பத்தாம் வகுப்பு வரை நான் வகுப்பில் எப்பொழுதும் முதலிரண்டு ரேங்குகளில் இருக்கும் மாணவனாகவே இருந்தேன். பெரும்பாலும் மதிப்பெண்கள் 90க்கு மேல் இருக்கும், ஆக 35க்கு கீழ் எடுத்து தோல்வி என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது.
பதினொன்றாம் வகுப்பில் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபரில் சென்று சேர்த்தேன். பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை பதினொன்றிலேயே நடத்தும் வழக்கம் எல்லாம் அப்பொழுது இல்லை.

இந்தியா டுடே, திருச்சி மாவட்ட மத்திய நூலகம், பள்ளி விடுதியின் மதில் சுவரில் உள்ள துளையின் வழியாக வெளியில் உள்ள
இரவு நேர பரோட்டாக் கடைகளில் பரோட்டா வாங்கித்திண்பது, சுவரேறிக் குதித்து மாரிஸ் தியேட்டரில் படம் பார்ப்பது என்று பதினொன்றாம் வகுப்பு முழுவதுமே ஜாலியாக சென்றது.

பலரும் மருத்துவப்படிப்பிற்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பன்னிரண்டாம் வகுப்பை மிகவும்
சீரியசாகவே எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தோம், முதலிடைத்தேர்வு ஜூலை இறுதியில் வந்தது.

விடைத்தாள் கொடுத்த போது, இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என்று அனைத்திலும் முதல்மதிப்பெண் எடுத்திருந்தேன்.
தமிழில் ஞாபகம் இல்லலை, கிட்டத்தட்ட பன்னிரண்டாம் வகுப்பில் நடக்கும் முதல்
தேர்வில் முதல் ரேங்க் எடுப்பேன் என்கிற நிலைமை. ஆசிரியர்களும் அப்பொழுதுதான் கவனிக்க ஆரம்பிப்பார்கள்.

ஆங்கில ஆசிரியர் பேப்பர் கொடுத்தார், இடைத்தேர்வு என்பதால் 100 மதிப்பெண்கள்தான்.

எனக்கு ஆங்கிலத்தில் 34 1/2 மதிப்பெண்கள் போட்டிருந்தார்.
முதல் முறை ஒரு தேர்வில் தோல்வி என்கிற அதிர்ச்சி என்பது ஒரு புறம், அடுத்து முதல் ரேங்க் எடுத்த மாணவரை விட மொத்த மதிப்பெண்களில் நான் அதிகம் எடுத்திருந்தும் தோல்வியுற்ற மாணவன் என்கிற அதிர்ச்சி.

அடுத்தது அந்த விடுதியில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்களை வார்டன்கள் அடிப்பதற்கு
கிடைக்கும் ஒரே சந்தர்ப்பம் ரேங்க் கார்டில் கையெழுத்திடும்போது தோல்வியுற்றிருந்தால் அடிப்பார்கள். நமக்கு எங்கே இதெல்லாம் நடக்கப் போகிறது என்று அவர்களை எப்பொழுதும் திமுருடனே அனுகியதால் அவர்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

ஆங்கில ஆசிரியரிடம் சென்று எவ்வளவோ முறையிட்டேன்.
சார் நீங்க இந்த அரை மதிப்பெண்கள் போட்டால் நான் முதல் ரேங்க் மாணவன் என்று. நான் அதுவரை சந்தித்த ஆசிரியர்கள் யாராக இருந்திருந்தாலும் இவ்வளவு கண்டிப்புடன் இருந்திருக்க மாட்டார்கள்.

கடைசிவரை அவர் அந்த அரை மதிப்பெண்ணை கொடுக்கவேயில்லை.
வாழ்க்கையில் முதல் முறை ஒரு பாடத்தில் தோல்வி. என்னை நம்பிக்கையிழக்க வைத்த செயல்.

கிருஷ்ணமாச்சாரி என்ற அந்த ஆங்கில ஆசிரியர், TN சேஷனைப் போலவே மிக நேர்மையானவர் என்று சொன்னார்கள்.நானும் நம்பினேன்.
You can follow @karthickmr.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: