய்யும் கூட்டம் உண்டு.பிரச்சனை அறியாது கருத்து சொல்பவர்கள் மத்தியில்,பிரச்சனையின் தீவிரம் அறிந்து மக்களுக்கான கருத்தை சொல்லும் ரஜினியின் குரல் எப்படிப்பட்டது?ஓர் பார்வை(1/n)
காவிரி பிரச்சனையில்,அன்று பதவியில் இருந்த தலைவர்களை நோக்கி,"தேர்தலுக்காக ஆட்டம் போடாதீங்க" என காரசாரமாக ரஜினி கூறியது தைரியத்தின் உச்சக்கட்டம்.தமிழன் போர்வையில்,இருநாக்கு கொண்டு பேசுபவர்கள் மத்தியில்,"சுயநலமின்றி சத்தியம் பேசுங்க" என மக்களின் ஆதங்கம் ரஜினியின் குரலாக ஒலித்தது(2/n
சுயநல உள்நோக்கத்துடன், காவிரி பிரச்சனையில், ஆர்ப்பாட்ட முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில், கர்நாடகாவில் வாழும் 40 லட்சம் தமிழ் மக்கள் பற்றி கவலை கொண்டு, அமைதியான முறையில் உண்ணாவிரதம் என தனித்து நின்றார் ரஜினி. அன்று தமிழ்நாடு அரசியல் களமே ஆட்டம் கண்டது என்பது வரலாறு (3/n)
பல பேர் தங்கள் அரசியலுக்காக,காவிரி பிரச்சனையை இரையாக்கிய கட்டத்தில், "நதிநீர் இணைப்பு திட்டம்" மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார் ரஜினி.அதற்காக,"1 கோடி கொடுக்க தயார்,நம்ம கிட்ட விடுங்க,நாம பார்த்துக்குவோம்" என மக்களுக்காக ரஜினி பேசியது நெத்தியடி(4/n)
இலங்கை தமிழர் பிரச்சனையில், கேவலமாக அரசியல் செய்து, தமிழன் போர்வையில் ஒளிந்து தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த பிரயோஜனமும் இல்லாத கூட்டத்திற்கிடையே, "ஏழை, பெண்களை துன்புறுத்தும் நாடு உருப்படாது" என உணர்வுபூர்வமாக கருத்து கூறி, அதோடு10 லட்சம் கொடுப்பதாக அறிவித்தார் ரஜினி (5/n)
தூத்துக்குடி பிரச்சனையில்,மக்களின் புனித போராட்டத்தை விஷ கிருமிகள் புகுந்து கெடுத்து விட்டதாக தனித்துநின்று உரக்க கூறினார் ரஜினி.அன்று சொன்ன ரஜினியின் கருத்தை திரித்து அரசியல் செய்தவர்களுக்கு கிடைத்த பதிலடி"அன்றே சொன்ன ரஜினி".உண்மை ஒரு நாள் வெல்லும் என்ற கூற்று நிதர்சனமானது.(6/n)
இஸ்லாமியர்களுக்கு CAA அச்சுறுத்தல் என சுயநல அரசியல் செய்து, திசை திருப்பி, பீதி கிளப்பிய அரசியல்வாதிகளிடையே, CAAவால் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என விளக்கம் கொடுத்து,அவர்களுக்கு ஏதாவது என்றால்,ரஜினிகாந்த் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என தைரியம் கொடுத்தார் ரஜினி.(7/n)
சாத்தான்குளம் கொலை,கந்தசஷ்டி அவமதிப்பு,கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பு என அனைத்து பிரச்சனைகளுக்கும்,பிரச்சனை ஆழமறிந்து கருத்து சொல்பவர் ரஜினி. அரசியலுக்காக போலி ஆறுதல் கூறுபவர்களிடையே, ரஜினியின் உண்மையான வார்த்தைகள் என்றுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருந்ததே நிதர்சனம்.(8)
மக்கள் பிரச்சனைகளை கொண்டு அரசியல் செய்யும் களத்தில்,அப்பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வர நினைப்பவர் ரஜினி.

தீமைக்கு தீ வைக்க வருகிறது ஆன்மீக அரசியல்.

தலைவா @rajinikanth உன்னத மனிதனான உங்களை பற்றி பேச,கண்களால் காண,பாக்கியம் பெற்றுள்ளது எங்கள் பிறவி.என்றும் தொடரும். (9/n)
You can follow @Vrisha18.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: