ஜென்ம ஜன்மாந்தரங்களாக நாம் சேர்த்துக் கொள்ளும் கர்மா சஞ்சித கர்மா. இது பெரிய மூட்டை. பலப்பல ஜன்மாக்கள்ள நாம சேத்துண்ட சஞ்சித கர்மாலேர்ந்து ஒரு பிடியை இந்த பிறப்புல கொண்டு வந்து, நாயா நரியா புழுவா மனுஷனா ஏதோ ஒண்ணா பிறந்து, சுகத்தையும் துக்கத்தையும் மாறி மாறி அனுபவிக்கறோம். இந்த
ஒரு கைப்பிடி கர்மாவை தான் பிராரப்த கர்மா என்கிறோம் (அப்பப்போ ‘எல்லாம் என் ப்ராரப்தம்’ அப்படீங்கறோமே. அது இது தான்). அப்பிடி கர்ம மூட்டையோட வந்து சம்சார சாகரத்துல விழுந்த பின்னாடியும், மாயையினால் கண்கள் மறைக்கப்பட்டு, இந்த ஜன்மாவுலயும் நாம பண்ற சுகர்மாக்களும் துஷ்கர்மாக்களும் தான்
ஆகாம்ய கர்மா.
https://annaiyogacenter.wordpress.com/2018/10/14/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/">https://annaiyogacenter.wordpress.com/2018/10/1...
பரந்யாசம் பண்ணிக்காதவா பிராரப்த கர்மாவை அந்தந்த பிறவியிலும், மீதி இருக்கற சஞ்சித கர்மாவை மேலும் பலப்பல பிறவிகளிலும் பிறந்து அனுபவிச்சு கழிச்சு தான் ஆகணும். இன்னும் எவ்ளோ சஞ்சித கர்மாவை சேர்த்து வச்சிண்டிருக்கோம்னு தெரியாது ஏன்னா நமக்கு பூர்வ ஜென்ம வாசனை கிடையாது. மாயைல
சூழப்பட்ருக்கோம். கொண்டு வந்திருக்க பிராரப்த கர்மாவை கழிக்கறதுக்கே இந்த ஜன்மாவில் எவ்ளோ ஆயுசு மீதி இருக்குன்னு தெரியல.
சரணாகதின்னு அவன் திருவடிகள்ல ஆசார்ய முகேன பிரபத்தி பண்ணிக்கறப்போ, நம்மளோட ஆசார்யன் பெருமாள் திருவடிகள்ல பாபிகளாகிய நம்மளுக்காக போராடி சரணாகதியை நமக்கு அனுக்கிரஹம் ஆகப் பண்றார். அப்படி பரந்யாசம் பண்ணிண்டாவாளுக்கு ஆசார்யன் க்ருபையினால (recommendation) பெருமாள் சஞ்சித கர்மாங்கற
பெரிய கர்ம மூட்டையை இல்லாம பண்ணிடறார். பிராரப்த கர்மாவையும் ஆகாம்ய கர்மாவையும் இந்த ஜந்மாலேயே அனுபவிச்சு கழிச்சுட்டு தான் கெளம்பனும்.
நம்மளோட துஷ்கர்மா (பாவங்கள்) எல்லாத்தயும் நாமளே தான் அனுபவிச்சு கழிக்கணும். ஆனா பாக்கி இருக்கற நம்மளோட சுகர்மாவை (புண்யங்கள்), நம்மளோட அந்திம காலத்துல பெருமாள் நம்மளோட பந்துக்களுக்கு பிரிச்சுக் குடுத்துடறார். (அப்பப்போ “ஏதோ… எங்க பெரியவா பண்ணின புண்யம் காப்பாத்தித்து”
அப்படீங்கறோமே. அது இது தான்) அவ்ளோ கருணை அந்தப் பரமனுக்கு. எப்படியாவது நாமோ கரை சேரணும்னு.
நம்ம ஸம்ப்ரதாயத்துல பித்ருக்களுக்கு தர்ப்பணங்கள் ஸ்ரார்தங்கள்னு விடாமல் பண்ணனும்னு ஏற்பட்டிருக்கு. அப்பிடின்னா நம்மளோட அந்திம காலத்துக்கு அப்புறமும் வேற ஒரு லோகத்துக்கு நாம போய் சேர போறோம்கறது திண்ணம் (life after death). மனுஷாளாகிய நாமெல்லாம் எவ்ளோ ஒரு ஸ்திரம் இல்லாத நிலைமைல
இருக்கோம். நாம அசக்த்தர்கள் அப்படிங்கறது எவ்ளோ மெய்யான ஒண்ணு.
மனுஷாளாகிய நாமெல்லாம் அசக்த்தர்கள்னு தெரியறது. சஞ்சித கர்மா பிராரப்த கர்மாக்களை ஒண்ணும் பண்ண முடியாது. அனுபவிச்சு கழிச்சு தான் ஆகணும்னு தெரியறது. ஒரே ஒரு விஷயம் பெருமாள் சங்கல்பமிருந்தால், ஆசார்யன் அனுகிரஹமிருந்தால் இந்த ஜன்மால நடக்கும். இந்த ஜன்மால நாம பண்ற ஆகாம்ய கர்மாக்கள்
சுகர்மாக்களா இருக்க மாதிரி ஆ்சார்யனும் பெருமாளும் அனுக்கிரஹம் பண்ணினாள்னா நாம கரை சேருவோம். திரும்பி இங்க வர மாட்டோம். ஆசார்யன் திருவடிகளை கெட்டிமா பிடிச்சிக்கறது தான் இதுக்கு ஒரே வழி. ஆசார்யன் பெருமாளை அடையறதுக்கு வழி காட்றார். பெருமாள் ஆசார்யன் அனுக்கிரஹம் கெடைக்கறதுக்கு
அனுக்கிரஹம் பண்றார்.
ஆசார்யன் திருவடிகளை சதா ஸ்மரனை பண்ணிண்டே இருக்குறப்போ, பெருமாள் திருவடிகளே கதின்னு இருக்குறப்போ, சுகர்மாக்கள் ஜாஸ்தி ஆறது. மத்தவாள ஏமாத்தாம, பிறர் செல்வத்துக்கு ஆசைப்படாம, பிற ஜீவ ராசிகளை துன்புறுத்தாம, சத்தான விஷயங்களையே சிந்தனை பண்ணிண்டு சுகர்மாக்களை சேத்துக்க பெருமாளும்
ஆசார்யனும் வழி பண்றா. துஷ்கர்மாக்களை தானே நாமளே அனுபவிச்சுக் கழிக்கணும்? சுகர்மாக்கள் ஜாஸ்த்தி ஆறப்போ நம்முளுக்கு பின்னால இருக்கறவாளுக்கு போய் சேர்றது. இது நடக்கறது பெருமாளாலயும் ஆசார்யன் அனுகிரஹத்துனாலயும் மட்டும் தான்.
கஷ்டங்களை எனக்கு நெறய குடு. அப்போ தான் நான் உன்னையே நினைச்சுண்டிருப்பேன் அப்பிடின்னு சொன்ன குந்தியைப் போல, நம்மளோட துஷ்கர்மாக்களை அனுபவிக்கறப்போவும் அவனையே நினைச்சிண்டிருந்தோம்னா, அவனால எப்படி நம்மள விட்டுட முடியும்? இந்த த்ருடமான நம்பிக்கையை தான் சரணாகதிங்கறோம். “
மாம் ஏகம் சரணம் வ்ரஜ” அப்படின்னு கீதைல அவனோட திருவாக்குப்படி அவன் ஒருவனையே சரணடைஞ்சுட்டோம்னா, அவன் நம்ம கூடவே இருந்ததுண்டு, நாமோ கரை சேர வழி பண்றான்.
ந்ருஸிம்ஹா… ந்ருஸிம்ஹா… இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாகும் ந்ருஸிம்ஹா. உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன்
ந்ருஸிம்ஹா… ந்ருஸிம்ஹா… இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாகும் ந்ருஸிம்ஹா. உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன்
சரணாகதோஸ்மி. காப்பாத்து.
Courtesy – Nrusimham group in FB
Courtesy – Nrusimham group in FB